<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

தெய்வம் ஆடிக் கொல்லும்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
ஆயிரம் தெய்வங்கள் உண்டு என் இந்து மதத்தில். பணத்திற்கு ஒரு தெய்வம்,காசுக்கு ஒரு தெய்வம், வீரத்திற்கு ஒரு தெய்வம், தமிழுக்கு ஒரு தெய்வம் என்று பல தெய்வங்கள். உண்மையில் இந்து மதத்தில் இது ஒரு மகத்தான ஒரு விசயம், எதையும் ஒரு உருவகமாக வழிபடும் நமக்கும் மிக தொன்மை வாய்ந்த இந்த இந்து மதத்தில் எதையும் சும்மா உருவாக்கியிருக்க மாட்டார்கள். இந்த உண்மைகளை நாம் இந்து மதத்தில் ஊற ஊற பல சமய நூல்களைப் படிக்க படிக்க தெரியவரும். மதத்தில் இருக்கும் எல்லாவற்றிற்கும் ஒரு அர்த்தம் இருக்கும்.

ஆனால் எந்த முக்கிய நோக்கில் ஒரு விசயம் இந்து மதத்தில் தோற்றுவிக்கப்பட்டதோ அது நாளடைவில் அது திரிந்து வேறு விதமாகக் கையாளப்படுவதையும் நாம் பார்த்திருப்போம். உண்மை என்னவென்றால் பெரும்பான்மையான இந்து மத விசயங்கள் நமக்கு தெரியவதில்லை. அதை நாம் ஒரு சடங்காகவே பின் பற்றி வருகிறோம். இப்படி நாம் செய்யும் ஒவ்வொரு சடங்குகளுக்கு பின்னாலும் ஒரு முக்கிய விசயம் சொல்லப்பட்டிருக்கும் என்பதே ஒரு முக்கிய உண்மை. எனினும் எனது இந்த கட்டுரை சடங்குகளைப் பற்றியல்ல.

மனிதர்களை தெய்வங்கள் எப்படி கையாள்கிறார் என்பதை விட தெய்வங்களை மனிதன் பலவாறாகக் கையாள்கிறான். மனிதன் தெய்வங்களை கையாள்வதை நீங்களே பல முறை பார்த்துக் கேட்டு இருப்பீர்கள். இதுவும் ஒரு விதம்.

ஒரு கோவிலில் பிள்ளையார், லட்சுமி, சக்கரத்தாழ்வார்,பெருமாள், அனுமான் போன்ற தெய்வங்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். பெருமாளும், லட்சுமியும் தான் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று முன்னனியில் இருப்பார்கள். புரியலையா?

என்னைப் போன்ற ஒரு சராசரி பெருமாள் கோவிலுக்கு நுழைந்தால், முதலில் வரவேற்பது பிள்ளையார். "ஆகா இவரு தான் முழுமுதற் கடவுள். இவர கும்பிட்டுத் தான் மத்தவங்களைப் பார்க்கனும். இவரை பார்க்காம போன பின் விளைவுகள் ஏதாச்சிம் ஆகுமோ. நமக்கு ஏன் பிரச்சனை. ஒரு கும்பிடுப் போட்டு உள்ளார போயிரலாம்". தீபாராதனை காட்ட நேரம் ஆக ஆக "சே இவ்ளோ நேரம் ஆகுது. பேசாம நம்ம பெருமாளை போயி தரிச்சிரலாம்" அடுத்தக் கடவுளை நோக்கி நகருகிறோம்.

அடுத்து சக்கரதாழ்வார் வீற்றிருப்பார். மனசுல "இது சாமியா? இல்ல ஆழ்வாரான்னு தெரியல. ஏதாச்சி தமிழ்ல பாட்டு பாடியிருப்பார்.... ஹிம்..." சும்மா ஒரு ஒப்புக்கு ஒரு சலாம் வைத்துவிட்டு பெருமாளை நோக்கி ஓடுவோம்.

பெருமாள் சன்னிதியில் நெய் உருக உருக வேண்டுவோம். "பெருமாளே நீ தாம்பா காப்பத்தனும், எல்லரையும்.என்னோட கஷ்டங்களை எல்லாம் தீர்த்து வைய்யப்பா? எல்லா பிரச்சனையும் நீ தீர்த்து வைச்சேன்னா உனக்கு பிரசாதம் வைக்கிறேம்பா.... பெருமாளே"

அந்த பக்கத்திலே பிள்ளையாரும், சக்கரத்தாழ்வரும் தோளில் கைப்போட்டுக் கொண்டு "பார்த்தியா பார்த்தியா இவனுக்கெல்லாம் நம்மல பார்த்த சாமியா தெரியலைப் போல. எனக்கு என்ன அவன் கஷ்டத்தை தீர்த்து வைக்க என்ன சக்தி இல்லையா என்ன? எல்லாரும் கும்பல நின்னு அந்த பெருமாளுக்குத் தான் மரியாதை ரொம்ப குடுக்குறானுவோ. நம்ம சொஷைட்டியில பெருமாளுக்கு பவர் ஜாஸ்தி தான். அதுக்காக நம்மளை எல்லாம் இப்படி தான் ஒப்புக்கு கும்பிட்டுட்டு போனுமா?"

