<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

ரஷோமான் - குரோசாவின் மாஸ்டர் பீஸ் & கமலின் காப்பி பீஸ்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
அகிரா குரோசாவா ஜப்பானில் மட்டுமல்ல உலகமறிந்த திரைப்பட மாமேதை. போருக்கு பிறகு ஜப்பானிய வாசல் திறந்துக் கொண்ட பிறகு முதன்முதலில் உலகப் பார்வையைப் ஈர்த்தது குரோசாவாவின் 'ரஷோமான்'. 1951-ம் ஆண்டு வெனீஸ் நகரில் திரைப்படவிழாவில் திரையிட்டப் போது Grand Prix பரிசை அள்ளிச் சென்றது இந்தப் படம்.

அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்க்கும் ஆவலில் ஒரு வழியாக சிங்கப்பூர் எஸ்பிளனேட் அரங்கில் உள்ள நூலகத்தில் டிவிடியைப் பிடித்தேன். இமைக்கொட்டாமல் பார்க்க வைத்த அந்தப் படத்தில் சொல்லப்படும் ஒரே கருத்து 'மனிதர்கள் தங்களுக்கு தாங்களே நேர்மையாக இருப்பதில்லை. பொய்பூச்சு இல்லாமல் தங்களைப் பற்றி பேச முடிவதில்லை" என்பது தான்.

படத்தில் மொத்தம் 8 கதாபாத்திரம் மட்டுமே. ஒரு கற்பழிப்பு அதை தொடர்ந்து நடக்கும் கொலை, இந்த நிகழ்ச்சியில் நான்கு பேரின் வாக்குமூலம் என்பதைச் சுற்றி தான் கதை மிக மிக அழுத்தமாக பின்னப்பட்டிருக்கிறது.

11 நூற்றாண்டில் நடப்பதைப் போன்று காட்டப்பட்டுள்ள கதையில் ஒரு இளம் கணவன் தன் இளம் மனைவியுடன் காட்டை கடக்கும் போது, காட்டில் வாழும் ஒரு கொள்ளையனால் அவர்கள் ஏமாற்றப்பட்டு இளம் கணவன் கண் முன்னேயே அவன் மனைவி கற்பழிக்கப்படுகிறாள். பிறகு அந்தக் கணவன் கொள்ளையனால் கொல்லப்படுகிறான். இதைக் காட்டில் மரம் வெட்ட வரும் ஒருவன் மறைந்திருந்துப் பார்க்கிறான். ஆக மொத்தம் இந்த நால்வரின் சாட்சியம் நீதிமன்றத்தின் முன் அவரவரை உயர்த்திக் கொள்ள எப்படி பொய்மை புனைந்துச் சொல்லப்படுகிறது என்பதே கதை. கொலையில் பிடிக்கப்பட்ட கொள்ளையன், கற்பழிக்கப்பட்ட பெண், விறகு வெட்டுபவன்,இறந்தவனின் ஆவி எப்படி தங்களை உயர்த்திக் கொள்ள பொய்மை புனைகிறது என்பதை அழுத்தமான காட்சி, 1950-களில் திரையுலகம் காணாத கேமிரா டெக்னிக், ஒளிப்பதிவு என்ற நிறைய அசாத்தியங்கள் திரையில் மின்னுகின்றன.

கணவன் இளம் மனைவியுடன் கானகத்தில் கடந்து செல்வதும் உண்மை, காட்டுக் கள்வன் அவர் மனைவியை கவர நினைப்பதும் உண்மை, அவளை கவர்ந்ததும் உண்மை, ஆனால் கணவன் கொல்லப்பட்டதை மட்டும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்கிறார்கள்.

காட்டுக் கொள்ளையன் அந்த இளம் மனைவியை அடைந்ததும் அந்த மனைவி தன்னால் இரண்டு கணவர்களுடன் வாழ முடியாது என்பதையும், இரண்டில் ஒருவர் சாக வேண்டுமென சொல்கிறாள். அந்தக் கொள்ளையன் கட்டப்பட்ட கணவனை விடுவித்து வாள் சண்டைக்கு அழைத்து, தன் வீர பராக்கிரமத்தால் அந்த கணவனை கொன்றதாகவும். தானே உண்மை வீரன் எனவும் தன்னை உயர்த்தி அந்த கொள்ளையன் நீதிமன்றத்தில் சொல்கிறான்.

