<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

'இசம்' பற்றிய கேள்விகள்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
நிறைய கேள்வி கேட்டால் அறிவாளி ஆகலாமுன்னு யாரோ சொன்னாங்க. 'இசம்' என்று முடியும் வார்த்தைகளை கலை இலக்கியத்தில் கேள்விப் பட்டிருக்கிறேன். எனக்கு இதில் எதுவுமே பிடிபடவேயில்லை. யாராவது இதற்கு விளக்கம் கொடுப்பீர்களா? பின்னூட்டம் இல்லையென்றால் உங்கள் தனிப்பதிவில் என்னுடைய (என்னை சேர்த்து பலபேர் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்) சந்தேகத்தை தீர்த்து வையுங்களேன். ஆயிரம் பொற்காசுகள் கொடுக்க முடியாத அளவில் இருக்கும் ஏழை ஆகையால், என் அறிவு கண்ணை துலக்கியவர் என்ற ஸ்தானத்தில் நீங்கள் வைக்கப்படுவீர்கள் என்பது உறுதி உறுதி உறுதி. சரி இப்போ 'இசத்திற்கு' போகலாம்.

1) நவீனத்துவம்(modernism) & பின் நவீனத்துவம் (Post modernism)

2) மேஜிகல் ரியாலிசம் (magical realism)
(இதை 'மாந்திரீக உண்மையியல்' என்று எங்கோ தமிழில் மொழிமாற்றப்பட்டிருந்தது. இதன் விளக்கம் தேடி ஆர்.வெங்கடேஷின் 'மார்க்குவெஸ்' பற்றிய புத்தகத்தை படித்து குழப்பம் தான் மிஞ்சியது. ஏதோ பந்து, பூ என்று விளக்கியிருந்தார். ஒன்னும் புரியல என் மரமண்டைக்கு)

3) இருத்தலியல் (அ) எக்ஸிஸ்டன்சியலிசம்

4) நியோரியலிசம் (Neo realism)

5) சுற்றியலிசம் (Surrealism)

அது போக ரோசவசந்த் பதிவில் அடிக்கடி பயன்படுத்தும்

6) சாடிஸம், மசாக்கிஸ்ட் என்றால் என்ன?

இதுக்கெல்லாம் கற்றோர்கள் விளக்கம் கொடுத்தா கல்லாதவர்கள் என்னைப் போன்றோருக்கு உதவியாய் இருக்கும் அல்லவா?

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
ஒண்ணும் புரியவில்லை தம்பி,
எனக்கு(ம்) ஒண்ணும் புரியவில்லை தம்பி!!!
 
நல்லா கேட்டீங்க விஜய்...

அப்படியே இதையும் பட்டியலில் சேர்த்துக்குங்க.

Expressionism, Rationalism, Transcendentalism, Irrealism, Grotesque Realism, Furturism, Absurdism.

ரோசாவசந்த், மாண்ட்ரீசர் மாதிரி (இன்னும் பச்சோலைகளாய் சத்தம் காட்டாமல் இருக்கும் பலர் மாதிரி) விசாலமாக வாசித்தவர்கள் ஒவ்வொரு இசத்திற்கும் உதாரணமாக ஒரு முன்னோடியின் படைப்பையும் (கேம்யூ - இருத்தலியல்), சமமான ஒரு இந்திய / தமிழ் படைப்பையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது அவர்கள் முன் நான் வைக்கும் வேண்டுகோள்.
 
அல்வா..

எனக்கும் ஒண்ணும் புரியலையேமா.. அறிவாளிங்க பதில் சொல்லுவாங்கோன்னு நம்புவோம்..

