-ல் போட்டுத் தாக்கியது
விருந்தினர் தொ(ல்)லைக்காட்சி
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
நிறைய பேர் இருக்கிறார்கள். ஒருவர் அல்ல. இருவர் அல்ல. நிறைய பேர். எப்படியென்றால், சிலர் வீட்டிற்க்கு சென்றால் நம்மை வரவேற்று விட்டு டி.வியில் லயித்து விடுவார்கள். நம் வீட்டில் பார்க்காத சேனல் வருகிறதா என்றால் அதுவும் கிடையாது. வெறும் சன் டி.வி தான். நாம் விட்டத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருக்கலாம். இல்லையென்றால் அதே டி.வி நிகழ்ச்சியில் லயித்துப் போகலாம். ஏனென்றால் டி.வி தான் அவர்கள் வீட்டில் பிரதானம். யார் எதற்கு வந்திருக்கிறார்கள் என்ற கவலையே இல்லை.
இப்படித் தான் ஒரு தடவை ஆலோசனை ஒன்றை பெறுவதற்காக தெரிந்த பெரியவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். முக்கிய வேலை ஒன்று இருந்ததால் அவரை உடனே பார்த்து விட்டு கிளம்பி விடுவதென்று முடிவு செய்துக் கொண்டு அவர் வீட்டிற்கு புறப்பட்டேன். என் நேரத்திற்கு சன் டி.வி சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் முழ்கியிருந்தார். வரவேற்றவர் திரும்ப அதே நிகழ்ச்சியில் மூழ்கினார். நானும் கண்களை உருட்டி உருட்டி அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவர் "சே என்ன அருமையான ப்ரோகிராம். இதில பாடுகிறவர்கள் குரல் வளம் ஏன் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு பாடுகிறவர்கள் கிட்ட இல்லை" என்னை வினாவினார்.
நானும் மனதுக்குள் 'அடபாவமே சப்தஸ்வரங்களில் எல்லோருமே கர்னாடக இசையை பயில்கிறவர்கள். ஆனால் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் பாமரனும் கேள்வி ஞானத்தால் பாடுகிறர்வர்கள். இந்த வித்தியாசம் கூடத் தெரியல இந்தாளுக்கு. இவர்கிட்ட நம்ம ஆலோசனை கேக்கனுமா?" என்ற கேள்வி.
அந்த நிகழ்ச்சி முடியும் தருவாயில் கரண்ட் கட். அப்புறம் தான் நம்ம மேட்டருக்கே வந்தார். நானும் வேண்டுமென்றே "சார் சப்தஸ்வரங்கள் எவ்வளவு நாளா வருது சார்" என்று கேட்டேன். அவரும் "இதை கேட்க தான் அங்கிருந்து வந்தியா?" என்று கே... கெ... கே... கெ... என்று சிரிக்க ஆரம்பித்தார்.
அப்போதிருந்து யாராவது என்னை தேடி வீட்டிற்கு வந்தால் டி.வி யை ஆப் செய்து விட்டு வந்தவர்களிடம் தான் பேச வேண்டுமென கற்றுக் கொண்டேன். ஏனென்றால் அந்த எரிச்சலின் சுவையை அனுபவித்தவன்.
அந்த எரிச்சலைத் தணிக்க அதில்"இனிமேல் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியைப் பார்த்தால் நான் உன்னைக் கடத்துவேன். இப்படிக்கு வீரப்பன்" என்று துண்டு சீட்டை அவருக்கு தெரியாமல் அவர் வீட்டில் வீசியெறிந்து விட்டு வந்தேன்.
பல மாதங்கள் டப்பாவாக உருண்டது. ஆனால்.... அவரை பழிவாங்கும் எண்ணம் மட்டும் என்னுள் அணையவில்லை. ஒரு ஞாயிற்றுக்கிழமை அதே பெரியவர் என் வீட்டில். நான் அனுபவித்த அதே சுவையை அவருக்கு ஊட்ட, வந்தவுடன் டி.வி ஆன் செய்தேன். இப்போ லலிதாவின் பாட்டுக்கு பாட்டு ஒடிக் கொண்டிருந்தது. அதை நான் ஆக ஓகோ என்று புகழ, சிறிது நேரத்தில் அவரும் கிளம்பினார்.