கற்பழிக்கப்பட்ட பெண் சொல்வதோ வேறு விதமாக. அதாவது தன்னை கெடுத்தபின் கொள்ளையன் ஓடி விட்டதாகவும் தன் கணவனை விடுவிக்க சென்ற அவள், அந்தக் கணவன் பார்வையாலே தன்னை கொல்லுவதாக உணர்ந்ததாகவும், அந்த மனப் போரட்டத்தில் கையில் கத்தியுடன் மயங்கி விழும் போது அது அவனை குத்திக் கொன்றிருக்கலாம் எனவும் சாட்சியம் அளிக்கிறாள்.

நீதிமன்றம் இறந்தவனின் ஆவியை மீடியேட்டர்கள் வழியாக அழைத்துப் பேசும் போது இந்த மோசமான பெண்ணுடன் வாழ்வதைக் காட்டிலும் இறப்பதே மேல் என்று தன்னையே குத்திக் கொண்டு தற்கொலைச் செய்துக் கொண்டதாகவும் சொல்கிறது.

ஆனால் விறகு வெட்டியோ நீதிமன்றத்தின் முன் தான் செத்த பிணத்தை மட்டுமே பார்த்ததாக சாட்சி சொல்லிவிட்டு, பிறகு நண்பர்களுடன் இதைப் பற்றி வாக்குவாதம் செய்யும் போது தானே எல்லாம் பார்த்ததாகவும் உண்மையில் கணவன் செத்தது அந்த பெண்ணின் நயவஞ்சகப் பேச்சால் அந்தக் கணவனை கொல்லும் எண்ணமே இல்லாத அவனை மாற்றி அந்தக் கணவனை கொல்கிறாள்.

இதை மொத்தமும் ரஷோமான் என்ற பழைய பாழடைந்த கோட்டையில் மழைக்காக ஒதுங்கும் மூவர்(விறகு வெட்டி உள்பட) பேசிக் கொள்வதாகவும், ஒவ்வொருவரின் பார்வையில் அந்த நிகழ்ச்சி ஃப்ளாஷ் பேக்காக விரிவதாகவும் மிக மிக அழகாக குரோசாவா அருமையாக படைத்திருந்தார். பொய்மையோடு பிறந்திருக்கும் ஒருவன் செத்த பிறகும் தன்னை உயர்த்தி சொல்ல அந்த பொய்மை எப்படியெல்லாம் கையாள்கிறான் என்பதை அருமையாக விளக்கியிருந்தார்.

இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் மியாகவா கசுயோ. அந்தக் காலத்தில் சூரியனை நோக்கி கேமிரா திரும்பியதே இல்லை என்ற கூற்றை உடைத்தவர். சூரியனை நேருக்கு நேராக கேமிராவை திருப்பி இந்தப் படத்தில் ஒளிப்பதிவு செய்திருப்பார். அந்த மரம் வெட்டியின் காட்டுப்பயணம் பலவிதமான கோணங்களில் ஒரே காமிராவை வைத்து எடிட் என்ற விசயம் இல்லாமல் அசத்தியிருப்பது 50-களில் அசாதரண விசயம். கேரக்டர்களின் முக அழுத்தத்தைக் காண்பிக்க முகம் பார்க்கும் கண்ணாடி வைத்து முகத்தில் ஒளிப் பாய்ச்சப்பட்டு அசர வைத்திருப்பது கிராபிக்ஸ் இல்லாத மாயஜாலம். பேயுடன் மீடியேட்டர் பேசும் காட்சிகளில் சுற்றும் காமிரா இயல்பாக நம்மை பயம் தொற்றிக் கொள்ள வைக்கிறது. மிக அருமையான உளவியல் தத்துவத்தை விளக்கும் அசாதாரணப் படம் ரஷோமான்.

அதெல்லாம் சரி ஒரு நிகழ்ச்சி பல பார்வை இதை எங்கேயோ பார்த்த மாதிரி எனக்கு ஒரு உறுத்தல். ஆகா....... விரு விரு மாண்டி விருமாண்டி விரு விரு மாண்டி விருமாண்டி... அழகாக ஒரு கான்சப்டை காப்பி அடித்து வித்தியாசமான கதை என்று பலரின் பாராட்டைப் பெற்று தோல்வியைத் தழுவிய நம்ம விருமாண்டி கமல் தானுங்கோ. அப்படியென்றால் நம்ம கமல் ரஷோமான் பார்த்திருக்கிறாரு.....அதையும் விருமாண்டியிலே சொதப்பியிருக்காரு....