இனியவன்
 
அப்படியே எனக்கும் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்லுங்கப்பு

செக்யூலரிசம் (கருணாநிதி காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் போது), செக்யூலரிசம் (கருணாநிதி பிஜேபியுடன் இருக்கும் போது), நேஷனலிசம் (கருணாநிதி பிஜேபியுடன் இருக்கும் போது), செக்யூலரிசம் (கருணாநிதி காங்கிரஸ் கூட்டணியில்), ஷோசலிஸம் (கம்யூனிஸ்டுகள் எதிர்கட்சியாக இருக்கும்போது), ஷோசலிஸம் (கம்யூனிஸ்டுகள் வெளியில நின்னுகிட்டு உள்ள எட்டிபார்த்து ஆதரவு தரும்போது)
 
எனக்கு தெரிந்த வரையில சொல்றேம்பா... கேட்டுக்குங்க:

1) நவீனத்துவம்(modernism) - ஜீன்ஸ் பேன்டுல முன்னாடி கிழிச்சி வுட்டு போட்டுக்கிறது

& பின் நவீனத்துவம் (Post modernism) - அதே ஜீன்ஸ்ல பின்னாடி கிழிச்சி உட்டுக்கிறது

2) மேஜிகல் ரியாலிசம் (magical realism) - மந்திரவாதி காத்துல வரவழச்ச காச நாம கடையில கொடுக்கறப்ப கடக்காரன் காண்பிப்பது

3) இருத்தலியல் (அ) எக்ஸிஸ்டன்சியலிசம் - வீட்டுக்கு புழக்கடை பக்கமா இருக்கற புறம்போக்கு நிலத்துல செடி கொடி எல்லாம் வளர்த்து அப்படியே அபேஸ் பண்ணிக்கிறது

4) நியோரியலிசம் (Neo realism) - மேட்ரிக்ஸ் படம் பார்த்தவுடன் ஏற்படும் உணர்வு

5) சுற்றியலிசம் (Surrealism) - 4,5 பெயின்ட் டப்பாவ ஒன்னா கொட்டி அதும் மேல நாலு பசங்கள வெளயாட வுட்டு அதுல ஓவியம் கண்டுக்கிறது

6) மசாக்கிஸ்ட் - மஜா கிஸ் க்கு எழுத்துப்பிழையா?
 
ஆகா! ஆரம்பிச்சிட்டாரைய்யா முகமூடி நக்கலை. யோவ் முகமூடி தெள்ளுத்தமிழ்ல 'இசத்துக்கு' விளக்கம் கேட்ட கள்ளுத்தமிழ்ல குறிப்பால் உணர்த்தும் அணியை பயன்படுத்தி பதில் சொன்னா எப்படிப்பா?
 
கண்ணன்,

இசங்களை பலவிதங்களாக பிரிக்கலாம் போல. கலை,இலக்கியம்,அரசியல் என்று. எனது ஆர்வம் முதலில் படைப்பிலக்கியங்களில் 'இசம்' பற்றி முதலில் அறிய வேண்டும். நீங்கள் சொல்லுவது போல 'இசங்களை' கையாண்ட உலக இலக்கியங்கள், அதற்கு ஈடான இந்திய/தமிழ் இலக்கியங்களை தொகுத்து விளக்கம் கொடுக்கலாம்.[புத்தக பதிப்பாளர்களுக்கும்/இலக்கிய எழுத்தாளர்களுக்கும் நல்ல தலைப்பாகவும் அமையலாம்]. இந்த கான்சப்ட் நல்லாயிருக்கே.

நான் அடிக்கடி படிக்கும் மற்றும் தமிழ்மணத்தில் விரிவான வாசிப்பு பழக்கம் உள்ள பெயரிலி, மாண்டீ, ரோசா வசந்த்,தங்கமணி,சுந்தரவடிவேல் போன்றார்கள் மனம் வைப்பார்களா?

பின்னூட்டத்தை பார்க்கும் போது நிறைய பேர் 'இசங்களை' பற்றி தெரிந்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள் போல.

அரசியல் 'இசங்களை'யும் யாராவது எழுதினால் நல்லாயிருக்கும். என்னது முகமூடி நீங்க எழுத ஆசைப்படுறீங்களா? நக்கல் இல்லாம சீரியஸ்ஸா எழுதுவீங்களா? :-)
 
6) சாடிஸம், மசாக்கிஸ்ட் என்றால் என்ன?


மற்றவரை துன்புறுத்துவதன் மூலம் இனபம் காணும் மனநிலை சாடிஸம்.
Marquis de Sade (1740–1814)என்ற பிரஞ்சு படைவீரன் - எழுத்தாளரின் பாலியல் வக்கிரங்களில் இருந்து இனபத்தை கண்டெடுப்பதைப்பற்றிய எழுத்துக்களில் இருந்து இந்த வார்த்தை உருவாக்கப்பட்டிருக்கிறது.
அவரது புகழ் பெற்ற நாவல் The Adversities of Virtue.

