<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/9439067?origin\x3dhttp://halwacity.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

மீட்டிங்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
சென்ற தில்பர்ட் பதிப்பை ஒட்டி மனதை ஒட விட்டப்போது அலுவலகங்களில் நடக்கும் மீட்டிங்களை பற்றி எழுத வேண்டுமென தோன்றியது. மற்ற துறை அலுவலகங்களில் நடக்கும் மீட்டிங் பற்றி எனக்கு தெரியாவிட்டாலும் நான் சார்ந்த மென்பொருள் கம்பெனிகளில் நடக்கும் மீட்டிங்கள் எவ்வளவு முக்கியம் வாய்ந்ததென தெரியும். திட்டம் தீட்ட வேண்டுமென்றாலும், முக்கிய செய்திகளை பறிமாறக் கொள்ள வேண்டுமானாலும் சரி, சில முடிவுகளை எடுக்க வேண்டுமானாலும் சரி இந்த சந்திப்புகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததென தெரியும்.

மீட்டிங்களில் கொட்டாவி விட்டு தூங்குகிறீர்களா இல்லை எதையாவது உளறுகிறீர்களா இல்லை நீங்கள் தான் அந்த மீட்டிங்கில் ஜோக்கரா, எதுவாகயிருந்தாலும் மீட்டிங்கள் ஆச்சரியம் மூட்டும் வகையில் வொர்க் அவுட் ஆகும்.

விதிவிலக்காக எதற்கெடுத்தாலும் மீட்டிங் வைக்கும் சில கம்பெனிகளும் இருக்கின்றன. நிறைய மீட்டிங்களும் உங்கள் வேலையாற்றும் திறனை குறைக்கத் தான் செய்கின்றன. இந்த மாதிரி அனாவசிய மீட்டிங்களின் வெளிப்பாடு ஒன்றுமே இருக்காது., முக்கியமாக மென்பொருள் நிறுவனங்களில் இந்த மாதிரியான அனாவசிய மீட்டிங்கள் நிறையவே நடக்கிறது. எடுத்துக்காட்டாக....

"இன்னிக்கு டீம் மெம்பர் மீட்டிங் வச்சிரலாம் காலை 11 மணிக்கு" ப்ராஜக்ட் லீடர்

காலை 11 மணி.... டீம் மீட்டிங்க் அறையில்...

"ஏ சுரேஷ் எங்கப்பா? அவனுக்கு மீட்டிங் இருக்கிறது தெரியாதா?"

"தம் அடிக்க போயிருப்பான்னு நினைக்கிறேன். அப்படியே டீ அடிச்சிட்டு வருவான் குமார்"

"அதுக்குள்ள என்ன அவசரம் அவருக்கு. இப்ப ஒன்னு பண்ணலாம். பிஸ்கட் டீ ஆர்டர் பண்ணலாம். வழக்கமா மீட்டிங்ன இதெல்லாம் இருக்கனும்ல. ப்ராஜக்ட் என்டெர்டெய்ன்மென்ட் செலவுல சேத்துரலாம்"

"எனக்கு டீ உங்களுக்கு?"

"காபி" "டீ" "டீ".......

"ஒரே பிஸ்கட் தான் கிடைக்கும். ஆபிஸ் கேன்டீன் சரியில்ல. முதல்ல அத மாத்தச் சொல்ல ஒரு மேனஜ்மென்ட் மீட்டிங் வைக்கனும்னு நினைக்கிறேன்"

சிறிது நேரத்தில் காபி டீ, பிஸ்கெட் உள்ள நுழைய....

"குமார் நீங்க ப்ராஜக்ட் விசயமா டெல்லி க்ளையன்ட் பாக்க போனிங்களே என்னாச்சி?"

"ப்ராஜக்ட் விசயத்தை விடுப்பா? அங்கே என்ன குளிரு... ஒரே பனிமூட்டம் தான், காலையில எழுந்திருக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். எப்படியும் க்ளையன்ட் இடத்தில மீட்டிங் வைப்பாங்க. அங்கே போய் தூங்கலாம்னு கிளம்பிட்டேன்......"

இப்படி நேரம் போய்க் கொண்டிருக்கிறது....

தம்மடிக்க போன சுரேசும் இளித்துக் கொண்டே உள்ளே நுழைய....

"ஏம்பா எவ்ளோ நேரம் உனக்காக வெயிட் பண்றது"

ஈஈஈஈ.... சுரேஷ் மறுபடியும் இளிக்க....

அடுத்த ப்ராஜக்ட்ல இருந்து அடுத்த மீட்டிங்காக மக்கள் மீட்டிங் ரூமை முற்றுகையிட, உள்ளிருந்தவர்கள் வெளியே வர நிர்பந்திக்கப்பட்டார்கள்.

சுரேஷ் மெதுவாக ராமனிடம் கேட்கிறான் "மீட்டிங்ல என்ன நடந்துச்சி"

முக்கியமான முடிவு ஒன்னு எடுத்தோம்

"என்ன முடிவு?"

"அடுத்த மீட்டிங் எப்போன்னு?"

**%$#@$^$$%&&

இது தாங்க டிபிக்கள் மீட்டிங்......

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
:-)) ஹி.. ஹி..

நானும் ஒரு மென்பொருளாளன் என்ற வகையில் இதை முழுமையாக வழிமொழிகிறேன் என்று சொல்வதன் மூலம் நான் பெருமையடைகிறேன் என்றால் அது மிகையாகாது என்பது கிஞ்சித்தும் சந்தேகமின்றி விளங்குகிறது என்று இந்த நேரத்திலே சொல்லிக் கொள்ள நான் ஆசைப்படுவது ஏன் என நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டுமென்று சொல்லி எனது இந்த மீட்டிங் சிற்றுரையை முடித்துக்கொள்ள விரும்புகிறேன்
 
நான் மென்பொருள் துறையில் இல்லையென்றாலும் என் நண்பர்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும் போது உண்மை தான்.
 
கோபிக்கு நிறைய மீட்டிங் அனுபவம் போல. அவர் பின்னூட்டத்திலிருந்து அவர் பாதிப்பு புலப்படுகிறது.

மீனாக்ஸ், ஆம் உண்மையில் மென்பொருளார்கள் நிறைய பேர் இந்த மாதிரி புது புது மீட்டிங் அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள்.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->