<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/9439067?origin\x3dhttp://halwacity.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

மக்களுக்கான புதிய பொழுதுபோக்கு

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
மக்களுக்கான புதிய பொழுதுபோக்கு சன் டி.வி நியூஸ். மனசுல எவ்வளவு தான் கவலை இருந்தாலும் சன் டி.வி நியூஸ் பார்த்தவுடன் அவ்வளவு லேசாகி விடும். முதலில் சில கோமாளிகளை செய்தி வாசிப்பதாக காண்பிப்பார்கள். அவருடைய கோட், டை பார்த்தவுடனே லைட் மூடாகி விடுவீர்கள். செய்தி வாசிப்பவர் அணிந்திருக்கும் டையில் இருக்கும் யானை குதிரை படத்தைப் பார்த்தவுடன் குழந்தைகளும் குஷியாகி விடுவார்கள்.

அதைவிட பொழுது போக்கு காலை 5 மணி செய்தி. அது இரவு 9:00 மணி சன் நியூஸின் நியூஸ் என்றாலும், செய்தி வாசிப்பவரின் பின்னாடி இருக்கும் கண்ணாடி அறைக்குள் நடக்கும் காட்சிகள் காண கண் கோடி வேண்டும். பேசாமல் நியூஸின் விருவிருப்பை கூட்ட, அலுவலகம் மூடும் நேரம் ஆகையால் அலுவலகத்தை சுத்தம் செய்ய துப்பரவு பணியாளர்களை துடைப்ப கட்டையுடனுன், ஒட்டடை குச்சியுடனும் அந்த கண்ணாடி அறையில் உலாவ விடலாம்.

சன் டி.வி என்பது தி.மு.க வின் பிரச்சார தண்ணி லாரி என்று அது தான் நமக்கு எல்லாம் தெரியுமே. ரெண்டொரு நாள் முன்பு ஒரு செய்தி "வேலை நீக்கம் செய்யப்பட்ட சாலை பணியாளர்கள் 18 முறை போராட்டம் செய்து கண்டுக் கொள்ளாத தமிழக அரசை கண்டுக் கொள்ள வைப்பதாக 19வது முறையாக மீண்டும் போரட்டம்". இப்படி அருமையாக வாக்கியம் போட்டு செய்தி வாசிப்பார்கள்.

'பரபரப்பு' என்பது சன் டி.விக்கு ஒதுக்கப்பட்ட ஒரு வார்த்தை. ஒரு நாளைக்கு 3 முறை பயன்படுத்தா விட்டால் நியூஸ் நான்சென்ஸாக தான் இருக்கும். "ஜெயந்திரர் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் காஞ்சியில் பரபரப்பு ஏற்ப்பட்டது" என்று குறுக்காலும் நெடுக்காலும் செல்லும் சைக்கிளையும், பஸ்ஸையும் க்ளிப்பிங்ஸாக காண்பிப்பார்கள். அதை பார்த்து ஏமாந்த நான் என் உறவினர் ஒரு காஞ்சியில் இருக்கிறார், அவரிடம் போன் போட்டு காஞ்சியில் ஒரே பரபரப்பு போல என்று கேட்டுத் தொலைக்க, அவரோ "அட நீங்க வேற, அவன் அவன் வேலையை பார்த்துட்டு போயிட்டு இருக்கான். அவங்க அவங்க தான் அவங்க அவங்க வேலையில பிஸியா இருக்கானுங்க" என்றார்.

கருணாநிதி பற்றி ஒரு செய்தி கட்டாயம் இருக்க வேண்டும். அவருக்கு ஒரு நாள் வேலையே ஒரு ஸ்டேட்மண்ட் எழுதி வாசிப்பது தான். உமாபாரதி அப்படி, சோனியா இப்படி, மன்மோகன் சிங் எப்படி என்று சொல்வது தான் அவருடைய ஒரு நாளைய வேலை. அதாவது பெண்கள் வீட்டில் பேசுவார்களே, புரணி என்று சொல்வார்களே, இந்த வீட்டைப் பற்றி, அந்த வீட்டைப் பற்றி.... அப்படி தான் கருணாநிதி பேசுவார். சன் டி.வியில் கருணா நிதி ஸ்டேட்மெண்ட் வாசிக்காவிட்டால்,அன்று கருணா நிதி தயாளு அம்மாவிடம் மோர் குழம்பு வாங்கி சாப்பிட்டார் என்றாவது கட்டாயம் ஒரு நியூஸ் இருக்கும்.

இதெல்லாம் பார்க்கனுமா? பார்க்கனுமே வேற வழி, வேற டி.வியும் இல்ல. என்ன பண்றது சொல்லுங்க?

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
ஹஹ்ஹா...அப்படி போடுங்க அருவாளை..!

மூக்கனாரே...(http://mynose.blogspot.com) ஓடியாங்க இந்தப்பக்கம்...நான் 'விட்ட' பணியை நம்ம விஜய் அண்ணாத்தே ஆரம்பிச்சிட்டாரு பாருங்க!
 
உங்களோட இந்த பதிவு மட்டும் எந்த வகையில சேர்த்தி?
 
சன் நியூஸ் மாதிரியே உங்க பதிவும் ரொம்ப தமாஷா,பரபரப்பா இருக்கு.
 
தயாளு அம்மாவிடம் மோர் குழம்பு வாங்கி சாப்பிட்டார் என்றாவது கட்டாயம் ஒரு நியூஸ் இருக்கும்
:-))
usha
 
To do laughter therapy, you can watch JeyaTV in general(not just news....)
 
To do laughter therapy, you can watch JeyaTV in general(not just news....)
 
காளான் பிரியாணி நல்லா இருக்குதுங்கோவ்!

--பாண்டி
 
ம்ம் மறந்திட்டேனே!... மற்றவர்கள் பின்னூட்டத்தினை பார்க்கயில், ஒரே பதிவில் சன் டீவி க்கு இணையான இடத்த பிடிச்சிட்டீங்கனு சொல்றாங்கோ.....

ஒரு சாமான்யனின் ஒரு வலைப்பதிவு == 6 கோடி தமிழ் மக்கள் கண்டு களிக்கும்/ நடு நிலையான செய்திகளை எதிர்பார்ர்க்கும் டீவி!

ம்ம் .... வெளங்குன மாதிரிதான்!

--பாண்டி
 
பாண்டி அது எல்லாம் வஞ்சப்புகழ்ச்சி.நல்லா கவனிங்க.குறிப்பா 2,3 வது பின்னூட்டங்கள்.
 
புகழ்ச்சியும், இகழ்ச்சியும் என் மக்கிய மூளையை புதியதாக்கட்டும். யாவரின் புன்னகையில் தெய்வம் காண்பேன்.
 
Dear Vijay,
you & your team really have a superb sense of humour. aamaa, ivvaLavu pOttuth thaLLa eppadi saar ungaLukku "time" kidaikkiRadhu ?
hats off to your entire team. keep it up.
With Love & Best Wishes,
K. Raghu
k.raghu@microinks.com
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->