<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

Marooned in IRAQ-ஈரானிய திரை அலசல்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
அப்பாஸ் கியாராஸ்டோமியும் இல்லை ஜாபர் பனாஹியும் இல்லை. பாமன் கோபாடி. இந்த ஈரானிய இயக்குநர் எனக்கு புதியவர் தான். A Time for drunken horses என்ற ஈரானிய படத்தை விடியோ கடையில் பார்த்திருந்தாலும் எடுத்து பார்க்க துணிந்ததில்லை. அவரின் 2வது படமான Marooned in IRAQ என் கையில் சிங்கை நூலகத்தின் வழியாக மாட்டியது. சில ஈரானிய படங்கள் மெதுவாக செல்வதால் ஈரானிய படங்கள் என்றாலே ஒரு தயக்கம் இருக்கும் எனக்கு. படங்கள் மெதுவாக சென்றாலும் படம் முடிந்தவுடன் நமக்குள் ஏற்படுத்தும் பாதிப்பு கொஞ்சம் அளவுக்கு மீறியே இருக்கும். ஆனால் கோபாடியின் Marooned in IRAQ சென்ற வேகமும், பளிச் கேமிராவும், கண்ணை கவரும் குர்திஸ்தானின் நிலபரப்பும் அதன் எழில் அழகும், குர்திஸ்தானின் கலாச்சாரப் பாடல்களும், கொஞ்சம் காமெடியுடன் கொஞ்சம் செண்டிமெண்ட்டும் அதிக அட்வெண்சருடன் என் எண்ணத்தை கவர்ந்தது. படம் பார்த்து தியேட்டரை விட்டு வெளியே வரும் போது சில படங்கள் மனதை மிக கனமாக்கி விடும். அத்தகைய படங்களில் ஒன்று Marooned in IRAQ.

கதைச்சுருக்கம்:

கதை சதாம் உசேனின் வளைக்குடா போருக்கு அப்புறம் ஈரான் ஈராக் குர்திஸ்தானில் நிகழ்ந்ததாக காண்பிக்கப்படுகிறது. படம் நெடுக சதாமை கேரக்டர்கள் வசைப் பாடிக்கொண்டே இருக்கின்றன. சதாம் உசேனால் பயன்படுத்தப்பட்ட குண்டுகளாலும்,வேதியியல் ஆயுதங்களாலும் பாதிக்கப்பட்ட குர்தீஸ் அகதிகள் படும் துன்பத்தை சுவாராஸ்யம் மிகுந்த பயணத்தால் கண் முன்னே நிறுத்துகிறது இந்தப் படம்.

மிர்சா ஒரு வயதானவர். குர்திஸ்தான் மக்களால் பெரிதும் மதிக்கப்படுகிற இசைக்கலைஞர்.தன் முதிர்ந்த மகன்கள் பரட்(Barat) மற்றும் அவ்தா (Audeh) உதவியுடன் 23 ஆண்டுகளுக்கு முன் இசைக்குழுவில் சையித் என்பவனுடன் ஓடிப்போன தன் மனைவி ஹனாராவின் அழைப்புக்கிணங்க அவளைத் தேடி ஈரான் குர்திஸ்தானிலிருந்து ஈராக் குர்திஸ்தான் வரை பயணிக்கின்றனர். இந்த பயணத்தினூடே சந்திக்கும் பலதரப்பட்ட சம்பவங்களின் மூலம் கதை நகர்கிறது.


கதாநாயகன் மிர்சா கிழவனும் அவருடைய மகன்களும் ஒரு குர்திஸ் அகதிகள் முகாமில்

ஹனாரா அருமையாக பாடக்கூடியவள். பாடுவதற்கு தனக்கு கட்டுபாடுகள் மிர்சாவிடம் இருந்ததால் சையித்துடன் ஓடிப்போய் இரான் இராக் எல்லையில் குர்திஸ்தான் மக்களை மகிழ்விப்பதற்காக பாடி வருபவள். மிர்சாவின் மூத்த மகன் பரட் கல்யாணம் ஆகாதவன். அவ்தா 7 மனைவிகளுடனும் 11 மகள்களுடனும் ஈரான் குர்திஸ்தான் ஒரு நிலப்பரப்பில் வாழ்பவன். கிழவன் மிர்சாவின் மனைவி ஹனாராவை அடியோடி வெறுக்கும் அவர்கள் குடும்ப மானத்தை கப்பலேத்தியவள் அவள், அவளை தேட வேண்டுமா? என்று கிழவனை கேட்க, கிழவன் "நம் குடும்ப மானத்தை காக்க நான் விவாகரத்துக் கூட செய்யவில்லை" என கூறுகிறார். 7 மனைவி 11 மகள்கள் இருப்பதை காரணம் காட்டி அவர்களை நான் காப்பாற்ற வேண்டும் வரமுடியாது என்று கூறும் அவ்தாவின் பேச்சை கேட்காமல் இழுத்து செல்கின்றனர். மூன்று பேரும் பரட்டின் பைக்கில் சவாரி செய்து ஹனாராவை ஒவ்வொரு இடமாக தேடிகின்றனர். ஆங்காங்கே அவர்களின் குர்திஸ்தான் இசையை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வாசித்து காட்டி மக்களை மகிழ்வித்துக் கொண்டே பயணத்தை தொடர்கின்றனர்.
பரட்டாக நடித்தவரும் அவ்தாவாக நடித்தரும் (பின்னால்).