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
The Usual Suspects பார்த்திருக்கிறீர்களா? ரோஷோமோனைத் தழுவி எடுக்கப்பட்ட படங்கள் கணக்கற்றவை. விருமாண்டியில் கமல் ஏதும் அவ்வளவு சொதப்பியதாகத் தெரியவில்லை? அழும் ஸ்டைலைத் தவிர? தமிழ்ப் படங்களில் உத்திரீதியாக வித்தியாசமாக முயன்றால் 'ஒண்ணுமே புரியலை', underlighting உபயோகித்து மணிரத்னம் படம் எடுத்தால் "யார்பா அது, படம் இருட்டா இருக்கு, ஒரு அரிக்கேன் விளக்கைப் பொருத்தித் திரையில் வை" விமர்சனங்களையும் கணக்கில் கொள்ளவேண்டுமென்பதால்......

விருமாண்டியின் ஜெயில் அடிதடி க்ளைமாக்ஸ், ஆலிவர் ஸ்டோனின் Natural Born Killersலிருந்து உருவப்பட்டது என்பது என் அபிப்ராயம் - பார்த்துவிட்டுச் சொல்லவும்.
 
விஜய், கமல் எல்லாம் ரொம்ப லேட்டு. இதேப் படத்தைத்தான் அடிப்படையா வைச்சு, "அந்த நாள்"ன்னு ஒரு படம் எடுத்தாங்க. சிவாஜி, வில்லனா (ஆனடி ஹீரோ?)நடிச்ச ஒரே படமது. தமிழ்ல வந்த முதல், பாடல்கள் இல்லாத படம். அகிரா குரோசாவா ஒரு சகாப்தம், சினிமாவுல. நான் பைத்தியம் புடிச்சா மாதிரி, அவர் படங்களை, கல்லூரி காலத்துல பார்த்துருக்கேன். அவரோட செவன் சமுராய் பாருங்க, இன்னிக்கு பாக்கற 'ரிசர்வாயர் டாக்ஸ்' எல்லாம் ஒண்ணுமே இல்லே. இப்ப நான் பாக்க நினைக்கறது "RAN" அப்ப்டின்ற அகிரா படம்.
 
Ran, ஷேக்ஸ்பியரின் King Learன் தழுவல்...
 
ஆகா! montresor-ம், நரேனும் நல்ல படங்களை எடுத்து சொல்லியிருக்கிறீர்கள் நன்றி. இப்போது தான் வாய்ப்புகள் கிடைத்து உலகச் சினிமாவை பார்க்க துணிந்திருக்கிறேன். அதற்கு அடித்தளம் போட்டது குரோசாவாவின் சுயவரலாற்றுப் புத்தகம். எனக்கு மிக புதிய அனுபவம் மட்டுமல்ல, நிறைய தெரிந்துக் கொள்ளவும் உதவுகிறது. நரேன், ரோஸாவஸந்த், montresor எல்லாம் உலகப்படங்களைப் பற்றி பதிவாக்கும் போது, அதையெல்லாம் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் உள்ளது. நல்ல படங்களை எடுத்துகாட்டியமைக்கு நன்றி.தொடர்ந்து நல்ல உலகப்படங்களை எழுதிவாருங்கள்.
 
விருமாண்டியில் ஜெயில் சண்டை காட்சிகள் Stanley kubrick in SPARTACUS லிருந்து
அப்படியே சுடப்பட்டவை. விருமாண்டியின் கேமராக்கோணங்கள் மற்றும் காட்சி அமைப்புக்கள்
CITY OF GOD படத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. மற்றப்படி rashomon சொல்லப்பட்ட
முறைக்கும் விருமாண்டிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

இந்த தளத்திலிருந்து உலக சினிமாக்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

http://www.bfi.org.uk/sightandsound/topten/index.html
www.filmref.com
www.sensesofcinema.com


ஜபருல்லா
 
அபூர்வ ராகங்கள் ஒரு பிரெஞ்சுப் படத்தின் காப்பி என்றுக் கூறிக் கேட்டிருக்கிறேன். ஆனால் நான் தமிழ்ப் படத்தை பார்த்த உடனேயே எனக்குத் தெரிந்தது இது வேதாளத்தின் 24-வது கதை என்று. இக்கதையின் முடிவில் கேட்கப்பட்டக் கேள்விகளுக்கு விக்கிரமாதித்தியனாலேயே பதிலளிக்க முடியவில்லையாதலால் வேதாளத்தால் திரும்ப முருங்கை மரத்தில் ஏற இயலவில்லை.

