-ல் போட்டுத் தாக்கியது
எக்குத்தப்பான தில்பர்ட்
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
சிரித்தது : வாரயிறுதியில் நூலகத்தில் தேடிய போது கிடைத்தது எக்குத்தப்பான The Dilbert Principle - Scott Adams புத்தகம். தில்பர்ட்டை கார்டூனில் பார்த்திருக்கும் நான் ஒரு நாளும் அதைப் படித்தது கிடையாது. அன்பர்கள் பலரும் தில்பர்ட்டின் அருமை பெருமைகளை அவ்வவ்போது பதிவிலிட, அந்த புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தை என்னுள் தூண்டியது. ரிலாக்ஸ்டான மனநிலையில் படிக்க ஆரம்பித்தேன். அருமையான புத்தகம். ஒரு நிறுவனத்தில் நிர்வாகம் எவ்வாறு முட்டாள்தனமாக நடைப்பெறும் என்பதையும், ஊழியர்களின் செய்கைகள், மனோபாவம், மேலதிகாரிகளின் முட்டாள்தன்மை முதலியவற்றை ஆசிரியர் போட்டுத் தாக்கியிருந்தார். ஆசிரியர் ஒரு கார்டூனிஸ்டாக இருந்தாலும், அவர் கார்டூன்களோடு எழுதியிருக்கும் கட்டுரைகளும் படித்தால் மீண்டும் மீண்டும் சிரிப்பு தான். முழுமையாகப் புத்தகத்தை படித்து முடிக்கவில்லையென்றாலும் சில ஜோக்குகள் இங்கே.....
* ஒரு நிறுவனத்தில் அடிக்கடி பயணம் செய்யும் ஊழியர்களுக்காக மடிக் கணனியை மேலதிகாரி ஆர்டர் செய்கிறார். அது பயணத்தின் போது தொலைந்துப் போகலாமென்ற பயத்தில் ஒரு ஐடியாக் கொடுக்கிறார். அந்த ஐடியாவின் படி மடிக்கணினி தொலைந்துப் போகாமல் இருக்க அவர்கள் மேஜையில் வைத்து லாக் செய்யப்பட்டது.
*நிர்வாகி கொஞ்ச நாளில் வெளிவரப்போகும் டிஜிட்டல் கருவியில் ஒரு விளக்கைப் பொருத்தச் சொன்னார். விளக்கு எதற்கு தெரியுமா? அந்த கருவியில் பேட்டரி தீர்ந்தவுடன் வெளிச்சமடித்துக் காட்டுவதற்காக...... :-)
*மீட்டிங்கில் ஊழியர் குழுவிடம் மேனஜர் சொல்கிறார்.
மேனஜர் : நான் இது நாள் வரையில் ஒரு நிறுவனத்தில் ஊழியர்களுக்குத் தான் முதலிடமென நினைத்திருந்தேன். ஆனால் இப்போது நிறுவனத்திற்கு பணம் தான் முதலிடம் வகிக்கிறது என்பதை அனுபவத்தில் அறிந்துக் கொண்டேன். ஊழியர்கள் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்கள்.
ஊழியர்: சார் அப்படியென்றால் எட்டாவது இடத்தில் யாரென தெரிந்துக் கொள்ளலாமா?
மேனஜர்: கார்பன் பேப்பர்கள்
*ஆபிஸில் நுழைந்த குரங்கு ஒன்று அங்குள்ள ஊழியரிடம் சொல்கிறது. "இன்னும் கொஞ்ச நாளில் நாங்கள் எல்லாரும் கூண்டுக்கு வெளியே இருப்போம். மனிதர்கள் கூண்டுக்குள் வந்துக் கொண்டிருக்கிறார்கள், வந்து விடுவார்கள் என நினைக்கிறேன்"
ஊழியர்: அது மட்டும் நடக்காது. என் க்பியூக்களை(Cubicle) விட்டு வெளியே போ என துரத்துகிறான்.
இது எப்படி இருக்கிறது. வரும் பதிவுகளில் நான் சிரித்த தில்பர்ட்டை துணுக்காக வெளியிருகிறேன். இப்போ அடுத்த டாபிக்......
ரசித்தது : கருணாநிதி தான் கதை வசனம் எழுதிய படத்தின் சம்பளத்தை சுனாமி நிவாரண நிதிக்கு வழங்க ஸ்டாலின் முதலமைச்சரை சந்தித்தார். காணக்கிடைக்காத அரிய நிகழ்ச்சி, டிவிகளில் கிடைத்தது. ஜெயா திரு திரு முழித்து நின்றிருக்க, மின்னல் வேகமாக ஸ்டாலின் படபடப்புடன் நுழைய ஜெயா அவருக்கு ஒரு கும்பிடுப் போட்டு, பொய்யாக ஒரு சிரிப்பு சிரிக்க, பதிலுக்கு ஸ்டாலினும் கையில் கொண்டுவந்ததை ஒப்படைத்து விறு விறுவென் நடையைக் கட்டினார். நல்ல மனம் யாருக்கு இருந்தாலும் வாழ்க....
தேடியது: "என்னவளே.... அடி என்னவளே" ஒலித்த போது பாடகர் உன்னிகிருஷ்ணனின் நினைப்பு வந்தது. அவருடைய குரல்வளம் எனக்கு ரொம்ப பிடிக்கும். சில நாட்களாக புதியபடங்கள் எதிலும் பாடாததையும் நான் உணர்ந்தேன். என்னாச்சின்னு தெரியல அவருக்கு. வாய்ப்புகள் இல்லையா? இல்லை சினிமா துறையை விட்டு ஒதுங்கிவிட்டாரா?
ருசித்தது: தோசைப் பொடியோட 10 இட்லி. இட்லி ரொம்ப பெரிசா குண்டாங்கல்லாக இருந்ததால் பத்தோடு நிறுத்தினேன். இல்லையென்றால் இருபதைத் தொட்டிருக்கும்.......
ஏய்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............................

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
அட... ஆமா! கடைசியாக 7ஜியில் கேட்டதுதான்! 'எப்ப வருவாரோ?!' (உதித் நாரயண் நிறைய பாட ஆரம்பிச்சுட்டாரே... பார்த்தீங்களா?)
பாலா அண்ணாச்சி! 7ஜி-லேயும் உன்னி பாடியிருக்கிறாரா என்ன? என் நினைவு தெரிந்து கடைசியாக அவர் குரல் கேட்டது "காலையில் தினமும் கண் விழித்தால்...." நியூ படத்தில் தான்... உதித் நாராயன் தன் சொத்தை தமிழ் உச்சரிப்பால் கலக்கிட்டு தான் இருக்கார்
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