ஒரு இசை நிகழ்ச்சிக்கு இடையில் இயற்கை கடனை கழிப்பதற்காக ஓரிடம் ஒதுங்குகிறான் பரட். அப்போது பெண் குரலை ஏந்தி இனிய கானம் காதில் விழ, பரட் பெண்ணை தேடுகிறான். பெண்ணின் முகம் படத்தில் காண்பிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக மாலை மயங்கும் சூரிய ஒளியில் அந்த பெண்ணின் நிழல் உருவம் தான் காண்பிக்கப்படுகிறது. குரலில் மயங்கிய பரட் அந்த பெண்ணிடம் "என்னை திருமணம் செய்துக் கொள்வாயா?" என கேட்கிறான். அதற்கு அந்த பெண் "நான் உன்னை திருமணம் செய்துக் கொண்டால் என்னை பாட விடுவாயா?" என திருப்பிக் கேட்கிறாள். "குர்திஸ்தானில் பெண்கள் பாடக் கூடாதல்லவா" என்று மறுக்கிறான். அவளும் அவனை நிராகரித்து விட்டு நிழலாகவே மறைகிறாள்.

வழிப்பறி கொள்ளையில் பைக்கை இழந்து விட வரும் கார், நடை என ஹனாராவின் இடத்தை நெருங்க முயல்கின்றனர். எங்குமே தோல்வி. குர்திஸ்தான் பனி படர்ந்த மலைகள் வழியாக மூவரும் பயணிக்க ஒரு ஆசிரியன் குர்திஸ்தான் அகதி Vs அனாதை குழந்தைகளுக்கு விமானம் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறான். மூவரையும் முகாமுக்கு கூட்டிச் சென்று வரவேற்று தங்க வைக்கிறான் ஆசிரியன். அங்கும் பாட்டுப்பாடி குழந்தைகளை அசத்துகின்றனர்.

அவ்தா அங்கு இருக்கும் குர்திஸ் பெண்ணை பார்த்து ஜொள்ளு விட்டுக் கொண்டே சொல்கிறான் "எனக்கு 7 மனைவிகள், 11 பெண் குழந்தைகள். எனக்கு ஒரே ஒரு ஆண் குழந்தை பிறந்தாலும் உடனே நான் திருமணம் செய்துக் கொள்வதை நிறுத்திக் கொள்வேன். நீ எனக்கு ஒரு ஆண் குழந்தைப் பெற்று தர திருமணம் செய்துக் கொள்வாயா?" என்கிறான்.

அந்த பெண் "7 பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்த நீ எட்டாவதாக என் வாழ்க்கையும் நாசம் செய்ய வேண்டுமா? ஆண் குழந்தை வேண்டுமென்றால் அனாதையாக இருக்கும் இந்த குர்திஸ் அகதி குழந்தையை தத்து எடுத்துக் கொள்" என்றவுடன் அவ்தா மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவிக்கிறான்.

ஆவ்தாவை தத்து எடுக்க ஏற்பாடு செய்துக் கொள்ளும் படி சொல்லிவிட்டு பரட்டுடன் மிர்சா பயணத்தை தொடர்கிறான்.

சாதமின் கெமிக்கல் ஆயுதத்தால் குர்திஸ்கள் கும்பலாக படுகொலை செய்யப்பட்டு பனிபடர்ந்த மலையில் புதைக்கப்பட்ட இடத்திற்கு மூவரும் வருகிறார்கள். அங்கு தோண்டப்பட்டு பல சடலங்கள் பெண்களின் அழுக்குரல்களினூடே எடுத்து செல்வதை பார்த்து இருவரும் திகைத்து நிற்கின்றனர். தனியாக தன் சகோதரனின் உடலுக்காக காத்திருக்கும் ஒரு பெண்ணை பரட் பார்க்கிறான். அவனை அவளுக்கு ஆறுதலாக இருக்கும் படி சொல்லிவிட்டு கிழவன் மிர்சா பனி படந்த அடந்த மலையில் தனியே பயணத்தை தொடர்கிறான்.

