-ல் போட்டுத் தாக்கியது
இது புள்ளிராஜா விளம்பரம் இல்ல..
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
சிங்கப்பூரில் விளம்பரங்கள் நம்ம புள்ளி ராஜா விளம்பரத்திற்கு இணையாக இல்லாவிட்டாலும், நிறைய சிந்திக்க வைக்கக் கூடிய விளம்பரங்களை MRT இரயில்களில் கண்டிருக்கிறேன்.
சோப்பு சீப்பு விளம்பரங்கள் போக ஆரோக்கிய உணவினை சாப்பிடுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், பெண்கள் நிறைய கால்சியம் சாப்பிடுங்கள் என்ற பொதுநல ஆர்வ விளம்பரங்களையும் கண்டிருக்கிறேன். அண்மையில் ஒரு வித்தியாசமான விளம்பரம் ஒன்று இரயிலினுள் கண்ணிற்கெதிரே கண்டேன்.
ஒன்றில் ஒரு ஆணின் படத்தை வெர்டிகளாக வைக்காமல், ஹரிஜான்டலாக வைத்து எழுத்துக்கள் நாம் படிக்க ஏதுவாக நேராக இருந்தது. அதில் அவர் எதை பார்க்கிறார் என்று தலையை உயர்த்திப் பாருங்கள் என்று எழுதியிருக்க, நான் தலையை இடப்பக்கமாக மேலே உயர்த்திப் பார்த்தேன். அங்கும் ஒரு போஸ்டர். போஸ்டரில் "தலையை அவ்வப்போது இந்த மாதிரி மேல் நோக்கி இடமும் வலமும் சாய்த்து ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்" என்றிருந்தது.
உண்மையில் இது ஒரு இலகுவான ரிலாக்ஸ் டெக்னிக். எப்போதும் நேராக தலையை வைத்துக் கொண்டு கணனியை நோன்டும் என்னை மாதிரி ஆளுங்களுக்கு தேவைதானென்று உணர்ந்தேன்.
அலுவலகத்தின் பக்கத்தில் வந்ததும் ரிலாக்ஸ் செய்யும் நோக்கத்தில் உணர்ச்சி வசப்பட்டு, இடப்புறத்தில் உள்ள 70 மாடி மல்டி ஸ்டோரி கட்டடத்தை நன்கு கழுத்தை ஒடித்து நோக்கிவிட்டேன். இப்போது என் கழுத்தை இந்தியன் தாத்தவிடம் கொடுத்து வர்ம கலையில் தான் சரி பண்ண வேண்டுமென நினைக்கிறேன். சரிந்த கழுத்துடன் இந்த கட்டுரையை தட்டச்சு செய்யும் போது எதிரே உட்கார்திருக்கும் என் சக பெண் ஊழியர் அவளை பார்ப்பதாக நினைத்து பண்ணும் அலப்பரை தாங்க முடியவில்லை.
அருஞ்சொற்ப் பொருள் :
அலப்பரை - இதன் பொருள் 'பந்தா' அல்லது 'அல்டாப்பு' என்றுப் பெயர். திருநெல்வேலி, மதுரை வட்டாரச் சொல்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
//இப்போது என் கழுத்தை இந்தியன் தாத்தவிடம் கொடுத்து வர்ம கலையில் தான் சரி பண்ண வேண்டுமென நினைக்கிறேன்//
:)))
:)))
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