<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://draft.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

பஞ்சி மெத்தை வச்சிருக்கேன் மாமா

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
தொடர்ந்து என் பதிவுகளில் நாராசமான வரிகளை கொண்டு வரும் திரைப்பாடல்களை ஸ்பாட்லைட் அடுத்து காட்டி வருகிறேன். "ஏன் அந்த காலத்து பாட்டுகளில் அந்த மாதிரி வரிகளை கொண்டு வரவில்லையா?" என்று கேட்பதும் நியாயம் தான். அந்த காலத்திலிருந்தே அந்த மாதிரி பாடல்கள் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஆடிக்கு ஒன்னும் அமாவாசைக்கும் ஒன்றாக வந்துக் கொண்டிருந்த அசிங்கம் புடிச்ச பாடல்கள் தற்போது எல்லா படத்துக்கு படம் தலைவரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.

இது உண்மையிலேயே ஒரு சமூக பிரச்சனையா? பெண்களை கொடுமைப்படுத்துதல், சாதீய பிரச்சனைகள், வறுமை பிரச்சனைகள் இப்படி எத்தனையோ பிரச்சனைகள். அவற்றுக்கு முன் இந்த பிரச்சனை தூசிக்கு தான் சமானம். வளர்ந்து வாழ்ந்து கெட்டவர்களுக்கு இவைப் பற்றி அக்கரையோ இல்ல சக்கரையோ இல்லாமல் இருக்கலாம். என் பார்வையில் சிறார்கள் ஆனாலும் சரி, பதின்ம வயதிலிருக்கும் ரோமியோ ஜூலியட்களுக்கும் சரி இந்த மாதிரி பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் சமூக பார்வையில் ஏற்றும் விஷம்.

டிவியில் ஒரு டெலிபோன் நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியை வழிநடத்துபவர் போனில் ஒரு சிறுவனிடம் பேசிக் கொண்டிருக்கிறார். "சரி விக்னேஷ், ஒரு பாட்டு பாடேன்" என்று கேட்கிறார் அறிவிப்பாளர். உடனே விக்னேஷ் பாடுகிறான் "நாட்டு சரக்கு நச்சுன்னு தான் இருக்கு, தங்க குடமே மலையாள படமே என்ன சைசு இது அய்யோ...". அறிவிப்பாளர் முதல் எல்லாரும் சங்கடத்தில் நெளிவது தெரிகிறது.

கதையம்சத்திலும், விஷூவலி டிஸ்டர்ப்டாக வரும் சினிமாக்களில் ஆபாசம் இருந்தால் கொடித்தூக்கும் பெண் என்ற இனமே ஆபாசப் பாடல்களை டிவியில் தன் விருப்பப்பாடலாக கேட்கும் போது எங்கே போய் முட்டிக் கொள்வது எனத் தெரியவில்லை. காட்சி வழியாக கண்களை உறுத்தும் காட்சிகள் கொடுக்கும் பின் விளைவுகளை விட பாடல்களாக ஆபாசம் வரும் போது கொடுக்கும் பின் விளைவுகள் மிகக் குறைவு. இதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஏனென்றால் இசை என்ற பூச்சால் ஆபாசம் பாடல்களில் பூசி மெழுகப்படுகிறது.

பெண்களை போகப் பொருளாக பார்க்கதீர்கள் என்று கூவும் பெண்ணியமாந்தர்களின் காதுகளுக்கு பெண்ணே பாடல் வழியாக தன்னை கூவி விற்பது போல் வரும் கேவலத்தை விட்டுக் கொண்டிருப்பதால் இந்த மாதிரி பாடல் எழுதுபவர்களுக்கு கொண்டாட்டம் தான். இந்த மாதிரி பாடல்கள் எப்.எம் ரேடியோ வழியாகவும், டிவி வழியாகவும் ஒரு நாளைக்கு குறைந்தது 10 முறையாவது ஒளி ஒலிப்பரப்பாகிக் கொண்டிருக்கிறது. அர்த்தம் தேடி ஓவ்வொருவரும் அலைந்தால் பெண்ணியமாந்தர்கள் கூறும் அதே குற்றச்சாட்டு காலகாலத்துக்கு தாண்டவமாடிக் கொண்டுதானிருக்கும்.

அண்மையில் வந்த 'சுக்கிரன்' படத்திலிருந்து ஒரு பாடல் இங்கே... அதிகம் டிவியோ ரேடியோ நான் கேட்பது இல்லையென்றாலும் இந்த பாடல் கவனத்தில் வந்தது. எப்படியென்றால், லிட்டில் இந்தியா ஆடியோ கடைகளில் இந்தப்பாடல்கள் இசையுடன் விற்பனையும் கலக்கிக் கொண்டிருந்தது. சுக்கிரன் சினிமாப் பாடல் கழிவு இங்கே....