ஜிலு ஜிலு குர்திஸ்தான் பொண்ணு

எப்படியோ ஈரான் எல்லையை தாண்டி ஈராக்கில் உள்ள ஒரு முகமை அடைந்த மிர்சா ஹனாரவை பற்றி கேட்க அந்த பெண் "ஹனாரா உங்களை பார்க்க விரும்பவில்லை. கெமிக்கல் ஆயுத தாக்குதலால் தன் அழகையும் தன் இனிய குரலையும் இழந்து விட்டாள். அவள் கணவன் சையீதும் இறந்து விட்டான். சையீதின் கடைசி ஆசைப்படியும், ஹனாராவின் ஆசைப்படியும் நீங்கள் தான் சையீதை அடக்கம் செய்ய வேண்டும். அதோ பனி குவிக்கப்பட்டு சையீது உங்களுக்காகப் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். அடக்கம் செய்யுங்கள்" என கேட்டுக் கொள்கிறாள்.

சையீத்தை அடக்கம் செய்து விட்டு ஹனாராவை பார்க்க முடியாத தவிப்பில் கிளம்ப ஹனாராவின் மகள் சொனாரா கிழவன் மிர்சா கையில் ஒப்படைக்கப்பட, குழந்தையை முதுகில் தூக்கி வைத்துக் கொண்டு ஈராக் எல்லையில் போடப்பட்ட முள் வேலியை தாண்டி மிர்சா பயணமாகிறார்.

கதை முற்றியது.

யதார்த்தமாக நகரும் படத்தின் பலம் யதார்த்தமாக நடித்துள்ள மிர்சா மற்றும் அவரது மகன்கள். நடிகர்களின் முகம் மிக சுவாரஸ்யமானது. பாடல்களை அவர்கள் பாடும் தொனியும் தப்பட்டையை தூக்கி போட்டு பிடிக்கும் அவ்தா சாமர்த்தியமும், பரட் ஊதும் டாஃப் (daffs) வாத்தியமும் நம்மை ஆட்டம் போட வைக்கின்றன.மிக முக்கியமான விசயம் என்னவென்றால் அந்த மூன்று பாத்திரங்களும் இந்த படத்தில் தான் முதலில் நடித்துள்ளார்கள். யதார்த்தமான நடிப்பு, தலை நிறைய புசு புசு முடி வைத்திருக்கும் அவ்தா வழி நெடுக திட்டிக் கொண்டே வருவதும் கேரக்டர்களை மெருகூட்டுகிறது. வழியில் சந்திக்கும் ஒரு கிழவன் சந்தையில் எய்ட்ஸ்க்கு மாத்திரையென்று எந்த மாத்திரையோ விற்றுக் கொண்டிருப்பது யதார்த்தமான நகைச்சுவை.

அடுத்து சொல்ல வேண்டுமானால் பனி மலை மேல் அனாதை அகதி குழந்தைகளுக்கு விமானத்தைப் பற்றி பாடம் எடுக்கும் காட்சி. மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பேப்பர் விமானம் செய்து மொத்தமாக அவர்கள் அந்த விமானத்தை ஏயும் போது பின்னனி இசை நிஜமான விமான இசை தொனியுடன் ஒலிப்பது மிக அருமை.

சதாம் உசைனால் குர்திஸ் மக்கள் பட்ட அவலத்தை காட்ட வேண்டும் என்பதில் இயக்குநர் பாமன் கோபாடி ஓரளவு வெற்றி பெற்றுள்ளார். ஹனாராவைப் போல் திறமையிருந்தும் ஒடுக்கி வைக்கப்பட்டுள்ள பெண்கள் ஈரான் குர்திஸ்தான் முழுவதும் நிரம்ப இருக்கின்றனர் என்பது இயக்குநரின் வாதம். அதையே கதை நெடுக ஒரு இழையாக கொண்டு ஓட்டுகிறார்.

தரமான இந்த படத்தை பார்க்கலாம். இது 2003-ம் ஆண்டில் வெளியாகியுள்ளது. அது பெற்ற விருதுகளையும், படத்தை பற்றிய மேல் விவரங்களுக்கும் இங்கே க்ளிக்கவும்.

