-ல் போட்டுத் தாக்கியது
அய்யோ பாவம் மாடு!!-எடக்கு முடக்கு
ஆடும் கோழியும். உழவர் வீட்டுல ஜாலியா மேஞ்சிக்கிட்டும், கொத்திக்கிட்டும் திரியுங்க. அதுக்கு ஒரு நாளு கிழமை உண்டா. அதுக்கு மரியாதை தான் உண்டா. மாடு மாதிரி அது வேலை செய்யலை. அதனால அதுகளை மனுசங்க மதிக்கல. என்னே மனுசனோட நன்றிக் கடன். நான் சொன்னதிலேயும் ஒரு தப்பு இருக்கு. யாரு சொன்ன ஆட்டுக்கு, கோழிக்கும் நாள் கிழமை இல்லேன்னு. இருக்கே. அதுங்களுக்கும் நாள் கிழமை இருக்கே. ஆனா பாவம் அதுகளுக்கு நாள் பொங்களுக்கு அப்பறம் பிக்ஸடா வராது. நாம குறிக்கிறது தான் அதுக்கு நாள். அன்னிக்கு தான் ஆட்டுப் பொங்கல் இல்லேன்னா கோழிப் பொங்கல். நான் இங்கே பொங்கல்லுன்னு சொன்னது பிரியாணியை.
2. எங்க ஊர்ல மாட்டுப் பொங்கலுக்கு மேளக்காரங்க பொங்கபடி கேட்டு வந்தாங்க. எப்படி தெரியுமா? 'தண்டக்கு டகுன தண்டக்கு டகுன' சத்ததோட மாட்டுத் தோல் கட்டின தவிலை தட்டிக்கிட்டு வந்தாங்க மேளக்காரங்க.
3. செத்த மாட்டு தோல் பூட்டின மிருந்தங்கத்துக்கு பேரு மங்கல வாத்தியம். மாட்டுத்தோல் மாதிரி லாஜிக் எங்கேயோ அடிவாங்குதே.
4. பாரம்பரியம் மாத்தாம சிங்கப்பூர்ல மாட்டுப் பொங்கல கொண்டாடுறாங்கலாம். சில மாடுகளை லிட்டில் இந்தியா பக்கத்தில பிடிச்சிட்டு வந்திருந்தாங்க. அத பாக்குற குழந்தைங்களுக்கு தான் கொண்டாட்டம். பாவம் புலம்பெயர்ந்த தமிழர்கள் அதையும் பண்ண முடியாம... இதையும் பண்ண முடியாமா... திண்டாட்டம் தான். பக்கத்தில இருக்கிற டேக்கா மால்ல கோழிக்கறி, மீன் கறி, ஆட்டுகறியெல்லாம் பிரமாதமா வித்துக்கிட்டு தான் இருந்திச்சி. யாரு கண்டா? மாட்டுப் பொங்கல்ல அங்க உட்கார்ந்திருக்க மாடுங்களே நாளைக்கு கறியாக வரலாம். அய்யோ பாவம் மாடுகள்.
5. அந்தகாலத்துல ஜல்லி கட்டு மாட்டைப் பிடிச்சா கிடைக்குமாம் 'வீரன்' என்றப் பட்டம். ஆன இந்த காலத்துல ஜல்லி கட்டு மாட்டைப் பிடிச்சா கிடைக்குமாம் 'மாடு பிடிப்பவர்' பட்டம், (பட்ட உபாயம் : சன் டிவி)
6.நல்ல வேளை அந்த காலம் மாதிரி யானை கட்டி போர் அடிக்கல இந்த காலத்தில. அப்படி அடிச்சிருந்த இந்த மனுசங்க நன்றி செலுத்துறதுக்குன்னு யானைப் பொங்கலை வச்சிருப்பாங்க. வீரவிளையாட்டுன்னு ஜல்லி கட்டுல யானையை விட்டா என்ன ஆகும்? அவ்ளோ தான். 'வீரன்' பட்டமே வேண்டாமுன்னு மாடு பிடி வீரர்கள் எல்லாம் தலைமறையாகி இருப்பனுவோ....
நான் வாரேன்.... யப்ப்பா.... இப்போவே கண்ணை கட்டுதே......
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