மஸாக்கிசம்: மற்றவர்களாலோ, மற்றவர்களாலோ துன்பத்துக்கு ஆட்படுவதில் இன்பம் காணும் மனநிலை.


Leopold von Sa·cher–Ma·soch (1836–1895), என்ற ஆஸ்திரிய எழுத்தாளரின் நாவல்கள் இப்படி இன்பமனுபவிக்கும் பாத்திரங்களைக் கொண்டவை. Venus in Furs என்ற நாவல் அவரது அனுபவங்களை பிரதிபளிப்பதாக சொல்லப்படுகிறது. இரண்டு சொற்களும் இலக்கியத்தில் மட்டுமின்றி, மருத்துவத் துறையிலும் பயன்படுத்தப்படுவன.


மற்ற இசங்களைப் பற்றிய எனது புரிதலை விளக்கி இன்னும் குழப்ப நான் ஒன்றும் சாடிஸ்ட் அல்ல. ஒரு விதத்தில் மாசாகிஸ்ட்டும் அல்ல. :))

வேறு யாராவது இன்னும் அழகாக, எளிதாக சொல்லமுடிந்தவர்கள் செய்தால் நல்லது.
 
திருத்தம்:

மஸாக்கிசம்: மற்றவர்களாலோ, அல்லது தன்னாலோ துன்பத்துக்கு ஆட்படுவதில் இன்பம் காணும் மனநிலை.
 
ரொம்ப ரொம்ப நன்றி தங்கமணி அண்ணாச்சி. சுருக்கென்று நச்சென்று கலக்கென்று அருமையான விளக்கம்.

//மற்ற இசங்களைப் பற்றிய எனது புரிதலை விளக்கி இன்னும் குழப்ப நான் ஒன்றும் சாடிஸ்ட் அல்ல. ஒரு விதத்தில் மாசாகிஸ்ட்டும் அல்ல. :))//

அண்ணாச்சி, நாங்களெல்லாம் மசாக்கிஸ்ட். நீங்க 'இசத்தை' பற்றி விளக்கி துன்பப்படுத்தினாலும் நான் இன்பம் காண்போம் :-))))
 
துளசியக்கா,

கண்ட கண்ட படத்தை பார்க்காம ஏதாவது வாசித்திருந்தா இப்படி ஒன்னுமே 'இசம்' பத்தி ஒன்னுமே புரியாம நின்னுருக்க மாட்டீங்களே.... :-)

இனியவன்,

நமது சந்தேகங்களை தீர்க்கும் புண்ணியவான்கள் வருவார்கள்.
 
நியோ ரியலிசம் : இது நிஜமான நிகழ்வுகளில் சற்றே கற்பனையையும் தங்களுடைய விருப்பத்தையும் சேர்த்து சொல்வது. பெரும்பாலும் கலைகள், திரைப்படங்கள் போன்றவற்றில் உபயோகிக்கபடுகிறது. நிஜமான நிகழ்வின் சற்றே மிகப்படுத்தி பாதிப்பு ஏற்படுத்த பெரும்பாலும் உபயோகிக்கிறார்கள்.
மாடர்னிசம்: கலைகளிலோ படப்புக்களிலோ சிந்தனையிலோ நைஜத்தைற்கு அப்பாற்பட்டு மாறுபட்டு சிந்திப்பதும் தெளிவு படுத்துவதும்.
போஸ்ட்மாடர்னிசம்: நவீனத்துவ அறிஞர்களின் கருத்திற்கு எதிர்மறையாக பழமையை கலந்து சிந்திப்பது. நவீனத்துவம், பின் நவீனத்துவம் போன்ற சிந்தனைகளே ஒரு கலாசரத்தின் போக்குகளை மாற்ற வல்லவை என்பது என் தனிப்பட்ட கருத்து.
சாடிசம், மாசகிசம் போன்றவை நம்மில் பலருக்கும் அடிமனதில் இருக்கும் உணர்வு. இதை மேலெழும்பாமல் அடக்க கற்றால் அதுவே பெரும் சாதனை. உதாரணமாக ஓணானை துன்புறுத்துவது
 
