<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

மன்மதன் - காமூகி

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
தாய்மார்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற படம் மன்மதன். பின்ன பாய்ஸ், நியூ, 7G ரெயின்போ காலனின்னு எந்த தமிழ் ஆபாச படம் வந்தாலும் முன்னாடி வந்துப் போராட்டம் பண்றது தாய்மார்ங்க தானே!. இந்தப் படம் பார்த்துட்டு சைலண்டா இருக்காங்கன்னா என்ன அர்த்தம்? பிடிச்சிருக்குன்னு தானே அர்த்தம்.

"ஏலே சிம்பு, தமிழ் படம் எடுன்ன பிட்டு படமாலே எடுத்திருக்கே. வயசிக்கு மீறி பேசுறியலே. உன்னோட மரமண்டைக்கு இந்த மாதிரி தாம்ல கதை கரு கிடைக்கும். உங்கப்பனுக்கு இருக்கிற மூளையில 10% கூட இல்லையல. ஹாலிவுட்ட காப்பி அடிச்சி த்ரில்லர் படமால எடுக்க. உனக்கெல்லாம் ஏன் இந்த வேலை. வந்தோமா நடிச்சோமான்னு போகாம, கதை எழுதுறேன், மண்ணாங்கட்டி எழுதுறேன்னு எறங்குன இப்படி தாம்ல. சும்மா சவுண்டு விடாதே. ஊரு உலகத்திலே நடக்கிறது தான் நான் எடுத்தேன்னு சொல்றியலே. ஓ! அந்த டெல்லி மேட்டரை சொல்லியறியலாக்கும். அவனைப் பார்த்தாலே ஓன் பிரண்டு மாதிரி தாம்ல இருக்கான். அப்பறம் எப்படி இருக்கும்.

கள்ளக் காதலை எதிர்காறாம் இவரு. படம் ஓட உனக்கு ரெண்டு மூனு பிட்டு சீனு காமிக்கனும் . அதுக்கு ஒரு கதை. அதுல நடிக்க 4, 5 பேரு. அதுக்கு பதிலா ஷகிலா படம் பரவில்லைன்னு நினைக்கிறேம்ல. நீயும் ஏம்ல அப்படியே தனுசு அண்ணன் மாதிரியே ஆகிட்டு வர்றே. கிளம்பிட்டானுவோப்பா உன்ன மாதிரி நாலஞ்சி பேரு, படம் எடுக்கேன், காதலை சொல்றேன்னு... எல்லாரும் பார்த்தக் காதல், பார்க்காத காதல்ன்னு எடுத்துகிட்டு இருந்தனுவோ.... இளைய தலைமுறை நீங்க தான் கள்ளக்காதல், சின்னவயசுக் காதல், காலனி(ரெட்லைட்) காதல்.... ஓ! ஒ! இதெல்லாம் உங்க காதலோட பரிணாம வளர்ச்சியாக்கும்....எலே இருக்குற கிழடுங்க தான் இப்படி ஆபாசம் தான் சினிமான்னு சிந்திக்கிறானுவோன்னா, சின்னப்பய நீயுமாலே... ஆமா உங்கப்ப உன்னை அடிச்சி வளர்க்கலையால?

ஆனா என்ன இந்த சொத்த கதைக்கும் உயிரை கொடுத்து நடிக்க ட்ரை பண்ணியிருக்க. ரொம்ப அலப்பரை விடாமா அடக்கமான பையனா நல்ல முயற்சி பண்ணு. நடிப்புல நீ நல்ல வருவே.... (ஆமா! நேத்து உன்னை 'உங்கள் சாய்ஸ்ல' பார்த்தேனே... தாடி வச்சிக்கிட்டு அப்படியே குட்டி கரடி மாதிரியே இருக்கே)

மக்கா! படத்திலே ஒரே ஆறுதல் மேட்டர் இசையும், நிறைய எடிட்டிங் டெக்னிக்காலிட்டியும் தான். வேறு எதுவும் சத்தியமா இல்ல.

ஒவ்வொரு பெண்களைக் கடத்தும் போது சிம்பு மூக்கில் இரத்தம் வருவதாக க்ளோசப்பில் காண்பிப்பார்கள். அதற்கு பதிலாக மூக்கில் சளி வருவதாகவே காண்பித்திருந்தால் த்ரில்லர் காமெடியாகவாவது இருந்திருக்கும்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
அப்படிபோடு அருவாள தம்பி!! கேக்கறதுக்கு ஆள் இல்லன்னு நெனச்சிக்குனு இருக்கானுங்க, தமிழ்ல படத்துக்கு பேரு வைக்க சொல்லிக்குட்டு ஒரு கூட்டம் அலைஞ்சி கிட்டு இருக்கு, அவனுங்க முதல்ல தமிழனுக்காக படம் எடுக்க சொல்லுங்கப்பான்னு சொல்ல சொல்லறன்!!
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->