பெண் : பஞ்சி மெத்தை வச்சிருக்கேன் பார்த்துக்க மாமா
பத்த வச்சா பத்திக்கிடும் வச்சிக்க மாமா

ஆண் : காத்தடிச்சி தாவணி தான் தூக்குது பாமா
கண்ணு ரெண்டும் கூசுது காப்பாத்து ராமா

குழு : செய்யாலே செய்யாலே இந்த இந்த இந்த இந்தா
வரே வரே வரே.......

ஆண் : மாராப்பா இருக்கட்டுமா மானே! ஏன் மாந்தோப்புக்கும்
காவல் நானே! பாய் நீட்டி படுக்கட்டுமா தேனே!
ஓன் மேல சாஞ்சே

பெண் : வெள்ளாமை நடத்திக்கட ராசா
என் காட்டுக்கு வேலி நீயே
என் மேலே உரசிக்கட லேசா
நான் காஞ்சிப் போனேன்

ஆண் : பஞ்சி மிட்டாயே பொட்டிக் கடை பஞ்சி மிட்டாயே
சேலைக்குள்ளே வைத்துப்புட்டாயே தூக்கத்தை நீ கொன்னு புட்டாயே

பெண் : பூட்டி வச்சாயே கட்டெறும்ப பூட்டி வச்சாயே குத்த வச்சி பாக்க வச்சாயே
கைய கால வேர்க்க வச்சாயே

ஆண் : ஏன் ஆசை தீரலேயே ரோசா ராவானாலே ஏறுது லேசா
எங்கூரு சந்தையிலே சீசா ஒன்னோட சைசா

பெண் : தேக்கால செதுக்கி வச்ச மேனி என் ராசாவே ஓன் மேனியைய்யா
நீ பார்த்தாலே கொதிக்குதுதடா தண்ணி அட என் கூட சேர்ந்து

ஆண் : டெண்ட் கொட்டா(கை)யே அஞ்சரை அடி டெண்ட் கொட்டாயே
கண்ணுக்குள்ளே சீட்டு போட்டாயே நெஞ்சிக்குள்ளே பூட்டி வச்சாயே

பெண் : தூக்கி வச்சாயே முத்தங்களை மாத்தி வச்சாயே வெட்கங்களை பூட்டி வச்சாயே

மன்மதன் படத்தில் ஏமாற்றும் பெண்களை கடத்திக் கொண்டு போய் கொல்கிறான் என்பதை நாமெல்லாம் (என்னையும் சேர்த்து தான்) வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு குஷ்தி கோதாவில் இறங்கினோம். இப்படியே எல்லா பாடல்களுக்கும் வலைப்பதிவுகள் குஷ்தி கோதாவில் இறங்கினால் வலைபதிவுகள் எல்லாம் WWF-ஆக மாறி விடும். நீங்க சொல்றது நியாயம் தானுங்கோ. குறைந்தது இந்த மாதிரி பாடல் எழுதுகிறவன் கட்டைவிரலையாவது வெட்ட வேண்டும் என்பது என் ஆசை.

அப்ப இதுக்கெல்லாம் எங்கே முடிவு?. இராமதாசு அய்யாவை தான் கேட்கனுமோ? அவரு இப்ப தானே பட டைட்டில்ல ஆரம்பிச்சிருக்காரு.

சினிமாவில் நல்ல பாடல்களே இல்லையா? இருக்கே, சந்திரவதனா சினிமா பாடல் பதிவைப் போய் பாருங்க.....

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
அதுகென்ன விஜய் நான் ரெடி சிங்கப்பூரிலிருந்து ஆரம்பிப்போமா?
 
நானும் ரெடி ஈழநாதன். அகில உலக கட்டிங் சங்கம் சிங்கப்பூர் தலைமையகமா வச்சி ஆரம்பிச்சிரலாம்.
 
எய்தவன் இருக்க அம்பை ஏன் விஜய் நோகறீங்க? இருக்கற பாடலாசிரியர் கும்பல்ல சான்சு கெடைக்கறதே பெரும்பாடு.. இதுல டைரக்டரும் தயாரிப்பாளரும் கேக்கறத குடுக்காம அவர்களாள என்ன செய்ய முடியும்? நல்ல நிலமைல இருக்கற கவிஞர்களே இதை செய்யும் போது புதுசா சான்சு கெடச்சாபோதும்னு எழுதவரவங்கள என்ன சொல்லமுடியும்?

வேனா மக்கள் விரும்பினதைத்தான் குடுக்கறோம்னு சாக்கு சொல்லற பெரிய டைரடக்கருங்க கிட்ட இருந்து நம்ம Bobitting வேலய ஆரம்பிக்கலாம்...

ஆமா... வூட்டுகாரம்ம ஊருல இல்லாதப்ப இப்படி மேட்டர் பாட்டா அனலைசு பண்ணறீங்களே.. என்னா மேட்டரு?
 
