<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/9439067?origin\x3dhttp://halwacity.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

வானொலிக் குரல்கள்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
நான் சிறுவயதாக இருக்கும் போது என் தந்தையார் இலங்கை வானொலி ராஜா அவர்களின் குரலுக்கு தீவிர ரசிகர். இலங்கையில் கலவரம் மூண்ட சமயம் என் தந்தையார் ராஜா அவர்கள் மறைந்து விட்டதாக கூறி கவலைப்பட்டார். பிறகு தெரிந்தது அவர் அந்த சமயம் மறையவில்லையென்று. இருந்தாலும் எனக்கு ராஜா அவர்களின் குரல் அவ்வளவாக பரிச்சயமில்லை. லேசாக நினைவில் இருப்பது இலங்கை வானொலியில் ஒலிக்கும் இந்த ராகம் தான் "பிறந்த நாள் இன்று பிறந்த நாள் பிள்ளைகள் போல தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்", பிறகு வரும் "அம்மம்மா, அப்பப்பா, தாத்தா,பாட்டி" என்ற பிறந்த நாள் செய்தி.

எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்த நாட்களில் மதியம் 3 மணிக்கு (என நினைக்கிறேன்) இலங்கை வனொலியில் ஒலிபரப்பும் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி பாளையங்கோட்டை தெருக்களில் உள்ள நெசவு நெய்யும் வீடுகளில் அலறும். டிவியே தெரியாத காலக்கட்டத்தில் பாளையங்கோட்டை நெசவாளர்களின் வீட்டில் ரேடியோவே பிரதான பொழுதுப் போக்கு. அப்போது வானொலி வர்ணையாளர்களின் குரலின் இனிமை தெரியாமலே மயங்கி கேட்டுக் கொண்டிருந்த காலம் உண்டு. இலங்கை வானொலி கேட்பதற்கென்றே என் தந்தையார் கொஞ்சம் ஸ்பெஷல் செட்டப்புடன் தான் தன் வானொலியை வைத்திருப்பார். பூஜை அலமாரிக்கு பக்கத்திலேயே இன்னொரு அலமாரியில் மர்பி ரேடியோ நச்சென்று அமர்ந்திருக்கும். பிறகு இலங்கை வானொலிக்கு என்னாச்சி என்று தெரியவில்லை. அடுத்து என் கவனத்தில் வருவது திருநெல்வேலி வானொலி நிலையம்.

நெல்லை வானொலியில் காலை 8:30 மணி பாடல் என்றால் அப்படி ஒரு மோகம் எனக்கு. பள்ளி செல்லும் வேளையில் வானொலி கேட்க முடியாவிட்டால் என்ன, 8:30 மணி வீடு தொடங்கி நடந்து பள்ளி செல்லும் பாதையோரம் என் வானொலி குரல்கள் என்னை அன்ன நடையாக நடக்க விடுமே. அதில் சட்டென்று நினைவில் வரும் குரல் டெல்லியிலிருந்து செய்திகள் வாசிக்கும் சரோஜ் நாராயண்.

ஆக "ஆல் இந்திய ரேடியோ செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்" என்று சுந்தராம்பாள் குரலில் வாசிக்கும் அழகே தனி. நெடு நாள் என்னை ஈர்த்தவர். மற்றும் நெல்லை வனொலியில் மற்ற வர்ணனையாளர்கள் குரல்கள் பரிச்சயமாக இருந்தாலும் பெயர்களை கவனித்தில் கொள்ளவில்லை.

பிறகு டிவியின் ஆதிக்கம் கூடி பல வருடங்கள் ரேடியோ என்பதே மறந்துப் போனது. பிறகு படித்து முடித்து வேலை தேடி சென்னை வந்த வரை ரேடியோ என்பது என்னவென்றே மறந்துப் போனது. வேலைத் தேடி நொந்துப் போன காலக்கட்டத்தில் அந்த சின்ன அறையில் இருந்த எங்கள் 5 நண்பர்களுக்கும் ஒரே பொழுது போக்கு சென்னை FM. இடைவிடாமல் பாடல்களிலும்,தென்கச்சியாரின் 'இன்று ஒரு செய்தி'களிலும் தொலைப்பேசி உரையாடல்களும் எங்கள் மனச்சோர்வுக்கு மருந்து. முதன் முதலில் வானொலியில் தொலைப்பேசி உரையாடல் என்று கேட்டது சென்னை வானொலியில் தான். விடாமல் கேள்வி கேட்கும் ஒரு வாசகரையும் நான் சொல்லியே ஆக வேண்டும். 'சைதாப்பேட்டை சந்திரசேகர்' தான் அவர். வனொலியில் எந்த உரையாடல்களானலும் சரி அங்கே சைதை சந்திரசேகர் கேள்வி கேட்காமல் இருக்க மாட்டார். எங்களுக்குள்ளேயே நாங்கள் அவருக்கு ரசிகர் மன்றம் அமைத்து மதியம் இரண்டு மணி வானொலி உரையாடலுக்கு காத்திருப்போம். சை. சந்திரசேகர் லைனில் வந்தால் எங்களுக்குள் ஒரே ஆரவாரம் தான். ஆச்சிரியம் என்னவென்றால் ஏறக்குறைய 7 வருடம் கழித்து அண்மையில் சென்னை FM கேட்ட போதும் அதே சந்திரசேகர். நிலையத்தார்கள் "வா மக்கா" என்று பேசும் அளவுக்கு நெருங்கி இருந்தார்கள். அதில் வேறு அவர் "FM புகழ்" சந்திரசேகர் என அடைமொழியிட்டிருந்தது காமெடி.அவரை வர்னணையாளர் செய்யோன் காலாய்த்துக் கொண்டிருந்தார்.

