<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/9439067?origin\x3dhttp://halwacity.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

30-க்கு மேல்....

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
குங்குமத்தில் சென்ற வார விளம்பரம் "30-க்கு மேல் குழந்தைப் பெறுவது ஆபத்து-டாக்டர்கள் வெளியிடும் அதிர்ச்சி ரிப்போர்ட்" என்று நிமிடத்திற்கு நிமிடம் சன் டிவி விளம்பரத்தில் கூவி கூவி மக்களின் அதிர்ச்சியைக் கூட்டிக் கொண்டிருந்தன. இதில் அதிர்ச்சியடைய என்ன இருக்கிறது,உண்மையைத் தானே கூறுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் சில எண்ணங்கள் பொறித் தட்டின. குங்குமத்தைப் படிக்கவில்லையென்றாலும் என்னச் சொல்லப் போகிறார்கள் என்பதை விவரமாகவே ஊகிக்க முடிந்தது.

முப்பது வயதுக்கு மேல் குழந்தைப் பெறுவது எந்த அளவுக்கு ஆபத்து என்று தெரியவிட்டாலும், கருப்பையில் குழந்தை ஜனிக்க மிகுந்த சிரமம் எடுத்து கொள்ளும் என்பது தெள்ளத் தெளிவு. கஷ்டப்பட்டு ஜனித்தாலும் கருப்பையில் தங்கும் தன்மையின்றி போகின்றன. வயது ஏற ஏற மன்மத குஞ்சுகளும், ரதி தேவிகளும் முதுமையை நோக்கித் தான் பயணம் செய்கிறார்கள். என்றும் மார்கெண்டேயன் என்ற நிலமை விந்தனுக்களுக்கும் இல்லை, பெண்களின் கருமுட்டைகளுக்கும் இல்லை. வயது ஏற ஏற இனப்பெருக்க உற்பத்தி திறனின் தரம் தரம் குறைந்துக் கொண்டே செல்கிறது. இதனால் கரு நிலையாமை நிறைய ஏற்பட வாய்ப்புகள் அதிகம்,

"இதெல்லாம் சும்மா சார். நிறைய பேரு முப்பதுக்கு அப்பறமும் கல்யாணம் கட்டிக்கிட்டு குழந்தைகளோட காலாய்க்கலையா" என்று சொன்னாலும் அதில் அர்த்தம் இருக்குது. யாருக்கு முப்பது என்று பார்க்கவேண்டிய கட்டாயமும் உண்டு. திருமணம் செய்யும் போது ஆண் மட்டும் 30-க்கு மேல இல்லை இருவரும் 30-க்கு மேல என்பதைப் பொருத்து காம்பிளிகேஷன் வர வாய்ப்பு உண்டு. இது எத்தனை பேருக்கு தெரியும். படித்தவர்கள் கூட நம் நாட்டில் இந்த விசயத்தில் ஒன்றும் தெரியாதவர்களாகவே இருக்கின்றனர்.

அரைவேக்காடு பாலியல் உணர்ச்சிகளை தூண்டக் கூடிய படங்களைப் பார்க்கிறவர்களும், மஞ்சள் புத்தகங்களை படிக்கிறர்வர்களுக்கும் உணர்ச்சி ஒன்றே அறிவில் தங்கி நிற்கும். அறிவுப்பூர்வமாக அது எதையும் புகட்டுவதில்லை. அந்த மாதிரி படங்களையும் புத்தகங்களையும் படித்துவிட்டு ஒருவன் ஆயக் கலைகள் அறுபத்து நான்கினையும் கரைத்து குடித்ததுப் போல மார் தட்டிக் கொள்ளும் போது அது ஒரு நல்ல நகைச்சுவை நிகழ்ச்சியாக அமையும்.

நம் நாட்டில் முக்கியமாக செக்ஸ் கல்வி என்றவுடனே எல்லாருக்கும் மனதில் வந்து நிற்பது ஷகிலா படம் தான். ஏதோ கல்லூரியில் செக்ஸ் கல்விக்காக ஷகிலா படத்தையும்,போர்ன் படங்களை போட்டு தான் செக்ஸ் கல்வி சொல்லி கொடுக்க போவதாக கற்பனை செய்துக் கொண்டு வரிந்துக் கட்டிக் கொண்டு வருபவர்களைப் பார்த்தால் "அட முட்டை கோஸ் தலையா! உனக்கு மூளைக்கு பதிலா களிமன்னு தான்டா இருக்கு" என்று சொல்லத் தோன்றும். இந்த மாதிரி பாலியல் உணர்ச்சி குவியல்களாகி மக்கி போவதற்கு ஷகிலா படம் மட்டும் வேண்டுமென்பதில்லை, வீணாகி போன செல்வராகவன் போன்ற டைரக்டர்களும், சிம்பு போன்ற பிஞ்சிலே வெம்பிப் போனா அரைவேக்காடுகளும் போதும். காதல் என்ற பெயரில் அவர்கள் நடத்தும் காமகளியாட்டங்கள் தான் அவர்கள் மொழியில் சினிமா.