பாமன் கோபாடியின் படைப்புகளையும் மேல் விவரங்களையும் பார்க்க.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
இந்த படத்தின் விமர்சனத்தினை எங்கோ படித்திருக்கிறேன். இங்கே தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. நல்ல பதிவு. ம்ம்ம்.. இதுக்காகவாவது, சிங்கையோ, அமெரிக்காவோ எகிறிடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
 
நரேன், சிங்கப்பூரிலும் அதே கதை தான். தேடும் படம் கிடைக்காது. எப்போதோ தேடிய படம் பலநாட்கள் கழித்து கையில் கிடைக்கும். அதுனால கிடைக்கிற படத்தை பார்த்துர வேண்டியது தான் :-)
 
பலவற்றைப் பற்றி இப்படி எழுதித் தீர்க்க எனக்கும் ஆசைதான். ஆனால், நேரம்? எப்படி இப்படி time management செய்ய முடிகிறது? கொஞ்சம் சொல்லித்தான் தாங்களேன். வருங்காலத்தில் எழுத்துலகில் ஒளிர் வீசி விளங்குவீர்கள் என்பதில் ஐயமில்லை. அட்வான்ஸ் வாழ்த்துக்கள். நிஜமாவே சொல்றேன். நீங்கள் மகேந்திரன் பற்றியும் இந்த இரான் படம் பற்றியும் எழுதியதை ஒரு சுஜாதாவோ அல்ல புஷ்பா தங்கதுரையோ தாங்கள் எழுதியாக குமுதத்துக்கோ ஆனந்த விகடனுக்கோ அனுப்பிருந்தால் நிச்சயம் உடனே பிரசுரம் செய்திருப்பார்கள். சும்மா சொல்லலை. இது யதார்த்தம். கண்ணதாசனின் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

-ஆத்மன் (எங்கும் நிறைந்தவன்)
 
நீங்க நல்ல எழுத்தாளர் மட்டுமில்லை. நல்ல ரசிகரும்/எடிட்டரும் கூட. இல்லைன்னா, நல்ல படத்தினூடே நிறுத்தி நிதானமாய் 5 நிமிஷம் (5 நிமிஷம்தானே !!) அந்த ஜிலு ஜிலு பெண்ணைக் கண் கொட்டாமல் பார்த்து, அதை snapshot எடுத்து, எங்கள் கண்களுக்கும் அதை விருந்தாய் அளித்து.... விஜேய், நீர் எங்கயோ போயிட்டீர். கூடிய சீக்கிரத்தில் ஒரு படம் direct பண்ணினாலும் சொல்வதற்கில்லை.

- ஆத்மன் (எங்கும் நிறைந்தவன்)
 
எனக்கும் அந்த திட்டிக்கிட்டே வரும் பாத்திரத்தைப் பிடித்திருந்தது.

படத்தின் கடைசிக் காட்சிகளும் மனதில் தங்கியவை.

நல்ல படம்.
 
யாரப்பா அது ஆத்மன். ஏற்கனவே கைகால் எல்லாம் சொறி வந்த மாதிரி இருக்கு. இப்படி போட்டு நமைச்சல் எடுக்க வைக்கிறீங்களே.ஒளி வீசவேண்டுமென்ற ஆசையெல்லாம் இல்ல. மனசுல உள்ளத போட்டுத் தாக்கிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியது தான்.

மதி, அந்த மூன்று கேரக்டர்களுமே பிடித்திருந்தது, அதில் நீங்க சொன்ன புசு புசு தலை, மீசை தான் தூள்.கோபாடி அந்த லிங்கில் கொடுத்த பேட்டியில் சொல்லியிருந்தார்.மகனாக வரும் இருவரும் உண்மையில் ஈரானில் கல்யாண வீட்டுக்கு போய் பாடி சம்பாதிப்பவர்கள். இந்த படத்தில் நடித்து விட்டு முதன் முதலாக கார் வாங்கியிருக்கிறார்கள். திரும்ப நடிக்க ஆசை என கோபாடியிடம் சொல்லியிருக்கிறார்கள்.
 
நல்லதொரு பார்வை & பதிவு, விஜய்.
 
vanakkam, nantra ezhuthiullerkal.
thamzh cinema vin thaliyeluththukali thalivithiye entru parththu tholaikkum chennai vaasikalukkum ippadiyana padankalthaan aaruthal. ithuponra ezhuththukkali thodarnthum ethir paarkkiren.
nantry
somee
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->