<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/9439067?origin\x3dhttp://halwacity.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

ஒசாமா - ஆப்கானிதானிலிருந்து ஒரு திரைப்படம்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
வாரயிறுதி நெருங்கி கொண்டிருக்கையில் சில படங்களை பொறுக்கிக் கொண்டிருந்தேன். தற்செயலாக கையில் எடுத்த படங்களைப் பார்த்த போது குழந்தைளை சுற்றி வரும் படமாக அமைந்து விட்டது.

1. ஒசாமா - ஆப்கானிய திரைப்படம்
2. கன்னத்தில் முத்தமிட்டால்
3. தி கப் (The cup)- திபெத்திய திரைப்படம்

நியூஜெர்சியில் இருந்த போது 'கன்னத்தில் முத்தமிட்டால்' படம் பார்க்க ஆவல் கொண்டு வாடகை வீடியோ கேசட்டில் புள்ளியாக உருவங்களை மட்டும் பார்த்து வெறுத்துப் போய் பாதியில் மறந்து விட்டேன். இப்போது டிவிடியில் பார்க்கும் வாய்ப்பு கிட்டினாலும் வாரயிறுதிக்கு அதை தள்ளி விட்டுவிட்டேன். இருந்தாலும் 'ஒரு தெய்வம் தந்த பூவே' பாடலை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் பதிவாகியிருக்கும் காட்சிகள் மீண்டும் மீண்டும் புல்லரிக்க வைத்தது. அந்தப் படத்தை ரசித்துப் பார்க்க வேண்டுமென முடிவெடுத்து வாரயிறுதிக்கு இப்பவே சீட் போட்டாச்சி.

உடனே என்னை பார்க்க தூண்டிய படம் 'ஒசாமா'.

ஒசாமா :-

ஒசாமா முழுக்க முழுக்க ஆப்கானிஸ்தானில் தாலிபானுக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட ஒரே ஆப்கானிய படம். சித்திக் பார்மாக்கினால்(Siddiq Barmak) எழுதி இயக்கப் பட்ட படம். படம் ஆரம்பம் முதல் என்னுடைய ப்ளட் பிரஷர் எகிறி எகிறி தாங்க முடியாத தலைவலியுடன் வேதனை நிறைந்த மனதுடன் முடிந்தப் படம்.

"I cannot forget
But I can forgive"

என்ற நெல்சன் மண்டேலாவின் பொன்மொழியுடன் ஆரம்பிக்கும் இந்தப் படம் 12 வயது ஒரு பெண் பிள்ளையை சுற்றி வரும் கதை.

ஆப்கானிஸ்தனில் தாலிபான் ஆட்சியில் பெண்கள் எப்படி அடக்கி ஒடுக்கப் பட்டிருந்தனர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டும் படம். கணவனையும், அண்ணனையும் இழந்து தன் தாயுடனும், தன் 12 வயது மகளுடனும் வாழும் ஒரு பெண். அவள் வேலைச் செய்த ஆஸ்பத்திரி மூடப்பட்டதும், தாலிபான் பெண்களை நடத்தும் காட்சியை நேரில் பார்த்து மிரண்டு போயிருக்கும் 12 வய்து மகளுடன் செய்வதறியாது தவித்து நிற்கிறாள். தக்க லீகள்(Legal) ஆண் துணையில்லாமல் பெண்கள் வெளியில் செல்லக் கூடாதென அடக்கி வைத்திருக்கும் தாலிபானை எதிர்த்து எங்கேயும் வேலைக்கும் போக முடியாது. வயதான தன் தாயின் அறிவுரைப் பேரில் தன் 12 வயது மகளை தலை முடியை வெட்டி உருவத்தை மாற்றி ஒசாமா என்ற ஆண் பிள்ளையாக சித்தரித்து வேலைக்கு அனுப்ப முனைகிறாள். ஆணாக உருவம் தரித்தாலும் பெண்மையும் குழந்தைத்தனமும் மாறாமல் வளைய வரும் அந்த சிறுமியின் முகபாவங்கள் என் மனதை மிக நோகச் செய்தது. ஒரு கட்டத்தில் ஊரிலுள்ள ஆண்பிள்ளைகளை எல்லாம் திரட்டி தாலிபான் மதச் சட்டத்தை சொல்லிக் கொடுக்கவும், பின்லேடன் படையில் பயிற்ச்சி அளிக்கவும் இழுத்து செல்லப்படுகிறார்கள். அதில் ஆணாகியிருக்கும் இந்த பெண் பிள்ளையும் அடக்கம்.

மதகுருமார்களாக காட்டிக் கொள்ளும் சில தாலிபான்களின் அருவருத்தக்க செய்கைகள் எந்த நேரத்திலும் அந்த பெண்ணை காட்டிக் கொடுத்துவிடும் போன்ற காட்சிகள் மனதை கனமாக்கும். கூட இருக்கும் ஆண்பிள்ளைகள் அந்த சிறுமியின் செய்கைகள் பெண் பிள்ளைத்தனமாக இருக்கிறதென்று செய்யும் கிண்டல்கள், அவள் தவிக்கும் தவிப்பு... சொல்ல வார்த்தையில்லை.

எதோ ஒரு தவறுக்காக அந்த ஆண் வேசம் புனைந்த சிறுமி மோசமான தண்டைனைக்கு உள்ளாக அந்த சமயத்தில் அவள் வயதுக்கு வர, தலிபானுக்கு பெண் என்ற உண்மை தெரிகிறது.