மறுநாள் என் மனைவி வீடு பெருக்கும் போது ஒரு துண்டுச் சீட்டைக் கண்டெடுத்தாள். அதை நான் வாசிக்க....அதில்
"இனிமேல் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியைப் பார்த்தால் நீ சுட்டுக் கொல்லப் படுவாய், இப்படிக்கு 'அதிரடி படைத்தலைவர்' விஜயகுமார்"
*&%&$^&*^%^%%^*&
இப்படித் தான் ஒரு தடவை ஆலோசனை ஒன்றை பெறுவதற்காக தெரிந்த பெரியவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். முக்கிய வேலை ஒன்று இருந்ததால் அவரை உடனே பார்த்து விட்டு கிளம்பி விடுவதென்று முடிவு செய்துக் கொண்டு அவர் வீட்டிற்கு புறப்பட்டேன். என் நேரத்திற்கு சன் டி.வி சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் முழ்கியிருந்தார். வரவேற்றவர் திரும்ப அதே நிகழ்ச்சியில் மூழ்கினார். நானும் கண்களை உருட்டி உருட்டி அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவர் "சே என்ன அருமையான ப்ரோகிராம். இதில பாடுகிறவர்கள் குரல் வளம் ஏன் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு பாடுகிறவர்கள் கிட்ட இல்லை" என்னை வினாவினார்.
நானும் மனதுக்குள் 'அடபாவமே சப்தஸ்வரங்களில் எல்லோருமே கர்னாடக இசையை பயில்கிறவர்கள். ஆனால் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் பாமரனும் கேள்வி ஞானத்தால் பாடுகிறர்வர்கள். இந்த வித்தியாசம் கூடத் தெரியல இந்தாளுக்கு. இவர்கிட்ட நம்ம ஆலோசனை கேக்கனுமா?" என்ற கேள்வி.
அந்த நிகழ்ச்சி முடியும் தருவாயில் கரண்ட் கட். அப்புறம் தான் நம்ம மேட்டருக்கே வந்தார். நானும் வேண்டுமென்றே "சார் சப்தஸ்வரங்கள் எவ்வளவு நாளா வருது சார்" என்று கேட்டேன். அவரும் "இதை கேட்க தான் அங்கிருந்து வந்தியா?" என்று கே... கெ... கே... கெ... என்று சிரிக்க ஆரம்பித்தார்.
அப்போதிருந்து யாராவது என்னை தேடி வீட்டிற்கு வந்தால் டி.வி யை ஆப் செய்து விட்டு வந்தவர்களிடம் தான் பேச வேண்டுமென கற்றுக் கொண்டேன். ஏனென்றால் அந்த எரிச்சலின் சுவையை அனுபவித்தவன்.
அந்த எரிச்சலைத் தணிக்க அதில்
பல மாதங்கள் டப்பாவாக உருண்டது. ஆனால்.... அவரை பழிவாங்கும் எண்ணம் மட்டும் என்னுள் அணையவில்லை. ஒரு ஞாயிற்றுக்கிழமை அதே பெரியவர் என் வீட்டில். நான் அனுபவித்த அதே சுவையை அவருக்கு ஊட்ட, வந்தவுடன் டி.வி ஆன் செய்தேன். இப்போ லலிதாவின் பாட்டுக்கு பாட்டு ஒடிக் கொண்டிருந்தது. அதை நான் ஆக ஓகோ என்று புகழ, சிறிது நேரத்தில் அவரும் கிளம்பினார்.
மறுநாள் என் மனைவி வீடு பெருக்கும் போது ஒரு துண்டுச் சீட்டைக் கண்டெடுத்தாள். அதை நான் வாசிக்க....அதில்
"இனிமேல் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியைப் பார்த்தால் நீ சுட்டுக் கொல்லப் படுவாய், இப்படிக்கு 'அதிரடி படைத்தலைவர்' விஜயகுமார்"
*&%&$^&*^%^%%^*&
இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