பிறகு தனியார் FM வந்தவுடன் சூரியனில் சில அருமையான குரல்கள் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஒருவர் பெயரும் ஞாபகம் இல்லை. சட்டென்று முன்னால் நிற்பவர் 'மிர்சி FM' சுசித்ரா தான். ஒரு போது கேட்டிராத வேகத்தில் வர்ணனை டெலிவரி. அசத்தி கொண்டிருப்பவர். ஆயுத எழுத்து போன்ற படங்களில் பார்த்த போது 'அட பிகரும் சூப்பர் தான்' போங்க.

பிறகு தற்செயலாக 90களின் பிற்பாதியில் இலங்கை வானொலி புத்துயிர் பெற்று பாளையங்கோட்டையில் கேட்டுக் கொண்டிருந்தது. அதில் பிடித்த குரல் 'அப்துல் ஹமீது'. பிறகு டிவிக்கு வந்துவிட்டார்.

அண்மை காலங்களில் அதிகம் ஆக்கிரமித்த குரல்கள் சிங்கை வானொலி ஒலி 96.8 குரல்கள். நான் கேட்கும் வேளைகளில் அதிக பரிச்சயமானவர்கள் கீதா, பிரேமா, பாலா, ரஃபி. அதில் அசந்து போன குரலுக்கு சொந்தக் காரர் ரஃபி. அவருடைய தமிழ் வார்த்தை சுத்தம் உச்சரிக்கு விதம் நகைச்சுவை உணர்வு என்னையும் என் மனைவியையும் அடிக்கடி அசத்தும். பாலாவின் டயலாக் டெலிவர் மிகவும் வேகமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். அடுத்து சொல்லப் போவது காலை பூபாளம் 'கீதா' தான். வணக்கக....ம் என்ற சிங்கப்பூர் ஸ்டைல் தமிழில் அவர் சொல்லும் வணக்கத்தில் எப்போதும் ஒரு கிரக்கம். காலை எழும் முன்னரே ஒலி 96.8 ஆன் செய்து கீதா குரல் வந்தவுடன் தான் என்னை எழுப்பச் சொல்வேன். ப்ரூவுடன் ஆனந்தம் ஆரம்பம்ம்ம்ம்...' என்று சொல்லும் போதே ஏதோ ப்ரூ காப்பி குடித்த உற்சாகத் துள்ளல்....

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி "ஏங்க ஒரு உண்மை நிகழ்ச்சி தெரியுமா? இப்படி தான் ஒருத்தர் வானொலி குரலை கேட்டு கேட்டு அந்த குரல் மேல காதல் உண்டாகி அப்புறம் அந்த குரலுக்கு சொந்தமான அந்தப் பெண்ணின் மீதும் பாக்கமலே காதல் வந்திச்சாம்"

"சரி" என்றேன் நான்

"அப்புறம் கட்டிக்கிட்ட அந்த பொண்ணை தான் கட்டிகிடுவேன்னு ஒத்தைகால்ல நின்னு, மருந்து குடிச்சி தற்கொலை பண்ணிக்க போக, அவங்க வீட்டுல நேர வானொலி நிலையத்துக்கு போய் அந்தப் பொண்ணை போய் பாக்கலாமுன்னு அவங்க பேமிலியோட போனாங்களாம். அப்புறம் பார்த்த அந்த குரலுக்கு சொந்தமான பொண்ணுக்கு வயசு 50"

நான் "ஆமா கல்யாணத்துக்கு முன்னாடி தான் உன் குரலை போன்ல கேட்டு கேட்டு 50 வயசாகிப் போன ஃபீலிங்கோட அரைபைத்தியமாகி உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்போ ஒரு நல்ல குரலைக் கேட்டு என் பைத்தியம் தெளியட்டுமே!!"

