-ல் போட்டுத் தாக்கியது
அகிரா குரோசவா (உலக திரைப்பட மேதை)
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த வாரம் நீண்ட வாரயிறுதி ஆகையால் நேரம் எப்படி போக்குவதென்று நினைத்துக் கொண்டு வியாழனன்று சிங்கப்பூர் நூலகத்தில் நுழைந்தேன். இளைய பாரதி, மு. நடராஜன் எழுதிய "உலகத் திரைப்பட மேதை குரோசவா" என்ற மொழிபெயர்க்கப்பட்ட சுயவரலாற்று புத்தகம் ஒன்றைப் பார்த்தேன். குரோசவா இறந்ததைப் பற்றி டிவியில் காண்பிக்கக் கண்டதை என் நினைவில் லேசாக நின்றுருந்தது. சரி படிக்கலாம் என்ற ஆவலில் அந்தப் புத்தகத்தை கையில் எடுத்தது மிகப் பெரிய தப்பாகி, அவர் படங்களை எல்லாம் பார்த்து விடுவதென்ற வெறித் தொற்றிக் கொள்ள, நீண்ட வாரயிறுதி சென்றதே தெரியவில்லை. நிறைய படங்களைப் பார்த்தேன். அதில் குரோசவாவின் படங்கள் தான் என்னை அதிகம் தாக்கியது.
குரோஷவாவின்
1. இகிரு (Ikiru) [Ikiru means 'TO LIVE...']
2. ரஷோமான்
3. குரோஷவாவின் கடைசிப் படமான 'மடாடயோ' (Madadyo Means 'Not Yet!')
4. சன்ஜூரோ (Sanjuro)
மற்றும் பிற மொழிப்படங்களான
5. 2002-ல் ஆஸ்கார் வென்ற பிறமொழி ஸ்பானிஷ் படமான "No Man's Landing"
6. சத்தியஜித் ரேயின் 'அபூர் சஞ்சார்'
7. Rasputin (The mad monk)
8. Marlin manroe's Don't Bother to Knock
என் வாழ்க்கையில் பிற மொழிப் படங்களை அதிகம் பார்த்தது இப்போது தானென நினைக்கிறேன். அவற்றில் மனதை மிகவும் கவர்ந்தப் படம் ரஷோமான். உளவியல் ரீதியாக எதுவிருந்தாலும் எனக்கு அல்வா சாப்பிடகிற மாதிரி. அதுவும் குரோசவாவின் படங்கள் உளவியல் பற்றியது என்றால் சொல்லவா வேண்டும்?
குரோசவா படங்களின் விமர்ச்சனங்களை வரும் பதிவுகளில் தனிதனியாக இடுகிறேன்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
இகிருவும், ரஷோமானும் தத்துவரீதியில், தேடல்ரீதியிலும் குரோசாவின் முக்கியமான படங்கள் என்று எனக்கு தோன்றுகிறது. ஆனால் அவருடைய (மக்ஸிம் கார்கியின் நாடகத்தை தழுவி எடுத்த) lower depths என்ற படமே ஒருவாரம் பித்துபிடிக்க வைத்தது. அப்படி ஒருபடம் வேறு எதையும் நான் பார்த்ததாக சொல்லமுடியாது. இன்னும் பார்க்கவில்லையெனின் அதை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
நன்றி ரோசாவஸந்த். நானும் குரோசாவின் படங்களை தேடிப் பார்ப்பதென்று முடிவெடுத்துவிட்டேன். நீங்கள் பரிந்துரைத்த lower depths படத்தையும் கட்டாயம் பார்ப்பேன். பரிந்துரைக்கு நன்றி.
//5. 2002-ல் ஆஸ்கார் வென்ற பிறமொழி ஸ்பானிஷ் படமான "No Man's Landing"//
அது ஒரு போஸ்னியப் படம். ஸ்பானிஷ் அல்ல; No man's land அதன் பெயர், No man's landing அல்ல.
இகிரு, குரோஸவா படங்களில் துணிச்சலான யுக்தி ஒன்றைக் கையாண்டது. கதாநாயகன் வாத்தானபீ படத்தின் மத்தியிலேயே இறந்துவிட, மீதிப் படம் முழுவதும் அவரைப்பற்றிய விவாதங்களிலேயே கழியுமாறு. நானும் இதைப்பற்றி எழுதலாமென்று நினைத்துப் பின் நேரமில்லாததால் விட்டுவிட்டேன். மரணத்தைப்பற்றிப் பேசும் இகிருவைப் பார்த்தீர்களானால், மரணத்தைப்பற்றிப் பேசும் மற்றொரு அற்புதமான படமான The Seventh Seal பார்க்க முயலவும் (ஸ்வீடிஷ் மொழிப் படம்; இயக்குனர் இங்மார் பெர்க்மன்)

Monteresor, நானும் அந்த படத்தின் மொழியை தெரிந்துக் கொள்ள விழைந்தேன். டிவிடியில் பார்த்தப் போது ஸ்பெனிஷ் என்று குறிப்பிட்டிருந்தாக நினைவு. சப் டைட்டில் இருந்ததால் எதைப் பற்றியும் கவலைப் படவில்லை. டைட்டிலை தவறாக குறிப்பிட்டு விட்டேன். திருத்தியதற்கு நன்றி. இகிரு பற்றியும் எழுதலாமென இருக்கிறேன் நேரம் கிடைக்கும் போது.
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