<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

தற்கொலை

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
'ஜோதிட திலகம்' கே.பார்த்தசாரதி தடாலென தற்கொலைச் செய்துக் கொண்டுள்ளார். புகழ்வாய்ந்த ஜோதிட திலகத்துக்கு ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள். பலரின் தலையெழுத்தை கணித்துச் சொல்லும் அற்புத ஆசாமியாக திகழ்ந்தவர். தன் தலையெழுத்தை தானே அறிந்தவர் போல அவருடைய ஜாதகத்தை பொய்யாக்கும் நோக்குடன், குடும்பத்தில் உள்ளவர்களை கஷ்டப்படுத்தக் கூடாதென தற்கொலை செய்துக் கொண்டார் போல. முதல்ல குடும்பத்துல ஏதாவது பாலிடிக்ஸான்னு தெரியல. அது நாம தெரிஞ்சிக்கனும்னு அவசியமுமில்ல. சதி வேலைகள் ஏதுவும் இல்லாத பட்சத்தில் அவரே விரும்பி அந்த முடிவை எடுத்திருந்தாரானால் அவர் மாதிரி ஒரு அற்பபதர் யாரும் இருக்க முடியாது. ஒவ்வொருவரும் அவரவர் உயிரின் மதிப்பையும், இந்த ஜென்மத்தின் நோக்கத்தையும் அறிந்துக் கொண்டவர்கள் எவரும் தன் உயிரை தானே போக்கிக் கொள்ளமாட்டார்கள். விவரங்களுக்கு கீழ்கண்ட தொடர்பைப் பார்க்கவும்

http://www.thatstamil.com/news/2005/01/18/astro.html

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
இந்த முட்டாள்களை என்ன செய்வது. அந்தப் பத்திரிக்கைக் குறிப்பில், சொல்லியிருந்ததுப் போல், அவருக்கு 21-ம் தேதி மரணம் வாய்க்கவில்லை. அதற்கு முன்னதாகவே நடந்து விட்டது, அதனால், அவரின் ஜோஸ்யம் பொய்யாகிவிட்டது. அவராலேயே, அவரின் ஜோஸ்ய கணிப்பை உறுதியாக்கமுடியவில்லை. அவர் வால் பிடித்துச்சென்ற VIP-க்களை எண்ணிப் பார்த்தால், சிரிப்புத் தான் வருகிறது. பாவம் அந்த விஐபிக்கள்.

ஆயினும், ஒரு உயிரின் மதிப்பை "காமெடியாக தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்" என வர்ணிப்பது குருரமாக உள்ளது.
 
திரு நாராயண்,

சுட்டி காட்டியமைக்கு நன்றி. என் பார்வையில் தற்கொலை செய்துக் கொள்ளும் ஒருவரின் உயிரையும் மதிக்கக் கூடாதென்பது எனக்குள் நான் சொல்லி வைத்துள்ள கருத்து.இறைவன் கொடுத்த உயிரை மனிதன் தனக்கு தானே போக்கிக் கொள்வது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதுவும் பார்த்தசாரதி சொல்லியிருக்கும் காரண காரியத்தை நினைத்தால் உயிர் பிரிந்தது என்ற பரிதாபத்தை விட நகைச்சுவை தான் தொக்கி நிற்கிறது. அதனால் தான் எழுந்தது அந்த தலைப்பு.
 
ஹலோ அல்வாசிடி, நான் இதை விவாதமாக்க பிரியப்படவில்லை. தற்கொலை என்பது பல காரணங்களால் நிகழக்கூடிய ஒன்று. அது குறித்து ஏராளமாய் விவாதிக்க பட்டிருக்கிறது, பல பல பரிமாணக்களில்.

எப்படி இருப்பினும் உங்கள் கருத்தை பொதுவாய் சொல்லலாம். உயிர் துறந்து கொண்ட ஒருவரை கொச்சை படுத்துவது மிக மிக மோசமானது. ஏதோ சொல்ல தோன்றியது. நிச்சயமாய் இது குறித்து (இங்கே) விவாதிக்க தயாராயில்லை.
 
நல்லது ரோசாவஸ்ந்த் என்னை திருத்திக் கொண்டேன்
 
சொல்ல வந்ததை புரிந்துகொண்டதற்கு நன்றி!
 
தற்கொலை உளவியல் ரீதியாக அணுகப்பட வேண்டிய விஷயம். எல்லை மீறிய மன அழுத்தத்தில் அல்லது அவநம்பிக்கையின் உச்சத்தில் மிகச் சில நிமிடங்களி்ல் செயல்படுத்தப்படுவது. தற்கொலை செய்து கொள்பவர்கள் கோழைகள் என்றோ பரிதாபத்திற்குரியவர்கள் என்றோ சுருக்கமாய் ஒரு வார்த்தையில் சொல்லி விட முடியாது. அந்தக் கணங்கள் யாருக்கு எப்போது நிகழும் என்ற உத்தரவாதமும் இல்லை. ஒவ்வொரு தற்கொலைக்கும் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான் காரணமாய் அமைகிறார்கள்.

பொதுவாய் இந்த விஷயத்தில் பத்திரிகை செய்திகள் சொல்லும் காரணத்தை நான் நம்புவதில்லை. அவை பெரும்பாலும் கோர்ட் அல்லது போலிஸ் ஆவணங்களின் அடிப்படையில் வெளியிடப்படுபவை. வயிற்றுவலி காரணமாய் தற்கொலை செய்து கொண்டதாய் அடிக்கடி சின்னதாய் பெட்டிச் செய்தி பார்க்கிறோமோ? அதை நீங்கள் நம்புகிறீர்களா?
 
"தற்காலிக மனக்கோளாறினால் தற்கொலை" (Suicide on account of temporary state of unsound mind) என்பது போலீஸ் ஆவணங்களில் மருத்துவர் சான்றிதழ்களில் காணப்படும் வாசகம். அதனால்தான் தற்கொலை மனநிலையில் உள்ளவர்களுடன் பேசி அத்தாற்காலிக நிலையிலிருந்து அவர்களை மீட்பது அவசியம்.

"மனக்கோளாறினால்" (Of unsound mind) என்றத் தலைப்பில் ஹாரி கார்மிகேல் (Haarry Carmichael) என்பவர் ஒரு அழுத்தமான நாவல் எழுதியுள்ளார். இது ஒரு துப்பறியும் கதை என்றாலும் ஆசிரியர் தற்கொலை செய்பவர்களின் மனநிலையை மிக அருமையாக வர்ணித்திருப்பார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
 
பின்னூட்டமிட்ட சத்தியாராஜ்க்கும், டோண்டு அய்யாவுக்கும் நன்றி. தற்கொலை பற்றி பேச ஆரம்பித்தாலே சிறுவயதில் பயமுறுத்திய பேய் தான் ஞாபகம் வருகிறது. பயம்மா இருக்குதுப்பா..... இருப்பினும் உங்கள் கருத்துக்கள் என் மூளையில் தரவிறக்கம் செய்துக் கொண்டேன்.

டோண்டு அய்யா, நீங்கள் குறிப்பிட்டுருந்த புத்தகம் கிடைத்தால் வாங்கிப் படிக்கிறேன். நன்றி.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->