சர்ரியலிச்ம்: அடிமனத்தில் பதிந்துள்ள கற்பனைகளை சற்றே மாறுபட்ட பொருளில் சொல்வது.சில சமயங்களில் மன நல மருத்துவர்கள் குழப்பத்தில் உள்ள ஒருவனை ஓவியங்களை வரைய சொல்லி அதன் மூலம் வெளிப்படுத்தும் ஆழ்மனத்தி சிந்தனைகளை கற்றறிவார்கள். இன்னும் சில சமயம் சில ஓவியங்களை காட்டி அதன் விளக்க வுரையை கேட்கும் போது ஆழ்மனத்தி சிந்தனைகள் அதில் வெளிப்படும்.மேற்சொன்ன அளவில் தான் நான் அறிந்தது. மாறுபட்ட கருத்துக்களை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
 
இன்றைய தினமலரின் தங்கள் வலைப்பதிவைப் பற்றிய செய்தி வந்துள்ளது. வாழ்த்துக்கள்
 
http://dinamalar.com/2005june01/flash.asp

பாராட்டுக்கள் மாயவரத்தான், இட்லிவடை, பாலா மற்றும் அல்வாசிட்டி விஜய்
 
முதலில்,
http://dinamalar.com/2005june01/flash.asp
இதற்கு வாழ்த்துக்கள் :)

அடுத்து, நீங்கள் கேட்ட சில வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் ...

மஸாகிஸம் --- தாங்கள் அடிமைப்படுவதில், தங்கள் உடல்/மனம் துன்புறுவதில் இன்பம் பெறுதல்

சாடிஸம் --- மஸாகிஸத்துக்கு எதிர்மறையாக, மேற்கூறியவற்றை பிறர் மீது செய்து பார்ப்பதில் இன்பம் அடைதல் !

(உதாரணமாக, "புரியாத" பதிவுகள் எழுதி சக வலைப்பதிவாளர்களை வதைப்பதும் இதில் அடங்கும் ;-)
 
//(உதாரணமாக, "புரியாத" பதிவுகள் எழுதி சக வலைப்பதிவாளர்களை வதைப்பதும் இதில் அடங்கும் ;-)
//
;)

பாராட்டுக்கள் அல்வாசிட்டி விஜய், மாயவரத்தான், இட்லிவடை மற்றும் பாலா
 
மிக்க மிக்க நன்றி பத்மா அர்விந்த் அவர்களே. நல்லதொரு சிறுவிளக்கங்கள் சில 'இசங்களை' பற்றி. முன்னுரை கொடுத்திட்டீங்கள்ள அப்படியே knowledge-அ டெவலப் பண்ணிறலாம்.


அப்புறம் தினமலர் செய்திக்கு கோபிக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும். வாழ்த்துக்கள் தெரிவித்த பாண்டியன், கோ.கணேஷ்,குழலி, பாலா,லபக்கு தாஸ்.

பாலா தாங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
 
LL Das,
vAzththukkaLukku mikka nanRi !!!
I do not want to be a sadist ;-)
 
1. Modernism:

புள்ள குட்டி பெத்துக்கிட்டு, கல்யாணந்தான் கட்டிக்கலாமா என்பது Modernism.

'இசம்' பற்றிய எனது ஓரப் பார்வை ! இங்கே.."
 
Kavignar Bala (he is thalaivar of Tamil Sahitya Academy Kuzu now) has written a Tamil book (in 80s I guess) called "Surrealism oru Arimugam". Good one. please read it if u get it.
 
புத்தகம் அறிமுகம் கொடுத்த பி.கே.எஸ்-க்கு நன்றி. புத்தகத்தை தேடிப்படிக்கிறேன். ஞாநி இருத்தியலைப் பற்றியும், நம் இலக்கியத்தில் அதன் பயன்பாடுகள் பற்றியும் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். நூலகத்தில் பார்த்த ஞாபகம். கூடிய விரைவில் விளக்கம் தருகிறேன்.