நான் கூற வருவது இதுதான். மொத்தம் 7 கதைக் கருக்கள்தான் உள்ளன என்று நான் படித்திருக்கிறேன். மிகைப் படுத்திக் கூறப்பட்டது என்று வைத்துக் கொண்டாலும் அதில் உண்மை இருக்கிறது என்றே கருதுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 
நன்றி ஜாபரூல்லா, டோண்டு ராகவன்.

விருமாண்டி ரஷோமானை அப்படியே தழுவி எடுக்கப்பட்டதென்று சொல்ல வரவில்லை. ரஷோமானை பார்க்கும் போது தமிழில் இதே மாதிரி "ஒரு நிகழ்ச்சி பல கோணம்" என்ற கருத்தை வைத்து எடுக்கப்பட்டதே என்று குழம்பி கொண்டிருக்கும் போதே, சட்டென்று நினைவுக்கு வந்தது விருமாண்டி தான். மற்றப்படி இரண்டிலும் வித்தியாசங்கள் நிறைய. எனக்கென்னமோ அந்த ஜெயில் காட்சிகள் சண்டைகள் எல்லாம் கமல் சொல்ல வந்ததை விட்டு வெகு தூரம் விலகிச் சென்று இடைச்செருகலாக அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தாகவே எனக்கு தோன்றியது, நீங்கள் சொல்லியதை வைத்துப் பார்க்கும் போது தான் நிறையப் படங்களிலிருந்து அந்த காட்சிகளுக்கான கரு சுடப்பட்டிருக்கிறதென தெரிகிறது. நல்ல தொடர்பு சுட்டிகளுக்கு நன்றி ஜாபரூல்லா அய்யா.

டோண்டு அய்யா நானும் கேள்விபட்டிருக்கிறேன் 7 கதைக் கருக்களைப் பற்றி. அதை ஆராய்ந்துப் படிக்க வேண்டுமென்ற ஆவல். இதைப் பற்றி விளக்க நல்ல புத்தகம் அல்லது சுட்டிகள் இருந்தால் பகிர்ந்துக் கொள்ளலாமே.
 
7 கருக்கள் என்பது ரொம்ப குறுகிய வட்டம் என்று தோன்றுகிறது. ஏதொ ஒரு கேம் இனையத்தளத்தில் படித்தது, உலகில் மொத்தம் 36 கதைக்கருக்கள் இருக்கின்றது - say horrer, thriller, romance, violent, drama, comedy, satire, history என்று, எந்த தளம் என ஞாபகமில்லை. விரைவில் பதிகிறேன்.
 
That gaming website is http://www.gamasutra.com In singapore, there are quite a few leading film appreciation organisations are there, i dont have the details right now. They will give you free tickets for best International films.

Add these movie also to your Akira wishlist - Hachi-gatsu no kyôshikyoku (Rhapsody in August), Yume (Dreams), Yojimbo (Bodyguard)

But there are powerful Chinese, Japanese & Korean directors who has taken dizzy heights in the recent years. Chk your DVD shop for directors from these countries. Worth watching.
 
Thanks Narain.Let me try to find out film appreciation club. I wanted to see few korean movies also. I am scared to take korean movies without knowing them. I find lot of horror movies from korea. I went to movie shops afternoon. I found Akira's 'RAN' in VCD.I don't want to see without subtitles. I found few Iranian movies. One of them is 'Osama'. If anybody feels that movie is good, let me know.
 
Vijay,

2002 - la release aana English movie "The tale of David Gale" kkum "Virumandikkum" romba vidiyasam illai Enave Kamal puthisalithanamaga copy adichirukkar....
 
Have you seen "Ju-on(Ring)" a japanese horror movie is a worth watch. Dont' watch that alone. It's scarier to the hell. Spielberg's Dreamworks is producing the sequel of this movie called Ringu, that also is a frightener.

Osama is a good movie. I dint see it, but i read few reviews.
 
Ringu - 'Ring' in English
Ju-On - 'Grudge' in English
 
நன்றி நாராயண்,Monteresor. அந்தப் படங்களையும் டிவிடி ஷாப்பில் பார்த்தேன். சீக்கிரமே கண்டு பயந்துடுவோமே....
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->