<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

இன்றைக்கு சம்பள நாள்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
காலையில் போய் அலுவலகத்தில் உட்கார்ந்ததும் நொய் நொய் என்று மேலதிகாரிகள் அரிக்க ஆரம்பித்தனர். நானும் நொந்துக் கொண்டே " என்னடா வாழ்க்கை இது. நானும் சாஃப்ட்வேர் கன்சல்டன்ட் எப்போது ஆனனோ அப்போதிருந்து நாய் படதாத பாடு தான். ரொம்ப நாளா சூரியனை பாக்கவே இல்ல. காலங்கார்த்தாலே வந்தோம்னா நைட்டு ரொம்ப லேட்டா தான் வீட்டுக்கு போறோம். அதுல வேற கிளயண்ட் நம்மளை மதிக்கிறதே இல்ல. எவ்வளவு தான் பெர்பெஃக்டா வேலையை முடிச்சாலும் குத்தம் கண்டுபிடிச்சிக்கிட்டே இருக்காங்க. ஆபிஸ்ல உக்கார ஒரு நல்ல சேர் போட்டிருக்கிறார்களா? அதுவும் இல்ல. கூர்கா உட்காரவைக்கும் சேரை விட கேவலாமா இருக்கு. முதுகு எல்லாம் உக்காந்து உக்காந்து வலிக்குது. இப்படியே போன கூடிய சீக்கிரம் வாலிப வயோதிகன் ஆகிவிட வேண்டியது தான்". கீ போர்டை சுத்தம் செய்யும் நோக்கில் அதை கவிழ்த்து தட்டுகிறேன். ஒரே தலை முடியாக கொட்டுகிறது. மீண்டும் மனதிற்குள் "ஹீம்... பார்பர் ஷாப்ல கூட இவ்ளோ முடி இருக்காது. இப்படி தலைய பிசிக்கிட்டு வேலை பார்க்கிறேன். நாளும் கிழமையுமா சீக்கிரம் வீட்டுக்கு போக முடியாதா? பெண்டாட்டிகிட்ட ஒழுங்க பேச முடியுதா? எல்லாம் தலைவிதி" என்று நொந்துக் கொண்டே கிடைத்த கொஞ்ச நேரத்தில் வலைத்தளத்தில் என்னுடைய வங்கியின் சுட்டியிட்டு செல்கிறேன். பேங்க் சைட் லோட் ஆனதும் பதற்றதுடன் என் அக்கவுண்ட்டின் பக்கத்தை திறக்கிறேன். "ஆஹா!! இன்னிக்கு சம்பளம் வரக்கூடிய நாள் அல்லவா?

கொத்தாக சம்பளத்தை டாலரில் பார்த்தவுடன் "ஹீம் என்ன செய்ய இந்த வயசுல சம்பாதிக்காம எந்த வயசுல சம்பதிக்க முடியும் சொல்லு? கிளையண்ட் அப்படி தான் இருப்பாங்க. என்னா அவங்க தானே நம்மளுக்கு படியளக்கிறவங்க. பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க. காஸ்ட் கட்டிங்னால இந்தளவுக்காச்சி சேரை போட்டிருக்கங்களே? எப்படியிருந்தா என்ன, நமக்கு சம்பளம் வருதா அது தான் முக்கியம். தலை முடிய விடு, நான் என்ன M.குமரனா? வயசு ஆச்சில்ல... அப்படிதான் முடி கொட்டும். ஒரு நாள் நல்ல மருதாணிய தேச்சி குளிச்சா போச்சு. அதுகென்ன இப்போங்கிறேன். வேலைன்னு வந்துட்டா பெண்டாட்டி பிள்ளைன்னு எதுவும் பார்க்கக் கூடாது. வேலை தான் முக்கியம்" என்று என்னை சமாதனம் சொல்லிக் கொண்டு மீண்டும் குஷியானேன்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
All your posts are good... keep it going.:-)
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->