ஹிஹி.. கட்டை வெரலதான் வெட்ட சொன்னீங்களா? சரியா படிக்காம நான் bobitting nu எழுதிட்டேன்..sorry
 
விஜய் நான் ஏன் சிங்கப்பூரிலிருந்து ஆரம்பிப்பொம் என்று சொன்னேனென்றால்.பெரிய பாடலாசிரியர் பட்டாளம் ஒன்று சிங்கை வருகிறது.சினேகன்,பா.விஜய் உள்ளடங்க.ஆளாளுக்கு ஒரு கட்டைவிரலை வெட்டாலாம். சரியா
 
அடடா, துரோணாசிரியர்கள் இருக்குமிடம் நோக்கி பாடலாசிரியர்கள் போகிறார்களே. எல்லா பாடலாசிரியர்களும் இனி ஏகலைவர்கள் தானா ? ;-)
 
//வலைப்பதிவுகள் குஷ்தி கோதாவில் இறங்கினால் வலைபதிவுகள் எல்லாம் WWF-ஆக மாறி விடும்//

:-) :-)
 
This comment has been removed by a blog administrator.
 
அஹா... அறுப்பதற்கு நிறைய பேர் ரெடியா இருக்காங்களே...

ஈழநாதன், பாட்டு கும்பல் சிங்கப்பூர் வருவதை அறிவேன். அதுல வேற டிஸ்கஷனும் பண்ண போறாங்களாம். என்ன டிஸ்கஷனோ.. என்ன பாடல்களோ....

இளவஞ்சி, டைரக்டரும் தயாரிப்பாளரும் கேட்டாலும் வார்த்தை கட்டுப்பாடு நம்ம பாடலாசிரியரிடன் தானே இருக்க வேண்டும். சும்மா பேட்டை ராப் மாதிரி பாட்டில், மாஞ்சா என்று எழுதினாலும் மன்னித்துவிடலாம் போல... இப்படி பாட்டு எழுது என்ன கிடைக்கப் போகிறதோ. இசை டாமினேட் பண்ணும் போது கொஞ்சம் நல்ல வார்த்தைகளை தான் போட்டால் என்ன?

//ஆமா... வூட்டுகாரம்ம ஊருல இல்லாதப்ப இப்படி மேட்டர் பாட்டா அனலைசு பண்ணறீங்களே.. என்னா மேட்டரு? //

ஹலோ ஹலோ இளவஞ்சி... குடும்பத்துல குழப்பத்தை உண்டுபண்ணிராதீங்க தலீவா. 'நீங்க என்னத்த எழுதி கிழிக்கிறீங்கன்னு, நானும் பார்க்கனும்'என்று சொல்லிவிட்டு வீட்டில் வலையிணைப்பை பெறுவதற்கு ஜரூராக வேலை நடக்கிறது. இந்த நேரத்தில இப்படியெல்லாம்.... ஹி ஹி...

சம்மி, டைரக்டரு விரல அறுத்து என்ன ஆகப் போகிறது. அவர்களுடைய நாக்கையும் சேர்த்து அறுக்க வேண்டும்.

நரேன், சூப்பர் எக்ஸாம்பிளை எடுத்து விட்டுட்டீங்க தலீவா...

ஆக மொத்தம் 'அறுத்து அறுத்து' என்று இந்த பதிவே கசாப்புக் கடை மாதிரி ஆகிவிட்டது. நேற்றே பின்னூட்டம் விட வேண்டுமென நினைத்திருந்தேன். சரி நந்தா படம் போடுகிறார்களே என்று லேட்டாக டி.வி போட்டால் ஒரு பெண்ணை கற்பழித்ததற்காக அந்த வில்லனின் **** யை சூர்யா அறுத்துக் கொண்டிருந்தார். காலக் கொடுமையடா... ஒரே அறுப்பு ஞாயிறு ஆகிவிட்டது நேற்று.
 
நல்ல பாடல்கள், காலங்கடந்தும் தம்மை நிலைநிறுத்திக் கொள்ளும் விஜய்... இந்த "டண்டனக்க" பாடல்கள் ரெண்டு மூணு மாசத்தில் தங்களுக்கென்று இயற்கை கொடுக்கும் சவக்கிடங்கில் போய் படுத்துக்கொள்ளும்...

ஒரு சில பாடலாசிரியர்களைத்தவிர மற்றவர்கள் சமூகப் பொறுப்போடு பட்டெழுதுவதாகவே படுகிறது... கெட்ட பாடல்களைத் திட்டும் நாம், நல்ல பாடல்கள் வரும்போது அதை சுட்டுவதும் அவசியம்... 7G ரெயின்போ காலணி படத்தில் வரும் " கண் பேசும் வார்த்தைகள் " என்ற பாடலில் அப்படிகே ஆளை உருக்கிப் போட்டுவிடும் வரிகளைப் பார்த்தேன்....

