<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

விற்காத 'உப்பு'

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
உப்புக்கு பெறாத தமிழ் படங்களினூடே 'உப்பு' கதை களத்தைத் தவிர மற்ற அம்சங்களில் உப்புக்கு பெறாத படமே.

ஆர்.செல்வராஜ் 'அன்னகிளி' முதல் ஈரநிலம் வரை 140 படங்களுக்கு மேல் வசனம் எழுதியிருக்கிறார். கதை திரைக்கதை வசனம் இயக்கம் என 'உப்பு' படத்தை செய்திருக்கிறார் ஆர்.செல்வராஜ். கமர்ஷியல் சினிமாக்களுக்கு இடையில் இன்றைய காலக்கட்டத்தில் யாரும் தொட அஞ்சும் நல்ல கதைக்களத்தை இந்த படத்தில் எடுத்து கையாண்டு இருக்கிறார். இந்த படத்தின் அவருடைய நேர்மையான உழைப்புக்கும் அவருடைய துணிச்சலுக்கும் என்னுடைய பாரட்டுக்கள்.

25 லட்ச ரூபாயில் 9 நாட்களுக்குள் முடிக்கப்பட்ட சின்ன பட்ஜெட் படம் உப்பு. தென்காசி, குற்றாலம் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.



கதைசுருக்கம்:

'உப்பு' சமூகத்தின் அடித்தள மக்களை சுற்றியிருக்கும் பிரச்சனைகளை கொண்டிருக்கும் நல்ல ஒரு கதைத்தளம். எதோ ஒரு ஊரில் வாழும் கழிவறை கழுவும் பெண் தீண்டாமை கொடுமையால் தன் மகள் பென்சிலம்மாவுடன் சென்னையில் உள்ள அவர் தாத்தா ஓப்பையாவை தேடி கிளம்புதாக படம் ஆரம்பிக்கிறது. அந்த பென்சிலம்மா தான் 'உப்பு' என்று பட்டப் பெயருடன் வாழும் ரோஜா. ஓப்பையாவாக கே.ராஜன் நடித்திருக்கிறார். உப்பு ஓப்பையா வீட்டில் வளர்ந்து திருமணமும் செய்துக் கொண்டு வாழ்வதாக அடுத்த காட்சி ஆரம்பிக்கிறது. ரோஜாவின் கணவனாக வேந்தன்(லண்டனில் வாசித்து வருபவராம்) நடித்திருக்கிறார்.

குப்பை அள்ளும், சாக்கடையை தூர்வாறும் வேலையை முற்றிலுமாக வெறுத்து சொந்த தொழில் செய்ய வேண்டும் என்ற வேட்கையோடு வெட்டியாக வலம் வருகிறார் வேந்தன். உப்பு (ரோஜா) தெருவை கூட்டியும், தாத்தா ஓப்பையா சாக்கடை தூர்வாறியும் ஜீவனம் நடத்துகிறார்கள். கணவன் தொழில் தொடங்க தாத்தா உதவியுடன் மீட்டர் வட்டியில் வில்லியிடம் பணம் வாங்க, தொழில் நஷ்டமாகி பணம் கட்டமுடியாமல் தவிக்கின்றனர். தாத்தாவும் சாக்கடை வாறும் போது விஷவாயு தாக்கி இறந்துவிட நஷ்ட ஈடு 1 லட்சம் வாங்கி கடனை அடைக்க அரசாங்க இயந்திரங்களுடன் போராடுகின்றனர். மீட்டர் வட்டி கொடுத்த வில்லி பணத்துக்கு ஈடாக உப்புவை மும்பை ரெட்லைட்டுக்கு விற்க ஏற்பாடு செய்ய, நஷ்ட ஈடு பணத்தை கணவன் அபகரித்து ரோஜாவுக்கு துரோகம் செய்வது மாதிரியும் படம் முடிகிறது.

என் பார்வையில் 'உப்பு'

யாருமே கண்டுக் கொள்ளாத சேரி பகுதி வாழ் மக்களின் வாழ்க்கை கஷ்டங்களை சினிமாக்களும் கண்டுக் கொள்வதில்லை. கதாநாயகன் துதி,மேல்தட்டு மக்களின் வாழ்க்கை முறை,காதல் போன்ற உணர்ச்சி இவைகளை மட்டுமே பெரும்பான்மையாக கொண்டு இயங்கும் சினிமா உலகம் மாற்று பார்வையற்ற குருட்டு உலகம்.இந்த வகையில் ஆர்.செல்வராஜ் துணிந்து ஒரு மாற்றுப் படத்தை தந்திருக்கிறார்.