மக்கள் முன் ஒரு வயதான தாலிபான் வாயில் வந்த தண்டனைகளை குற்றம் செய்தவர்களாக தாலிபானால் கருதப்படுபவர்களுக்கு தரப்படுகிறது. வரிசையாக மரணதன்டனை அளிக்கும் குற்றவாளில் இந்த பெண்ணும் நிறுத்தப்படுகிறாள். உயிர்பயத்தில் வரும் அந்தச் சிறுமியை தலிபான் கிழடு மன்னித்து ஒரு குடு குடு கிழவனை மணமுடித்து வைக்கின்றனர். சிறுமியை கூட்டி செல்லும் அவன் சிறை போன்ற வீட்டில் பல மனைவிகளுடன் சிறைவைக்கப்பட்டு, மனைவியாக வாழ்கிறாள்.

தாலிபான் கொடுமைகளைக் கேட்டும், போட்டோ ஸ்டில்களாக பார்த்தும் வராத மிகப்பெரிய அதிர்ச்சி, இந்த படத்தின் மூலம் வருகிறது. மதத்தின் பெயரால் தடம் புரண்டுப் போன தாலிபன் கயவாளிகளால் ஆப்கானிஸ்தான் மக்கள் அனுபவத்தது கொஞ்ச நஞ்சமல்ல. படம் பார்த்து சோகத்துடன் தூங்கப் போகிறேன்.

AFCAE Award,CANNES Junior award,Golden camera-special motion(CANNES FILM FESTIVAL), Golden Globe USA(Best foreign film), London Film festival(Sutherland trophy),Montreal world film festival canada 2003 Best film போன்ற அவார்டுகளை வென்றுள்ளது இந்தப் படம். பாஸ்து(Pashtu) மொழியில் இருக்கும் இந்தப் படத்தை ஆங்கில சப்டைட்டிலுடன் வாய்ப்புகிடைக்கும் போது தவறாமல் பாருங்கள்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
I have seen Osama. Intha padam patriyum, Afgan patri vantha padangal patriyum Uyirmmaiyim Yamuna Rajendran Ezuthi irukiraar. Thanks and regards, PK Sivakumar
 
விஜய், இதைப் போன்ற பாஸ்து மொழியில் எடுக்கப்பட்ட இன்னொரு படம் மைக்கேல் விண்டர்பாட்டமின் "In This world" பார்க்கும்போதே பதற வைக்கும் படமது. என் பதிவில் போடுகிறேன். "காந்தஹார்" மிஸ் பண்ணி விடாதிர்கள்.
தவிர நீங்கள் பார்த்த ஒசாமாவின் இயக்குநரின் மகள் சமீரா மெக்முல்ப். இரானின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். அவரின் "At Five in the afternoon" கிடைத்தால் பாருங்கள், மிக அருமையான படம். இங்கே இந்தியாவில் கிடைக்கவில்லை, ஆனாலும் விமர்சனங்களைப் படித்துத் தெரிந்துக் கொண்டேன்.
 
The Cup - திபெத்தியப் படம்தானே அது? பௌத்தமடத்தின் இளந்துறவிகள் கால்பந்து உலகக்கோப்பையைப் பார்ப்பது?...
 
கதையைக் கேட்டதிலேயே சற்று அதிர்ச்சியாகத்தான் உள்ளது. திரைப்பட அறிமுகத்திற்கு நன்றி!
 
பின்னூட்டம் இட்ட இடப்போகும் அனைவருக்கும் நன்றி.

பி.கே.எஸ், எனக்கு பரவலாக வாசிக்கும் திறனில்லாததால் இந்த படத்தைப் பற்றி அவ்வளவாக கேள்விப் படவில்லை. கட்டாயம் யமுனா ராஜேந்திரன் புத்தகத்தையும் படிக்க விழைகிறேன். புத்தகம் பெயர் என்ன,எந்த பதிப்பகம் என்று சொன்னால் நலம்.

நாராயாண்! நீங்க சொன்னப் படங்களை தேடிப் பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி.

மாண்ட்ரீஸர்! தி கப் நீங்கள் சொல்லும் அதே படம் தான். "Buddhism is a Philosophy, soccer is a religion"
 
I saw this movie just recently and therefore is still fresh in my memory. While it captures one of the greatest human tragedies of recent times, I have difficulty accepting it as good cinema. Western film festivals lapped it up as it was one of the first films to come out in the post-taliban Afghanistan, and it exposes Taliban brutality towards women -- an issue the West has flogged to death. Apart from the newness of the setting, and the shock value of the subject matter, there is, I feel, very little about this movie to write home about.
-- Sunil K
 
அன்புள்ள சுனில் நீங்கள் சொல்லவந்தது புரிகிறது. நல்ல சினிமாக்குரிய லட்சணங்களைப் புரிந்துக் கொள்ளும் முயற்ச்சியில் இருப்பதால் அந்தப் படத்தின் பின்னுள்ள அரசியல் எனக்கு விளங்கவில்லை/முயற்ச்சிக்கவில்லை.எனினும் எடுத்துக் கொண்ட கதைக் கரு கொஞ்சம் மனதை ஆட்டி தான் பார்த்தது. மேலும் அந்த இயக்குனரைப் பற்றி அதிகம் எனக்கு தெரியததால் என்னிடமிருந்து No Comments.
 
Vijay, Yamuna Rajendran's essay about movies on Afganisthan came in Uyirmmai monthly in 2 issues. Please check September and October 2004 Issues. I hope my memory is correct. Thanks and regards, PK Sivakumar
 
(P)ம்மல் K (S)ம்பந்தம்,

தகவலுக்கு நன்றி. தேடிப் பார்க்கிறேன். நேற்று எனக்கு யமுனா ராஜேந்திரன் எழுதிய "ஆப்பிரிக்கா சினிமா" கிடைத்தது. படித்துக் கொண்டிருக்கிறேன். அவர் எழுத்து படிப்பது இதுவே முதல் தடவை.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->