தனிப்பதிவில் விளக்கம் தந்து அசத்திய ஞானபீடத்திற்கும் நன்றி.

லபக்கு தாஸ்க்கு நன்றி சொன்ன பாலாவுக்கும் நன்றி.... ஹி ஹி :-))
 
விக்கிபீடியாவில் 'இசம்' பற்றிய செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. நேரமும் பொறுமையும் இருந்தால் வெற்றி உங்களுக்கே. கீழே சில சுட்டிகள்

நவீனத்துவம், பின் நவீனத்துவம்:

http://en.wikipedia.org/wiki/Modernism

http://en.wikipedia.org/wiki/Post-modernism

சாடிசம், மஸ்க்கிஸ்ட்

http://en.wikipedia.org/wiki/Sadism

சுர்ரியலிசம்

http://en.wikipedia.org/wiki/Surrealism

இருத்தலியம், நியோரியலிசம், மேஜிக்கல் ரியாலிசம்

http://en.wikipedia.org/wiki/Existentialism

http://en.wikipedia.org/wiki/Neorealism

http://en.wikipedia.org/wiki/Magical_realism

மற்ற இசங்களுக்கு தேடி பொறியில் தட்டி தேடலாம். கலக்கல் இன்போ.
 
Vijay,
You can get information for all isms you listed in wikipedia.
 
விஜய், உங்கள் பதிவை பார்த்தேன். எனக்கு சொல்ல சில விஷயங்கள் உண்டு எனினும், விரிவாய் எழுதாவிட்டால், தவறாய் போகும் பாதகம் காரணமாய் இப்போது எதுவும் முடியாது(இனி வரும் மூன்று வாரங்களுக்கும் எதுவும் முடியாது.) இணையத்தில் எல்லாமே விளக்கமாய் உள்ளது. சிவக்குமார் குறிப்பிட்ட பாலாவில் 'சர்ரியலிசம்'('ஒரு அறிமுகம்' என்று தலைப்பில் வரும் என்று நினைவிலில்லை) புத்தகம் எளிமையான அறிமுகத்திற்கு உகந்தது. எஸ்.வி.ராஜதுரை இருத்தலியல் பற்றி எழுதியுள்ளார், ஆனால் அதை படிப்பதற்கு இலகுவானது அல்ல(மேலும் சில பிரச்சனைகளும் உண்டு என்பது என் கருத்து.) நம்ம பெயரிலி கூட பதிவுகளில் மேஜிக்கல் ரியலிஸம் பற்றி ஒரு நல்ல கட்ட்டுரை எழுதியிருந்தார்.

