-ல் போட்டுத் தாக்கியது
புதுசு கண்ணா புதுசு
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
மனுசனுக்கு புதுசா எதும் கிடைச்சவுடன் அவன் போக்கு யாருக்கும் தெரியாது. நேத்திக்கு வரைக்கும் முழுக் கைச்சட்டையை அணிந்துக் கொண்டு, கால் சட்டைக்குள் அதை விட்டுக் கொண்டு டிப்டாப்பாக அலைபவரிடம் ஒரு மாற்றம் தெரியும். அன்னிக்கு மட்டும் சட்டையின் கையை மடக்கி விட்டுருப்பார். அவரே போவோர் வருவோரிடன் அந்த தெரு எந்தப் பக்கம் உள்ளது என்பதை கையை நீட்டி நீட்டி தேவையில்லாமல் கேட்டுக் கொண்டிருப்பார். 5 நிமிடத்துக்குள் 30 தடவையாவது கைக்கடிகாரத்தில் மணி பார்த்துக் கொண்டிருப்பார். கையை விழுக் விழுக் என ஆட்டுவார். ஏனைய்யா இப்படியென்று கேட்டேன் "பார்த்த தெரியலையா? கையில புது வாட்ச் கட்டியிருக்கம்லெ". ஆமாங்க வாட்ச் புதுசு கண்ணா புதுசு.
நடந்து போயிட்டுருந்தவன் இன்னிக்கு பைக்ல போறான்னா, அவன் வீட்டுல இருக்கிற எல்ல பழைய துணியும் 1 வாரத்துல காலியாயிரும். சரக்...சரக்னு கால நேரம் பார்க்காம பைக்கை துடைச்சிட்டுருப்பான். "ஏலே சாப்பிட வாடா" அவங்க அம்மா. "போம்மா, பைக் வீல்ல மண்ணு பட்டுடிச்சில்ல துடைச்சிட்டு தான் வருவேன்" அதற்கு இவன். ஒரு மாதம் கழித்து அவங்க அப்பா "ஏன்டா கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? புதுசா வண்டி வாங்கிக் கொடுத்தேனே... வாரத்துக்கு ஒரு தடவையாவது துடைக்கக் கூடாதா?". எல்லாம் அப்போ புதுசு கண்ணா புதுசு.
புதுசா கேமிரா வாங்கியவன் கண்ணில் பட்டத எல்லாம் P.C.ஸ்ரீராம் ரேஞ்சுக்கு படம் புடிச்சிட்டுருப்பான். "ஏண்டா கரப்பான் பூச்சியெல்லாம் படம் புடிச்சிட்டு இருக்கே" நான் கேட்டேன். "ஹி ஹி... கரப்பான் பூச்சின்னா வொய்ப்புக்கு புடிக்கதில்ல. அதுக்கு தான்" அதற்கு அவன். எல்லாத்துக்கும் காரணம்.. கையில இருக்கும் அது.... புதுசு கண்ணா புதுசு.
இதெல்லாம் போகட்டும். புது மனைவி வந்த மட்டும் எப்படி? அவனவன் கொஞ்ச நாளைக்கு இந்த உலகத்துக்கு லீவு உட்டுருவாங்க....
"ஏங்க field-ல நிறைய புதுசா வந்திருக்குப் போல" - இது மனைவி
"ஆமாண்டி, Field போறது படு ஸ்பீடாத் தான் இருக்கு. ஜாவாய்ங்கிறாய்ங்க... ஜகார்த்தாங்கிறான்ய... சி-யோட வளர்ச்சியில்லாம நின்னு போன எனக்கு ஒன்னும் புரியலிடி." - இது கணவன்.
"விளையாடாதீங்க. நான் என் பீல்டை(Field) சொன்னேன்"
"உன் பீல்டா? 10 ஆம் வகுப்போட நின்னு போன உனக்கு என்னடி பீல்டு இருக்கு".
"அதாங்க அந்த ஜீவல்லரி (Jewellery) பீல்டு. நேத்திக்கு பீல்டு இருக்கும் கடையில ஒரு புது மாடல் ஓட்டியாணம் பார்த்தேங்க". புதுசு கண்ணா புதுசு.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
புதுசு வாங்கினவங்க எப்படி இருப்பாய்ங்கன்னு சொன்னீங்க, "புதுசு கண்ணா புதுசு" (இலவச இணைப்புகளோட) வாங்கினவங்க என்ன பண்ணுவாய்ங்கன்னு சொல்லவே இல்லீங்களே அண்ணாச்சி
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