பால் உணர்ச்சி என்பது இறைவன் மனிதனுக்கு இயற்கையாக கொடுத்துள்ள உணர்ச்சிகளில் ஒன்று. காதல் என்று ஆரம்பித்து காமம் வரைக் கொண்டு செல்லும் இந்த உணர்ச்சிகள் ஆடு மாடு முதல் கொண்டு எல்லாவற்றுக்கும் உண்டு. ஆடுகளோ மாடுகளோ போர்ன் படங்களை பார்த்து விட்டு இனப்பெருக்கம் பண்ணுவதில்லை. "அது கால்நடை சார். நம்ம மனுசங்க சார்" என்று சொன்னால் "அய்யோ பாவம் உனக்கு இறைவன் கொடுத்த உணர்ச்சியில் எதோ கோளாறு உள்ளது" என்று தான் சொல்லத் தோன்றும்.

செக்ஸ் கல்வி என்பது உணர்வுகளை தூண்டுவது எப்படி என்று சொல்லி தருவதில் இல்லை தம்பி. மனிதனின் இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாடுகள்,பெண்களுக்கு இயற்கைக் கொடுத்திருக்கும் இனபெருக்க சுழற்சி,இறைவனின் திருவிளையாடலான குழந்தை ஜனிப்பு போன்றவற்றை மருத்துவர்கள் மற்றும் அந்த துறை சார்ந்தவர்கள் சொல்லிக் கொடுப்பது தான்பா செக்ஸ் கல்வி.

மாத்ருபூதம் கொஞ்சம் துணிஞ்சி வந்தாரு. அப்பறம் நிறைய பேர் எழுத ஆரம்பித்தார்கள். எழுதுகிறார்கள். குங்குமம் மாதிரி அதிகப்படியாக திகில் ஊட்டும் பத்திரிக்கைகளும் தங்களால் முடிந்தவற்றைச் செய்துக் கொண்டுதானிருக்கின்றன. பரவலாக்கப்பட வேண்டும் செக்ஸ் கல்வி.முக்கியமாக இந்தியாவில்.

இந்த அறிவு குறைவாக இருக்கும் பட்சத்தில் பரம்பரை பரம்பரையாக "ஆண்மை குறைவு-வீரியம் இல்லாமை" வைத்தியர்கள், சேலம் சிவராஜ் வைத்தியசாலையில் வைத்து வைத்தியம் பார்த்துக் கொண்டுதானிருப்பார்கள். சித்த சஞ்சீவி மூலிகை என்பது இப்போதைக்கு செக்ஸ் கல்வி ஒன்றே.

"ஏம்பா உங்க வீட்டுல மட்டும் நிறைய கன்னு குட்டிங்க நிக்குதே எப்படிப்பா?"
"அதுவா அம்மா அப்பா மாடுங்க நிறைய நக்கீரன் புத்தகத்தையும், ஷகிலா போஸ்டரையும் திங்குது"

உண்மை தான் ஒரு வார நக்கீரனில் ஏறக்குறைய 6 "ஆண்மை குறைவு வைத்திய விளம்பரங்கள்". அய்யோ!! அய்யோ!! ஆண்மை குறைவு என்றால் நல்ல டாக்டரிடம் போகவிடாமல் சிட்டுக் குருவி லேகியம் கொடுத்து நம் மக்களை மடையன்களாக்கி வைத்திருப்பதற்கு காரணம் செக்ஸ் பற்றிய அரைகுறை அறிவே.

சிலர் குடும்ப பாரத்தின் காரணமாகவும், சில கடமைகளுக்காவும் லேட்டாக திருமணம் புரிந்துக் கொள்கிறார்கள். அதில் தவறு ஒன்றுமில்லை. லேட்டாக திருமணம் புரிந்து, ஒரு வேளை கருதரிக்க கஷ்டப்பட்டாலும் மருத்துவ விஞ்ஞானம் எங்கோ சென்று விட்ட இந்த காலத்தில் கருத்து தரிக்க வைக்கும் செயற்கை முறைகளில் சாத்திய கூறுகள் மிக மிக அதிகம்.

இதில் துக்கத்திற்கு ஆளாக வேண்டியவர்கள் திருமணம் செய்துக் கொண்டும் வசதியாக கஷ்டமே இல்லாமல் வாழ்பவர்களும் தேவையேயில்லாமல் குழந்தை பாக்கியத்தை தள்ளி போடுபவர்கள் தான். "கொஞ்ச வருஷன் ஜாலியா இருக்கலாம். குழந்தைங்க வந்த நமக்கு அண்டர் ஸ்டான்டிங் வராது. அதுனால குழந்தை இப்போ வேண்டாம்" என்று தள்ளிப் போடுபவர்களே, குழந்தை பெறுவதின் முக்கியத் துவத்தை உணருங்கள். இறைவன் படைப்பு என்ற அற்புதத்தை உங்களிடமும் நிகழ்த்த இறைவனை அனுமதியுங்கள். என்ன மண்ணாங்கட்டி அண்டர்ஸ்டான்டிங் வரப் போகிறதோ உங்களிடம். குழந்தைப் பேறை தள்ளிப் போட மாத்திரைகளை தின்றுவிட்டு குழந்தையே பிறக்காமல் திண்டாடுபவர்களும் உண்டு. வயதாகிறது, அதை மட்டும் நினைவில் நிறுத்துங்கள்.

