-ல் போட்டுத் தாக்கியது
வலைப்பதிவுகள் தரம் உயரட்டும்
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
காசியின் 'வலைப்பதிவுகளை பரவலாக்க சில யோசனைகள்' படித்தேன்.மிக மிக நல்ல முயற்ச்சி. நம் வலைபதிவு தாய் புகழ் அடைந்தால் நம் பதிவுகளும் சேர்ந்துக் கொள்ளுமே. அதாவது பூவோடு சேர்ந்த நார் போல.
காசியின் கட்டுரையையும் தேட்ஸ்தமிழில் படித்தேன்.
இந்த வலைப்பதிவுகள் ஒருவரின் உள்ளிருக்கும் திறமையை மேம்படுத்தும் கருவியாகவே நினைக்கிறேன்.இவற்றில் எழுத எழுத வாசிப்பு திறனும் அதிகரிக்கிறது. நல்ல புத்தகங்களை தேடி தேடி படிக்க வேண்டியிருக்கிறது.என்னையே எடுத்துக் கொண்டாலும் பதிவுகளுக்கு முன் நேரத்தை எப்படியெல்லாம் வீணாக்க வேண்டுமே அப்படியெல்லாம் வீணாக்கிக் கொண்டிருந்தேன். வாசிப்பு என்பது ஜுரோவாகவே இருந்தது. இப்போது மற்றவர்களின் வாசிப்பு திறனை அவர்களின் பதிவுகளில் படிக்கும்போது நமக்கும் தோன்றுகிறது."நாம் ஏன் நேரத்தை வீணாக்குகிறோம். ஏன் நிறையப் படிக்கக் கூடாது".
இதை ஏன் சொல்லுகிறேனென்றால் நிறைய பதிவர்கள் ஆரம்ப கட்டத்திலே இருக்கிறார்கள். மற்றவர்களை போட்டுதாக்குவது இயல்பாக வரும். நாளாக நாளாக இதிலே உழல முடியாதென்று வரும் போது புதிதாக சிந்திக்க தொடங்குவார்கள். கட்டாயம் அவர்களின் எழுத்துக்கள் மேம்படும். அதற்கு நல்ல களமாக தமிழ்மணம் அமைவது மட்டுமில்லாமல், நல்ல ஒரு மன்றமாக வளர்ந்து வருகிறது.
பதிவுகளுக்கு நல்ல ஆரோக்கியமான விமர்சனங்கள் பின்னூட்டமாக கட்டாயம் தேவை. இந்த சமயத்தில் முக்கியம் என்னவென்றால் தன்னார்வம் மிக்கவர்கள் இந்த மன்றத்திலிருந்தே நல்ல ஒரு வழிகாட்டியாக இருந்து முயற்சிக்கலாம். நல்ல எழுத்துக்களை ஊக்குவிக்க 'இந்தவார நட்சத்திரம்' மட்டுமல்லாமல், நடுவர் ஒருவர் ஒரு வாரத்தின் பதிவுகளில் நல்லவற்றை தேர்ந்தெடுத்து ரேட்டிங் கொடுக்கலாம். அத்தோடு நிற்காமல் எங்கேயாவது குறையிருந்தால் எப்படி திருத்திக் கொள்வதென்ற டிப்ஸ்களை கொடுக்கலாம். கட்டுரைகளை உயர்தமிழில் மட்டும் இருக்கவேண்டுமென்று பார்க்காமல், கலோக்கியலாக இருந்தாலும் அதில் உள்ள பல விசயங்களை கூர்ந்து கவனிக்கலாம்.ஊக்கத்திற்காக சில சில போட்டிகளை வைக்கலாம். முடிந்தால் நல்ல பதிப்புகளை அச்சில் கூட ஏற்றலாம் தமிழ்மணம் சார்பாகவே. இது காசியின் வலைப்பதிவைப் பார்த்ததும் சட்டென்று வந்து விழுந்த பதிவு.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
//நடுவர் ஒருவர் ஒரு வாரத்தின் பதிவுகளில் நல்லவற்றை தேர்ந்தெடுத்து ரேட்டிங் கொடுக்கலாம்.//
இது நல்ல ஏற்பாடாகத்தெரியவில்லை. ஜனநாயகம் வேண்டும். ஒவ்வொரு வார நட்சத்திரமும் ஒரு 'தலை 10' பட்டியலைத் தரச் சொல்லலாம், இந்த மதிப்பெண் வாராவாரம் கூட்டப்படுவதாக (cumulative scoring system) செய்யலாம். அதன்மூலம் ஒரு பரவலான பாரபட்சமற்ற ரேட்டிங் கிடைக்கும்.
அத்தோடு அதிகம் பேர் க்ளிக்கும் வலைப்பதிவுகள்/இடுகைகள் என்றும் ரேட்டிங் செய்யமுடியும். தொழில்நுட்பத்தில் சாத்தியம் உள்ளது. ஆனால் indiblog வாக்கெடுப்பில் நடக்கும் கூத்துக்களைப் பார்த்தால், மக்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்றும் இருக்கிறது.

<< திரும்ப முன் பக்கத்துக்கு போ