-ல் போட்டுத் தாக்கியது
ஆட்டோ ஃகிராப்
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
நெல்லை போத்தீஸ் ஜவுளிக் கடை பொம்மையிலிருந்து, கோவில்பட்டி ஷகிலா முதல் கொண்டு, சென்னை மந்த்ரா வரை எனக்குள் ஆட்டோ ஃகிராப் போட்டவர்கள் எத்தனைப் பேர். முழுவதும் படமாக எடுக்க வேண்டுமென்றால் ஒரு படம் 1 மாதம் வரை ஓடும். எப்படி இருந்தாலும் ஒரு மனிதனின் முதல் ஆட்டோ ஃகிராப் பாறங்கல்லாக அவன் மனதில் வாழ்க்கை முழுவதும் கனத்துக் கொண்டிருக்கும் என்றுக் கேள்விப் பட்டிருக்கிறேன். என் முதல் ஆட்டோ ஃகிராப் அவ்வளவாக கனக்கவில்லை ஏனென்றால் அவள் 40 கிலோ தான்.
செல்லரித்துப் போன என் ஞாபக டைரியைப் புரட்டுகிறேன். அப்போதும் அந்த டைரி தான் என் நண்பன். டைரியின் முதல் பக்கத்தைப் புரட்டுகிறேன். "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே....." இது கோரஸ்.
டைரியின் முதல் பக்கத்தில் "நான் செத்தப் பிறகு தான் இந்த டைரியை நீங்கள் படிக்க வேண்டும்" என்ற வாக்கியத்தின் கீழ் இரண்டு கண்கள் வரைந்து கண்ணீர் சொரிந்தன.
கண்ணீருடன் அடுத்தப் பக்கத்துக்கு போகிறேன். "குழாயடியில் தண்ணீர் பிடிக்கும் போது தான் உன்னை முதன் முதலில் சந்தித்தேன். எப்போது எனக்கு தண்ணீர் பிடிக்க வழிவிட்டாயோ என் மீது உள்ள உன் காதல் தெள்ளத் தெளிவாகி விட்டது"
அடுத்தப் பக்கம் "உனக்காக தெருமுனையில் காத்திருந்து காத்திருந்து நான் உன் தெருவுக்கு சம்பளமில்லாத கூர்கா ஆகிவிட்டேன்"
அடுத்தப் பக்கம் "உன் மீது என் காதல் சொல்லாமல் ஏங்க ஏங்க எனக்கு அழுகை அழுகையாக வருகிறது. நேற்று தான் ஹார்மோன்கள் பற்றி பாடப் புத்தகத்தில் படித்தேன். 'ஹார்மோன்கள் கும்மியாட்டம் போட நீ என்னை வேப்பிலை அடிக்கிறாய்' ஆக கவிதை. இப்போதெல்லாம் கவிதை அருவியாகக் கொட்டுகிறது"
அதற்கு அடுத்தப்பக்கம் ஒரு சுட்ட கவிதை "சூடானப் பொருளை எதுவும் உண்ண மாட்டேன் ஏனென்றால் இதயத்தில் இருக்கும் உன்னை அது சுட்டுவிடும்"
அடுத்தப்பக்கம் "உன் அப்பன் அந்த நண்டுத்தலையனை ஜெயிலில் பிடித்துப் போடவேண்டும். உனக்கு கல்யாண ஏற்பாடு பண்ணுவதாகக் கேள்விப் பட்டேன்"
அடுத்தப்பக்கம் "ஹிம். உனக்கு கல்யாண ஏற்பாடும் பண்ணிவிட்டார்கள். உன் அப்பன் நண்டுத்தலையனை திரும்பவும் ஜெயிலில் போட வேண்டும். நீ காதலித்தவனையே மணமுடித்து வைக்கிறானே"
அடுத்தப்பக்கம் "இப்போது தான் தெரிந்தது உன் வயது. நீ உருவத்தில் குட்டியாக இருந்ததால் உன் வயது தெரியாமல் காதலித்து விட்டேன், 16 வயது ஆகும் எனக்கும் 21 வயதாகும் உனக்கும் ஒத்து வராது தான்.என்னுடைய முதல் காதல் மண்ணாங்கட்டியாக கண்ணீரில் கரைகிறது. அதனால் என்ன உன் தங்கை கீதா என்னை விட வயதில் குறைந்தவளாகத் தான் இருக்க வேண்டும். நான் அவளை வேண்டுமானால் பார்த்துக் கொள்கிறேன் ". பின்னாடி "ஆ ஆ ஆ" என்று ஆறு பேர் எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைப்பில் கோரஸ் பாடுகிறார்கள்.
