<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

முயலுகிறேன்.... முடியவில்லை

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
ஞாயிறு அன்று கவ்விய சோகம் இன்னும் அகல மறுக்கிறது. ஏதேதோ வேலைகளில் கவனம் செலுத்த முயலுகிறேன். என் கவனத்தைத் திசைத் திருப்ப முயலுகிறேன். மீண்டும் மீண்டும் கோரத்தின் முகம் என் கண் முன்னே தொலைக்காட்சியாக, வலைத்தளமாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. ஏதோ எழுத நினைத்து கணனி முன் உட்கார்ந்ததும் இதை தான் என் மனம் எழுது தூண்டுகிறது. நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. கண நேரத்தில் நிகழ்ந்த சோகம்.

மெதுவாக என்னைச் சுற்றி தலை தூக்கிப் பார்கிறேன். எனக்கு என்னவென்று அவரவர் தன் வேலையில். அதுவும் சரி தான். சீனாவில் நிலநடுக்கம் வந்து மக்கள் இறந்தால், என் சோகம் இந்த அளவுக்கு இருக்குமா? சந்தேகம் தான். பிறகு அவர்களைச் சொல்லி குற்றமில்லை.

மற்றொரு கொடுமை சன் டி.வியில் காண்பிக்கப்படும் அழுது புலம்பும் காட்சிகள். சோகம் நடந்ததை அவர்கள் வாயல் சொல்ல வைத்து நேரடியாக ஒளிபரப்பப்படும் போது அதன் தாக்கம் சொல்லி மாளாது. "நான் பெத்த மகளே" என்று ஒரு தாய் கதறும் காட்சி, "என்னைப் பெத்த ராசா" என்று தன் மகனைக் கட்டிக் கொண்டு அழும் தாயையும் என் கண்களால் காண முடியவில்லை. என்னைப் பொறுத்த வரை அது மாதிரி பேட்டிகளை ஒளிப்பரப்பாமல் இருந்தால் சாலச் சிறந்ததாக இருக்கும்.

மெது மெதுவாக அரசியல் ஆதாயம் தேடும் படலத்திற்கு செல்கிறது இந்த சோகம். கலைஞர் போய்விட்டார் என்ற சேதியுடன், குண்டர்களின் அநியாங்களும் நிறைவேற தொடங்குகிறது மெதுவாக.

சன் டி.வி அரசு நிவாரண பணி கிடைக்காத இடங்களைத் தேடி கண்டுபிடித்து அங்குள்ள மக்களை அரசைத் தாக்கி மெனக்கெட்டு பேச வைத்திருக்கிறார்கள். இந்த பச்சோந்திகளைத் தவிர, அனைத்து தொண்டு நிறுவனங்களும் முழு மூச்சுடன் மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டவர்கள்.

இரவு முழுவதும் இந்த சோக காட்சி கண்ணில் நிற்க, நடுநிசியில் காற்றில் அசைந்த ஜன்னலின் கீறீச்சிடும் ஒலியும் என் மனத்தில் ஒரு கிலியும் கவ்வியது.

நானும் இயல்புக்கு திரும்பி எதையாவது வலைப்பதிவில் போட முயலுகிறேன். ஆனால் முடியவில்லை.


இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
Yes, I agree with you that this is NOT the time for politicking, which Sun TV and Jaya TV are doing shamelessly. If Sun TV is choosing the Human Interest(?!) news items which concentrates on corpses and Governmental incapability, Jaya TV was boasting "contributions are flooding in AS A RESPONSE TO JAYALALITHA'S PLEA". Disgusting.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->