ஆண்களே 24 & 25-க்கு அப்புறம் உங்களால் குடும்பத்தை நடத்த மனோபலம், பணபலம் இருந்தால் உடனே திருமணம் செய்துக் கொண்டு உடனே பிள்ளை பேறு பெறுங்கள்.

பெண்களே 21-க்கு அப்புறம் திருமணம் செய்துக் கொள்ளும் மனோதிடத்தை வளர்த்து திருமணத்தை வீட்டில் கேட்டு செய்துக் கொள்ளுங்கள்.

அவ்வளவுதாம்பா நான் சொல்லுவேன். சொல்லுறத சொல்லிபுட்டேன்....

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
இது உங்கள் சொந்த கருத்து என்றும் அறிவியல் பின்னணி இல்லை என்றும் முதலில் ஒரு disclaimer போட்டிருக்கலாம்.

ஏனென்றால் உங்கள் பதிவின் சிலவரிகள் குங்குமத்தின் தலைப்பைப்போல அநாவசிய பீதி உண்டாக்குபவையாகவே உள்ளன.
 
கிறுக்கன் அவர்களே, உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. வலைபதிவில் வருவது எல்லாமே சொந்தக் கருத்து தானே. ஆனால் நான் சொல்ல வந்தது அறிவியல் உண்மையில்லை என்று சொன்னால் சொல்லிவிட்டு போங்கள். இதற்காக நான் ஒன்றும் செய்யப்போவதில்லை. பாவம் உங்களுக்கு தான் அறியாமை என நினைத்துக் கொள்வேன்.
 
அறிவியலிலும் மூடநம்பிக்கை உண்டு , சிகரட் பிடிப்பதனால் கேன்சர் வரும் அபாயம் உண்டு,
ஆனால் கேன்சர் வந்தவரெல்லாம் சிகரட் பிடிப்பவர் இல்லை.

எல்லா பெற்றோரும் தனது மகனை,மகளை எவ்வளவு விரைவாகா
திருமணம் செய்து வைக்கத்தான் முயற்ச்சிக்கிறார்கள்,உங்கள் பெற்றோர் உட்பட,
அப்படியிருந்தும் ஏன் திருமணங்கள் ஏன் தள்ளி போகின்றன.
சமூகத்தில் நிழவும் சாதீய சூழ்நிழை ,பொருளாதார ஏற்ற தாழ்வு,ஆணத்திக்க மனப்பான்மை,
பெண் மீது கட்டப்படும் அழகியல்(சுண்டுனா ரத்தம் தெரியணும்) பிம்பம் .... .
சமூக சூழ்நிலை மாறினால் மட்டுமே மாற்றம் ஏற்ப்பட வாய்ப்புக்கள் உண்டு.
திருமணமே செய்ய இயலாத சூழ்நிலை உள்ளவர்க்ள் அதிகம், நீங்கள் கூறும் குழந்தை
பிறப்பதை தள்ளி போடுபவர்கள் மிக மிக குறைவு.

சன் நிறுவனம் போன்று பொறுப்பற்று பரப்பரப்புக்காக சொல்லாமால்,
ஓரு பெற்றோர்,அண்ணன்/அக்கா மனநிலையிலிருந்து ,விஞ்ஞான முறைப்படி
உங்கள் கருத்தை மேலும் விரிவு படுத்தியிலிருந்தால் சொல்ல வந்த கருத்து
பண்பட்டிருக்கும்.


வேணி
 
This comment has been removed by a blog administrator.
 
மெதுவா மெதுவா... ஆணாதிக்கம், அழகியல் அது இதுவென சரவெடிகளை போட்டு தாக்கிவிட்டு சென்றுள்ளர்கள் வேணி அவர்களே. ஆனால் நான் அந்த கோணத்தில் அலசி எழுதவில்லை இந்தப் பதிவை. அறிந்ததை உணர்ந்ததை மேல் போக்காக சொல்ல வந்தேன்.எனினும் நான் சொல்ல வந்தது யாருக்கும் புரியவில்லை என நினைக்கிறேன்(எனக்கு உட்பட...ஹி...ஹி). உங்கள் பார்வையை வெளிப்படுத்தியதற்கு நன்றி. இன்னும் தெளிவாக அழமாக எழுத முயற்சிப்பான் இந்த கத்துக் குட்டி.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->