நவீனத்துவம், பின் நவீனத்துவம் பற்றி வேறுபடும் விளக்கங்கள் கிடைக்க கூடும். பழமையை முழுமையாய் நிராகரித்து வந்ததாய் (ஒரு பொத்தாம் பொதுவாய்) நவீனத்துவம் பற்றி சொல்ல முடியுமெனில், பழமையை ஓரு முரண்நகை(irony)யுடன் ஒப்புகொண்டு(acknowledge) செய்வதை பின் நவீனத்துவம் என்கிறார்கள். நவீனத்துவம் ஒரு வகை ஒழுங்கை, மையத்தை, தெளிவை நோக்கிய செய்ல்பாட்டை பரிந்துரைத்தால், பின் நவீனத்துவம் மையத்திற்கு எதிராய், சிதறலை முன்வைப்பதை, குழப்பத்தை அங்கீகரிப்பதையும், நவீனத்துவத்தை நையாண்டி செய்வதாகவும் வெளிப்படுகிறது. காஃப்கா, காம்யூவை நவீனத்துவ எழுத்துக்கு உதாரணமாய் சொல்லலாம். ஜேம்ஸ் ஜாய்ஸின் டப்ளினர்ஸ் நவீனத்துவ எழுத்து. ஆனால் யுலீசியஸில் கொன்சம் தொட்டும், 'பினிகன்ஸ் வேக்'கில் முழுவதுமாய் பின் நவீனத்துவமாகிவிடுகிறார். இது இலக்கியம் என்றால், அரசியல் பார்வையில் பெருங்கதையாடல்களின்(metanarratives) தோல்வியை ஒப்புகொண்டு அதை நிராகரித்து, அதற்கு எதிராய் சிறுகதையாடல்களை வைப்பதையும், சாரம்ச படுத்துவதற்கு எதிரானதையும் பின் நவீனத்துவம் எனலாம். உதாரணமாய் இஸ்லாம், பைபிள், மனு தர்மம், மார்க்சியம் இவயெல்லாம் ஒரு வகை பெருங்கதையாடல். இன்னும் அறிவியலே ஒரு பெருங்கதையாடல் என்று சொல்பவர் உண்டு என்றாலும் எனக்கு ஏற்புடையது அல்ல. தலித்தியம், நர்மதா அணைக்கு எதிரான இயக்கம் இவற்றையும் இவற்றில் பயன்படுத்த்படும் சொல்லாடல்களையும் பார்த்தால் அது சிறுகதையாடல். எல்லா காலகட்டத்துக்கும் பொருந்த கூடிய உண்மையையும், கோட்பாடுகளையும், தீர்ப்புகளையும் நிராகரிப்பது பின் நவீனத்துவம். இப்படி சொல்லி பின் நவீனத்துவத்தையும் சாரம்சபடுத்துவது உண்டு என்பது என் கருத்து. தமிழில் அ.மார்க்ஸ், நாகார்ஜுன என்று எதிரும் புதிருமாய் தன்னை பின் நவீனத்துவவாதைகளாய் அறிவித்து கொண்டவர்கள் உண்டு. இதில் என் கருத்துப்படி நாகாரஜுனனின் செயல்பாடுகள் தெளிவாய் பின்நவீனத்துவமானவை. அ.மார்க்ஸ் அரசியல்ரீதியாய் பின் நவீனத்துவத்தை பார்ப்பவர். ஆனால் அவரின் பல கட்டுரைகள் சாரம்சபடுத்துபவை. எனக்கு அ.மார்க்ஸ் மீது மிகுந்த மரியாதை உண்டு எனினும், அவர் பின்நிவீனத்துவம் என்று சொல்லி அதையும் சாராம்ச படுத்துவதாகவே தோன்றுகிரது-சில சமயங்களில்.


ஏதோ இப்போது தோன்றிய்யது. தட்டியுள்ளேன். இன்னும் வாசித்து விவாதத்தை தொடங்கினால் பிறகு வருகிறேன். ஆனால் கடைசியாய் ஒரு விஷயம். நான் ஏதோ அதிக வாசிப்பனுபவம் உள்ளவனாய் பார்க்க படுவது சரியல்ல. மாண்ட்ரீஸர், ரவி ஸ்ரீனிவாசுடன் ஒப்பிட்டால் நான் காற்றில் அலையும் ஒரு தூசு. கொஞ்சம் அப்படி இப்படி -நாய் வாயை வைத்தது போலவோ, மாடு புல் மேய்ந்தது போலவோ- அவ்வப்போது வாசித்திருக்கிறேன் என்றாலும். நன்றி!
 
விக்கிபீடியாவை குறிப்பிட்டுள்ளதை பார்க்கவில்லை. அதில் இன்னும் விளக்கமாய் இருக்கும்.
 
விளக்கங்களுக்கு நன்றி ரோசாவசந்த். விக்கிபீடியாவில் ஆயிரம் தான் ஆங்கிலத்தில் இருந்தாலும் தமிழ் விளக்கம் படிக்கும் போது நல்ல தான் இருக்கு? அதுக்கு தான் கேட்டேன். இந்த இசங்களையும் அது பயன்படுத்தப்பட்டுள்ள இலக்கியங்களை படிக்க வேண்டும் ஒரு நப்பாசை தான்.

உங்கள் பதிவுகளில் உங்களின் சில கருத்துக்களில் என்னுடைய அபிப்ராயம் வேறுபட்டு இருந்தாலும் கட்டுரையில் உங்கள் கருத்தை வலியுறுத்தும் விதம், (சினமில்லாமல்)பயன்படுத்தப்படும் வார்த்தைகள், விரிவாக சில விளக்கங்கள் கொடுப்பதால் பொதுவாகவே படிக்க பிடிக்கும் என்பதால் நீங்கள் படிப்பாளி என்று எண்ணுவதை தடுக்க முடிவதில்லை. தொடரட்டும் உங்கள் சேவை. நன்றி.
 