"திருத்தவே முடியாத ஜென்மங்கள்" என்று கரகரப்பிரியா பாடிவிட்டு போனார்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
நானும் கே.எஸ்.ராஜாவின் குரலுக்கு தீவிர ரசிகன். 'வீட்டுக்கு வீடு வானொலி பெட்டிக்கருகில்
காத்திருக்கும் அன்பு நேயர்களுக்கு..' என்று அவர் நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் அழகே அழகு!

மஞ்சுளா குரல் 'யூ யூ யூ' என்று கோபப் படும்.
'என்ன சொன்னீர்கள் மஞ்சுளா?' என்று இடையே
ராஜாவின் குரல் கொஞ்சும். 'ஓ, ஐ ஆம் சாரி ராஜா' என்று மஞ்சுளா குரல் தொடரும். இப்படி திரைப்பட வசனங்களை வைத்தே விளையாடுவார்.

பழைய நினைவுகளைக் கிளறி விட்டீர்கள். இலங்கை வானொலி மீது பைத்தியமாகவே இருந்த அந்த பரம சுகமான நாட்கள்!!

அன்புடன்,
'சுபமூகா'
 
அன்புக்குரிய விஜய்,

நானும் இலங்கை வானொலியில் லயித்திருக்கிறேன் ஒரு காலத்தில். ஆனால் 96ல் சிங்கை வந்ததிலிருந்து ஒலி(க்களஞ்சியம்) என் வாழ்வின் அங்கமாகி விட்டது. ஒலியைப்பற்றி எழுத நிறைய விஷயமிருக்கிறது.

திரு. கே. எஸ். ராஜா பற்றி நண்பர் சுரதாவின் சகோதரரின்
இந்தப் பதிவை படித்திருக்கிறீர்களா...?
 
பின்னூட்டமிட்ட வானொலி காதலர்களே,

இலங்கை வானொலியின் தாக்கத்தை அறியும் போது மெய்சிலிர்க்கிறது. திரு கே.எஸ் ராஜா பற்றிய வலைப்பதிவைப் படிக்கும் போது எனக்குள் ஆயிரம் சிலிர்ப்பு. ஆனால் அந்த அற்புத குரலை ரசிக்கும் வயதில் அப்போது நான் இல்லாதது எனக்குள் இருக்கும் வேதனை. அவர் தமிழ் வானொலி வார்ணைனையாளர்களின் முன்னோடி, க்ரியேட்டர்ஸ் என்று அறியும் போது அவர் படைப்புகளை கேட்க ஆவல் மேலோங்குகிறது. தொழில் நுட்பம் முன்னேறாத காலத்தில் கலக்கிய அவர், இந்த காலத்தில் இருந்திருந்தால் எப்படி கலக்கியிருக்க முடியும் என நினைத்துப் பார்க்கவே பேரின்பமாக இருக்கிறது.

அன்பு, ஒலியில் நடக்கும் சுவையானவற்றையும் நீங்கள் எழுதலாமே?
 
மயில்வாகனனை விட்டு விட்டீர்களே. ஐம்பதுகளில் இலங்கை வானொலியில் பிரபலமானவர் அவர். "வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் மயில்வாகனன்" என்ற அறிவிப்பைக் கேட்டப் பிறகுதான் வானொலிப் பெட்டியை நிறுத்துவோம் அன்னாளில்.

சென்னை வானொலி நிலையத்தில் அறுபதுகளில் ஜெயம்கொண்டான் மிகப் பிரபலம். "ஆல் இண்டியா ரேடியோ சென்னை வானொலி நிலையத்திலிருந்து ஒலிபரப்பாகும் திரைகானம்" என்று மூச்சு விடாமல் கூறி அட்டகாசமாக பாட்டைப் போடுவார் முதலில். பிறகுதான் அது என்னப் படம் பாடியது யார் என்ற விவரமெல்லாம் முதல் பாட்டு முடிந்தப் பிறகு வரும். பாட்டு போடுவதிலும் பல புதுமைகள். ஒரு பாட்டின் வரி அடுத்தப் பாட்டு வரும் திரைப்படத்தின் தலைப்பாகும். "பூஜைக்கு வந்த மலரே வா" (பாத காணிக்கை?) - "பூஜைக்கு வந்த மலர்" படத்திலிருந்து ஒரு பாடல்.

ஆனால் என்னதான் தலைகீழாய் நின்றாலும் இலங்கை தமிழ் வானொலியை மிஞ்ச முடியாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->