எல்லாம் சரி.... வசூல்ராஜா MBBS படத்தில் "சிரிச்சு சிரிச்சு வந்தான் சினா தானா டோய் " என்ற பாட்டும், " காடு திறந்து கிடக்கின்றது" என்று இன்னொரு பாட்டும் வரும்... இதில் " என்ற " பாட்டை விட "இன்னொரு" பாட்டை அதிகமுறை கேட்டவர்கள் கை தூக்குங்க... அட என்னங்க..ஒரு கையக் கூடக் காணோம் ? : )))))
 
"டாய்! கையை வச்சிக்கினு சும்மா இருடா!"

ஆமாம்.... இப்படி உங்க கையை அசிங்கப் பாடல்களை எழுதவே செலவழிச்சிட்டிருந்தா, இப்படிப்பட்ட பாட்டைத்தான் நானும் பாடுவேன். எதோ 'ஹல்வா'சிடியில் கமகமன்னு ஹல்வா சாப்பிடலாம்னு வந்தா, வாயருகில் ஹல்வா வைத்து, பிறகு ப்ரஷ்ஷில் சாக்கடைச் சேற்றை அள்ளி ஹல்வா மேல் முழுவதும் பூசிக் கொடுத்தால் என்ன அர்த்தம்?

ஹல்வாசிடி ப்லாக் விசிட் செஞ்சாலே, என் இன்டெர்னெட் எஃஸ்ப்லோரெர் 'டடங்க்' என்ற ஸ்பீக்கர் சௌண்ட்-உடன், 'குமட்டுகிறது. இது ஒரு மாதிரி சைட் என்று நினைக்கிறேன். மேலே தொடர்வது உங்கள் இஷ்டம்' என்ற ஒரு மெஸ்சேஜ் பாஃஸ்-ஐ அவசர அவசரமாக வீசுகிறது.

அது சரி! கோவிச்சுக்காதீங்க. சும்மா செல்லமாதான் 'டாய்'-னு சொல்லி கொஞ்சம் சூடா திட்டினேன். அதர்வைஸ், சூபரா போட்டுத் தாக்குறீங்க! வாழ்த்துக்கள். நல்லா தாக்குங்க. ஆனால், அதே சமயம் நல்ல விஷயங்களையும் நிறைய எழுதுங்கள். மஹேந்திரன் மேட்டர் ரொம்ப இன்ஃபர்மேடிவ். வாயடைத்துப் போனேன் எல்லா விஷயங்களையும் படித்து. அது போல் பல விஷயங்களை சொல்லலாம். ஹல்வாசிடி உண்மையிலேயே ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. ஒரு நாளைக்கு 5 தடவையாவது விசிட் செய்து பார்ப்பது. பத்து நாட்களாக கொஞ்சமே மேட்டர் இருந்ததால் வருத்தம்தான். ஆனால், நிலைமை புரிகிறது. 'நேரம்' என்பது கிடைப்பதற்கறிய பொருளாய் போய் விட்டது. அப்படி இருந்தும் பல விஷயங்களில் விவரமாக எழுதி அசத்துகிறீர்கள். ரொம்ப கண் விழிக்காதீங்க. உடம்புக்கு நல்லதில்லை.

இது தான் என் முதல் ப்ளாக் கமெண்ட். அட! என்னப் பத்தி ஒண்ணுமே சொல்லலையா? அதற்கென்ன? சொல்லிட்டாப் போச்சு. கீழே பாருங்க!

- ஆத்மன் (எங்கும் நிறைந்தவன்)
 
திருநெல்வேலி டு சிங்கப்பூர் வந்தாலும் இவனுங்களுக்கு வெட்ர, குத்ர காலாச்சாரம் மட்டும் போகாது போல.
ஜால்ரா பசங்கலா! மட்டமா பாட்டு எழுதிர கவிஞர் சினிமா வந்தா பாக்காதிங்க.
அது எப்படி முடியும்? நீங்கதான் அப்பன் பேர விட்டுபுட்டு நடிகனுங்க பேர இனிஷியலா போட்டுக்கிர நாயிங்களாச்சே. வந்துட்டானுங்க மடப் பசங்க, குமுடிசட்டிங்க.
 
அது சரி அனானிமஸ், அவன் அவன் நடிகர் பெயரை போட்டுக்கிட்டன்ன உனக்கு என்ன ஆச்சி. நேரில வர தைரியமில்லாம இங்க பொறம்போக்க வந்து கமெண்ட் விடுற. உனக்கு உங்கப்பன் எதும் பெயர் வைக்கலையா. கமெண்ட் விடுறதுக்கு முன்னாடி மூளைய கழட்டி வச்சிடுவியோ.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->