பருப்பு ரசம்,பைனாப்பிள் ரசம், பன்னீர் ரசம்,மைசூர் ரசம், துளசி ரசம்
மிளகு ரசம்,தக்காளி ரசம் அப்படின்னு ஏதாவது கேட்டிங்கன்னா பரவயில்லை. எதோ இசம் கிசம்ன்னு அடா அடா டா உங்ககூட ஒரே தொல்லையா போச்சே..
எப்ப ஃபிரான்ஸ்க்கு வர்றீங்க, போட்டோஷாப்-இஸம் கற்றுக்கொள்வதற்கு தாங்க?
 
காஞ்சி,

'ரசம்' வயித்துக்கு 'இசம்' அறிவுக்கு. ரசம் சாப்பிட்டுக் கொண்டே கொஞ்சம் இசத்தையும் கேட்போமே.

உலகம் ரொம்ப சின்னது. போட்டோ ஷாப்பிஸம் கற்றுக் கொள்ள சீக்கிரமே உங்க வீட்டு கதவை தட்டலாம். அல்லது போட்டோ ஷாப்பிஸம் கற்றுக் கொடுக்க நீங்க என் வீட்டு கதவை தட்டலாம். :-))) கனிவான அழைப்புக்கு நன்றி.
 
பருப்பு ரசம், பைனாப்பிள் ரசம் கமெண்டைப் படித்ததும் நினைவுக்கு வந்தது. சுந்தர ராமசாமி ஒரு கவிதை எழுதியிருக்கிறார் அப்படி. சரியாக நினைவில்லை. எனவே நினைவிலிருந்து எழுதுகிறேன். வார்த்தைகளும் வரிகளும் மாறியோ தவறாகவோ இருக்கலாம். பொருள் ஒன்றுதான்.

மேற்கே ரொமாண்டிஸிஸம்
சர்ரியலிஸம்
ஸ்ட்ரக்சுரலிஸம்
.... .....
என் மனைவிக்குத்
தக்காளி ரசம்

என்று முடியும்.

இதைப் படித்துவிட்டு -

1. மனைவியைச் சமையல்காரியாகப் பார்க்கிற பிற்போக்கு பார்வையா இது
2. இந்தியப் பெண்கள் சமையல்கட்டிலேயே அடைந்து கிடக்கிறார்கள் என்பதை இக்கவிதை அழகாகச் சொல்கிறதா

என்றெல்லாம் ஏதும் ஆரம்பித்தால் - நான் ஆட்டத்தில் இல்லை :-)

அப்புறம் சொல்ல மறந்து போனது. கோவை ஞானியும் பின்நவீனத்துவம் போன்றவற்றைக் கட்டுரைகளில் தொட்டிருக்கிறார். விரிவாக எழுதியிருக்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை. தத்துவம் சார்ந்த விஷயங்களில் கோவை ஞானி அவற்றை அணுகுகிற, விவரிக்கிற எளிமையும் தர்க்கமும் எனக்குப் பிடிக்கும் (உடன்படுவோமா இல்லையா என்பதற்குள் போக வேண்டாம்.). அவர் ஓர் அருமையான ஆசிரியர் - தத்துவம் சார்ந்த விஷயங்களை அறிய.

அன்புடன், பி.கே. சிவகுமார்
 
சிவக்குமார்,

'என் மனைவிக்கு தக்காளி ரசம்' என்று கவிதையில் இருப்பதால் சந்தேகமே இல்லாமல் சுந்தரராமசாமி தான் அன்று சமைத்திருப்பார். ஆகையால் மனைவி, சமையல்காரி, சமையல்கூட உலகம் இந்த பிரச்சனை எல்லாம் வர சான்ஸ் இல்லே. :-)))
 
புதிய தலைமுறை இஸங்கள் குறித்து இங்கே காணலாம்: Knowledge.ppt - The Economic Times
 
அய்யோ பாலா கலக்கல் சுட்டி அது.

சிரிச்சி சிரிச்சி வயிறும் மாரும் வலிக்குதுப்போ...

நன்றி நன்றி
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->