அடுத்தப்பக்கம் "அன்பே கீதா! உன் அக்கா கல்யாணத்திற்காக அல்வா கொண்டுவந்து என் வீட்டில் கொடுத்தாய். அதை பத்திரமாக நான் கண்ணாடிப் பெட்டியில் வைத்திருக்கிறேன் தெரியுமா"
இதை எழுதிக்கொண்டிருக்கும் போதே வீட்டின் அடுத்தப் பக்கத்திலிருந்து என் மனைவியின் குரல் "என்னங்க என்னங்க"
திரும்பிய நான் அதிர்ந்தேன், என் மனைவி கையில் ஒரு துடைப்பக் கட்டை. "முதல்ல எந்திரீங்க...." ஆட்டோ ஃகிராப் கலைந்து திகிலுடன் மெதுவாக எழுந்திரிக்க. அவர்கள் என்னை முறைத்துக் கொண்டே, துடைப்பகட்டை தலையில் உள்ளங்கையால் இரண்டு இரண்டு தட்டு தட்டிவிட்டு ஆயத்தமானர்கள், நான் கிழித்துப் போட்ட குப்பையை சுத்தம் செய்ய....
செல்லரித்துப் போன என் ஞாபக டைரியைப் புரட்டுகிறேன். அப்போதும் அந்த டைரி தான் என் நண்பன். டைரியின் முதல் பக்கத்தைப் புரட்டுகிறேன். "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே....." இது கோரஸ்.
டைரியின் முதல் பக்கத்தில் "நான் செத்தப் பிறகு தான் இந்த டைரியை நீங்கள் படிக்க வேண்டும்" என்ற வாக்கியத்தின் கீழ் இரண்டு கண்கள் வரைந்து கண்ணீர் சொரிந்தன.
கண்ணீருடன் அடுத்தப் பக்கத்துக்கு போகிறேன். "குழாயடியில் தண்ணீர் பிடிக்கும் போது தான் உன்னை முதன் முதலில் சந்தித்தேன். எப்போது எனக்கு தண்ணீர் பிடிக்க வழிவிட்டாயோ என் மீது உள்ள உன் காதல் தெள்ளத் தெளிவாகி விட்டது"
அடுத்தப் பக்கம் "உனக்காக தெருமுனையில் காத்திருந்து காத்திருந்து நான் உன் தெருவுக்கு சம்பளமில்லாத கூர்கா ஆகிவிட்டேன்"
அடுத்தப் பக்கம் "உன் மீது என் காதல் சொல்லாமல் ஏங்க ஏங்க எனக்கு அழுகை அழுகையாக வருகிறது. நேற்று தான் ஹார்மோன்கள் பற்றி பாடப் புத்தகத்தில் படித்தேன். 'ஹார்மோன்கள் கும்மியாட்டம் போட நீ என்னை வேப்பிலை அடிக்கிறாய்' ஆக கவிதை. இப்போதெல்லாம் கவிதை அருவியாகக் கொட்டுகிறது"
அதற்கு அடுத்தப்பக்கம் ஒரு சுட்ட கவிதை "சூடானப் பொருளை எதுவும் உண்ண மாட்டேன் ஏனென்றால் இதயத்தில் இருக்கும் உன்னை அது சுட்டுவிடும்"
அடுத்தப்பக்கம் "உன் அப்பன் அந்த நண்டுத்தலையனை ஜெயிலில் பிடித்துப் போடவேண்டும். உனக்கு கல்யாண ஏற்பாடு பண்ணுவதாகக் கேள்விப் பட்டேன்"
அடுத்தப்பக்கம் "ஹிம். உனக்கு கல்யாண ஏற்பாடும் பண்ணிவிட்டார்கள். உன் அப்பன் நண்டுத்தலையனை திரும்பவும் ஜெயிலில் போட வேண்டும். நீ காதலித்தவனையே மணமுடித்து வைக்கிறானே"
அடுத்தப்பக்கம் "இப்போது தான் தெரிந்தது உன் வயது. நீ உருவத்தில் குட்டியாக இருந்ததால் உன் வயது தெரியாமல் காதலித்து விட்டேன், 16 வயது ஆகும் எனக்கும் 21 வயதாகும் உனக்கும் ஒத்து வராது தான்.
அடுத்தப்பக்கம் "அன்பே கீதா! உன் அக்கா கல்யாணத்திற்காக அல்வா கொண்டுவந்து என் வீட்டில் கொடுத்தாய். அதை பத்திரமாக நான் கண்ணாடிப் பெட்டியில் வைத்திருக்கிறேன் தெரியுமா"
இதை எழுதிக்கொண்டிருக்கும் போதே வீட்டின் அடுத்தப் பக்கத்திலிருந்து என் மனைவியின் குரல் "என்னங்க என்னங்க"
திரும்பிய நான் அதிர்ந்தேன், என் மனைவி கையில் ஒரு துடைப்பக் கட்டை. "முதல்ல எந்திரீங்க...." ஆட்டோ ஃகிராப் கலைந்து திகிலுடன் மெதுவாக எழுந்திரிக்க. அவர்கள் என்னை முறைத்துக் கொண்டே, துடைப்பகட்டை தலையில் உள்ளங்கையால் இரண்டு இரண்டு தட்டு தட்டிவிட்டு ஆயத்தமானர்கள், நான் கிழித்துப் போட்ட குப்பையை சுத்தம் செய்ய....
இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