ஆனால் ரெகுலர் தமிழ் சினிமாவுக்குரிய கதை ஓட்டல் பார்முலாவைக் கொண்டே இயக்கப்பட்டிருக்கிறது. படத்தில் காட்சிகளில் கனம் இல்லாததால் மனதில் முழுவதுமாக ஒட்ட மறுக்கிறது. கூத்து பட்டறை ஆட்கள் என்று டைட்டில் போட்டுவிட்டு அதில் வரும் நடிகர்கள் ஏதோ இயந்திரத் தனமாக உணர்வற்று தான் வசனம் பேசுகிறார்கள். படத்தில் யாதார்த்தம் என்பது முற்றிலும் இல்லவேயில்லை. அடித்தள மக்களின் மனோபவங்களை விளக்க ஒரிரு காட்சிகளே இடம் பெற்றிருப்பது இந்த படத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமை. கதாநாயகி உயிர்களிடத்தில் கொள்ளும் அன்பை விளக்க யதார்த்தை மீறி குயில் முட்டைகளை வயிற்றில் கட்டி கதாநாயகி குஞ்சு பொரிப்பது போன்ற காட்சிகள் படத்தில் உள்ள பெரும் சறுக்கல்கள்.

ரோஜாவை தவிர எல்லோரும் படுசெயற்கையாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை பாரதிராஜாவின் என்னுயிர் தோழனுடன் தான் ஓப்பிட தோனுகிறது. என்னுயிர் தோழனில் பாபுவின் படுயதார்த்தமான நடிப்பு அவரை சுற்றி பின்னப்பட்டிருக்கும் வெயிட்டான காட்சிகளுடன் உப்புவை ஒப்பிட்டால் உப்பு படத்தில் ஒன்றுமில்லை.

அதுவுமில்லாமல் 'நீலகண்ட பறவை'(பறவையின் கழுத்து நீலமாக இருக்குமாம்) என்ற ஒன்றை கதையும் ஓட்டத்துடன் வைத்து கதாநாயகி நீலகண்ட பறவையென்ற ஒன்றை பார்த்தால் தன் கஷ்டமெல்லாம் ஒழிந்து போய்விடும் என்ற நம்பிக்கையில் அவள் இயங்குகிறாள். படத்தின் இறுதியில் வாழ்க்கையில் கஷ்டமென்ற விஷத்தை கழுத்தில் தாங்கி வாழும் இந்திய பெண்கள் எல்லாருமே நீலகண்ட பறவைகளேயென்று பிற்போக்கான கருத்தை வைத்து படத்தை முடிக்கிறார்.

ஆர்.செல்வராஜ் அடிப்படையில் இயக்குனாராக இல்லாதது தான் இந்த மாதிரி பெரும் பிழைக்கு காரணம் என நினைக்கிறேன். இதன் காரணமாகவே உப்பு படம் விற்பனையாகாது.

நல்ல இயக்குனர்கள் இந்த மாதிரி படங்களை எடுத்து பரீட்சித்து பார்க்காதது தமிழ் சினிமாவுக்கு பீடித்த மிகப்பெரிய நோய்.

இருந்தாலும் தமிழ் சினிமாவில் மாற்று முயற்சியை மேற்கொண்ட இந்த மாதிரி படைப்புகளை ஊக்குவிப்பதற்காகவே இந்த படத்தை வரவேற்போம்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
நல்ல review
 
இந்தப்படத்தைப் பற்றியே உங்கள் பதிவின் மூலம்தான் தெரிந்து கொண்டேன். நன்றி!
 
உப்புக்கு சப்பாணின்னு சொல்லுங்க.
 
All is ok Vijay.... But where i can see This Movie ?????????
 
நன்றி நண்பர்களே.

பாலு, படத்தை எங்கு பார்க்கலாமா? அது தான் 'விற்காத உப்பு' ஆயிற்றே
 
பாண்டியன் அண்ணாத்தே, சப்பென்று வரும் இக்கால தமிழ் படத்திற்கும் கொஞ்சம் உப்பு தேவை.மொத்தமாக உப்பை குப்பையில் அள்ளி போட்டு விட முடியாது. தமிழ் திரைதுறையில் கொஞ்சம் உப்பு சேர இந்த உப்பு வழிவகுத்தாலே வெற்றி தான்.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->