-ல் போட்டுத் தாக்கியது
எது குரங்கு?
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
"கணேஷா உலகத்தில் அமைதி ஏற்பட வேண்டும். போன மாசம் 1000 ரூபாய் யாருக்கோ கடன் கொடுத்தோமே? யாருக்கு? சே சே! இங்க எதுக்கு வந்திருக்கோம். அத விட்டுட்டு இப்படி எல்லாம் நினைக்கலாமா? கணேஷா, எல்லாரையும் நீதான் பாத்துக்கனும். நான் எல்லாத்துக்கும் நல்லது தான் நினைக்கிறேன். எனக்கு மட்டும் என் இந்த சோதனை எல்லாம்? அதெல்லாம் சரி 1000 ரூபாய் நம்ம ஆனந்தனுக்கு தானே கொடுத்தோம். அவன் கரெக்டா திருப்பி கொடுத்திருவானா? கணேஷா நான் ஒரு நிலம் வாங்கப் போறேன். அதுக்கு கொஞ்சம் பணமுடையா இருக்கு. எந்தப் பிரச்சனையும் வராம நீ தான் பாத்துகிடனும். ஆஹா! நாம வரும்போதே அந்த பொண்ணு என்னை பார்த்திகிட்டு இருந்திச்சே. இன்னும் நம்மளைப் பார்த்துகிட்டு இருக்குமா? அடப்பாவி நேரம் காலம் தெரியாமா என்ன நினைக்கிற நீ? உனக்கே நல்ல இருக்கா? மன்னிச்சிக்கோ கணேஷா! டிராக் மாறிட்டேன். உலகத்தில மனித இனம் எல்லாம் மேம்படனும் கணேஷா. இராக்ல எப்போ தான் அமைதி நிலவனும்? எத்தனை பேரு தினம் தினம் செத்துப் போகிறாங்க. உலகத்தில சீக்கிரமே அமைதி திரும்பனும். இப்போ சரஸ்வதி விலாஸ்ல சூடா வடை போட்டிருப்பன்ல. போற வழியில அப்படியே வாங்கி தின்னுட்டு போகனும். நம்ம புள்ள வரும் போதே எந்த பொம்மையை வாங்கிட்டு வரச் சொன்னான்ல? அய்யோ! மன்னிச்சிக்கோ கணேஷா உன்னை உக்கார வச்சிக்கிட்டு என்னனமோ பேசிக்கிட்டு இருக்கேன். சாரி! மேட்டருக்கு வர்றேன். அடுத்த வாரமும் வர்றேன். அதுவரைக்கும் நீ தான் என்னையும் கொஞ்சம் பார்த்துக்கனும்"
இது தான் இந்த சாமானியனின் வேண்டுதல் வினாயகப் பெருமாளிடம். மேலே நீல நிறத்தில் உள்ள வாக்கியங்கள் எல்லாம் வேண்டுதலில் இடைச்செருகாகக் வந்தது என் உள்(சிறு) மனம்.
கோயிலை விட்டு கிளம்பும் போது ஒரு அசரீரி "பக்தா! உன் வேண்டுதல் அனைத்தையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முக்கியமாக ஈராக் பற்றி நீ கேட்டது என்னால் கட்டாயம் முடியாது. ஏனென்றால் அது என் டெர்ரிடெரி(TERRITORY) கிடையாது"

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
அன்புள்ள விஜய்,
இன்னைக்குத்தான் உங்க பதிவு முழுவதும் படித்தேன். நகைச்சுவை உங்களுக்கு ரொம்ப இயல்பா வருது. கலக்குறீங்க!
நல்லா இருங்க! வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்,
துளசி.
இன்னைக்குத்தான் உங்க பதிவு முழுவதும் படித்தேன். நகைச்சுவை உங்களுக்கு ரொம்ப இயல்பா வருது. கலக்குறீங்க!
நல்லா இருங்க! வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்,
துளசி.
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