<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

விளையாடியிருக்காங்கப்பா நம்ம தாத்தாக்கள்..

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Online Security Tips and Tricks for Kids
மக்கா, நேத்து இரவு ஒலி 96.8 F.M-ல் தூங்க போறதுக்கு முன்னாடி ஒரு பாட்டு கேட்டேன் ..
யாப்பா... என்னா பாட்டு.. தமிழில் அப்படி ஒரு பாட்டு .. சும்ம்மா விளையாடிருக்கங்காப்பா நம்ம தாத்தாக்கள்.. ஆராய்ச்சி பண்ணத்தில் கிடைத்த தகவல்..

பாடல் : அருணகிரிநாதர்
அரசவையில் ஒரு போட்டியில் முருகரை பத்தி பாடியது..

இதோ பாடல்..

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை

கோட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.

பின் குறிப்பு : எழுத்து பிழையிருந்தால் மன்னிக்கவும், ஏன்னா அருணகிரிநாதர் எங்கே, இந்த அல்வாசிட்டி சங்கர் எங்கே...

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
நண்பர் சங்கர் சொல்லியிருந்தப் பாடலுக்கு கோனார் தமிழ் உரையைத் தேடிக் கொண்டிருந்தேன். கிடைத்தது. அதை உங்களிடம் பகிர்ந்துக் கொள்வதில் எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. அருணகிரி நாதர் அருளிய திருப்புகழ், பாடல் 8

பாடலில் ... வரும் பதவுரையை சேர்த்து படித்தால் முழுமையான பொருள் வரும்

-------------------------------

முத்தைத்தரு பத்தித் திருநகை ... வெண்முத்தை நிகர்த்த,
அழகான பல்வரிசையும் இளநகையும் அமைந்த

அத்திக்கு இறை ... தேவயானை* தேவியின் தலைவனே,

சத்திச் சரவண ... சக்திவேல் ஆயுதத்தை
ஏந்தும் சரவணபவக் கடவுளே,

முத்திக்கொரு வித்துக் குருபர ... மோக்ஷ வீட்டுக்கு
ஒப்பற்ற ஒரு விதையாக விளங்கும் ஞான குருவே,

எனவோதும் முக்கட்பரமற்கு ... என்று துதிக்கும்
முக்கண்ணர் பரமசிவனார்க்கு

சுருதியின் முற்பட்டது கற்பித்து ... வேதங்களுக்கு
முதன்மையான ஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து,

இருவரும் ... ( மும்மூர்த்திகளஇல் எஞ்சியுள்ள )
பிரம்மா, திருமால் ஆகிய இருவரும்,

முப்பத்துமுவர்க்கத்து அமரரும் அடிபேண ... முப்பத்து
முக்கோடி தேவர்களும் அடி பணிய நின்றவனே,

பத்துத்தலை தத்தக் கணைதொடு ... ராவணனுடைய பத்துத்
தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு,

ஒற்றைக்கிரி மத்தைப் பொருது ... ஒப்பற்ற மந்தர
மலையான மத்தைக் கொண்டு பாற்கடலைக் கடைந்து,

ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக ... ஒரு பகற்
பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி,

பத்தற்கு இரதத்தைக் கடவிய ... நண்பனாகிய அர்ச்சுனனுக்கு,
தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய

பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் ... பசுமையான
நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே,

பட்சத்தொடு ரட்சித் தருள்வதும ஒருநாளே ... பரிவோடு
என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ?

( இப்பாடலின் பிற்பகுதி முருகன் அசுரர்களுடன்
செய்த போரினை விரிவாக வருணிக்கிறது ).

தித்தித்தெய ஒத்தப் பரிபுர ... தித்தித்தெய
என்ற தாளத்துக்கு ஒத்து, சிலம்புகள் அணிந்த

நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி ... நாட்டியப்
பாதங்களை வைத்து காளஇதேவி

திக்கொட்க நடிக்க ... திசைகளஇல் எல்லாம்
சுழன்று தாண்டவம் செய்யவும்,

கழுகொடு கழுதாட ... கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும்,

திக்குப்பரி அட்டப் பயிரவர் ... எட்டுத் திக்குகளஇலும்
உலகங்களைத் தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள்**

சித்ரப்பவுரிக்கு ... இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக
எனவோத ... தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
த்ரிகடக என்ற தாள ஓசையைக் கூறவும்,

கொத்துப்பறை கொட்ட ... கூட்டமாகப் பற்பல பறை
வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும்,

களமிசை முதுகூகை ... போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள்

குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை
புக்குப் பிடியென கோட்புற்றெழ ... குக்குக்குகு குக்குக் குகுகுகு
என்ற ஓசையோடு குத்திப் புதை, புகுந்து பிடி என்றெல்லாம்
குழறி வட்டமாகச் சுழன்று மேலே எழவும்,

நட்பற்ற அவுணரை ... சினேக எண்ணம் தவிர்த்து
விரோத மனப்பான்மையே கொண்ட அசுரர்களை

வெட்டிப்பலியிட்டுக் குலகிரிகுத்துப்பட ... கொன்று
பலி கொடுத்து, அசுரர் குல மலை கிரௌஞ்சகிரி தூளாக,

ஒத்துப் பொரவல பெருமாளே. ... தர்ம மார்க்கத்துக்குப்
பொருந்த, போர்செய்யவல்ல பெருமாளே.

குறிப்பு ... முருகன் அருணகிரிநாதருக்கு அடி
எடுத்துக் கொடுக்கப் பாடிய பாட்டு இது.

(* தேவயானை கிரியாசக்தி என்பதால், கர்மயோகத்தை
முதலில் அனுஷ்டிக்க அவளைக் குறிப்பிட்டார் )

(** அஷ்ட பைரவர்கள் .. அசிதாங்கன், காபாலி, சண்டன்,
உருரு, குரோதன், சங்காரன், பீடணன், உன்மத்தன் ).

-------------------

நன்றி:http://www.kaumaram.com/thiru/
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->