அதுக்கு சக்கரத்தாழ்வார் பக்கத்திலிருந்து "கணேஷ் அண்ணே, இது கொஞ்சம் கூட சரியில்லைன்னே,முதல்ல இதப்பத்தி நம்ம சங்கத்தில மேல் முறையீடு பண்ணனும். ஒரு ஸ்டிரைக் பண்ணனும்ன்னு நினைக்கிறேன்"

பெருமாளுக்கு 20 நிமிடம் கழித்து ஆராதனை காட்டிய பிறகு வேகமாக காசு காசு என்று மனசு துள்ள கூட்டம் நிரம்பிய லட்சுமி சன்னதிக்கு செல்கிறோம். "அம்மா தாயே! காசு அள்ளி அள்ளி கொடும்மா. நீ எங்க வீட்டுல நிரந்தரமா தங்கனும்மா. உனக்கு சாமி ரூம் தனியா ஒதுக்கியிருக்கேன். நீ பேயிங்க் கெஸ்டா தங்கிக்கோம்மா. பேயிங் கெஸ்ட்டுக்கு இவ்வளவு தான் கொடுக்கனும்னு இல்ல. எவ்வளவு நாளும் அள்ளிக் கொடு. எப்பவுமே வாழ் நாள் பூராவும் கூட இருந்தே பார்த்துக்கனும்மா. அது தான் எங்களுக்கு வேனும்." என்று மனசுக்குள் கூவுகிறோம்.

அதற்கு பக்கதிலுள்ள பிள்ளையார் கமெண்ட் அடிக்கிறார் "பார்த்தியா சக்கரம், நம்ம பினான்சியர் அம்மவை எப்படி மதிக்கிறான்னு. கடவுளா இருந்தாலும் காசும், பவரும் இருந்த தான் மதிக்கிறானுவோ. நான் என்ன பாவம் செஞ்சேன். நீ பாவம் என்ன செஞ்சே"

அடுத்த சன்னதியில் இருக்கும் ஆண்டாளை கண்டுக்காமல் செல்ல, ஆண்டாள் தேம்பி தேம்பி அழ ஆரம்பிக்கிறார். பிள்ளையாரும் சக்கரத்தாழ்வாரும் ஓடிச் சென்று ஆண்டாளை தேற்றி தன் கட்சியில் சேர்க்கிறார்கள்.

அதே கதை தான் அனுமாருக்கும். புஜ வலிமைப் படைத்த சில நண்பர்கள் அனுமாரை நாட, கோவிலை சுற்றிய அசதியில் இளைப்பாருகிறோம்.அனுமாரும் எதையும் கண்டுக்காமல் இராமனை நினைத்து தியானித்துக் கொண்டிருந்தார்.

பல நாட்கள் கோவிலில் இப்படியாக நடக்க பிள்ளையார் ரொம்ப வெக்ஸாகி போயிருந்தார். பிள்ளையார் சதுர்த்தியும் வந்தது. தீடிரென ஓவர் நைட் ஹீரோ ஆனார் பிள்ளையார். அவருக்கு படையல் என்ன, வேண்டுதல் என்ன, ஆராதனை என்ன.. சந்தோசத்தில் திக்கு முக்காடினார். பலரும் வைத்த ஐஸ்ஸில், ஜலதோசம் பிள்ளையாரை பிடித்து ஆட்டியது.

நாட்களும் நகர்ந்தது. பிள்ளையாரை கடலில் கரைக்கும் நாள். ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள், பல பக்தர்கள் உட்பட பிள்ளையார் சிலைகளை எடுத்துக் கொண்டு ஊர்வலம் போகத் தொடங்கினர். ஊர்வலத்தில் எங்கும் கூட்டம், எங்கும் போலீஸ் தலைகள்.

சக்கரத்தாழ்வார் பிள்ளையாரைப் பார்த்து "கணேஷ் அண்ணே, உங்களுக்கு வாழ்வு தான்னே. பாருங்க எத்தனை பேரு உங்களை தாங்குறாங்க. போலீஸ் வேற. Z பிரிவு பாதுகாப்பு வேற, கலக்குறீங்க அண்ணே" இப்படி சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஊர்வலம் கடற்கரையை அடைய...
பிள்ளையார் "அடப்பாவிகளா... டேய் டேய்.... எங்கடா தூக்கிட்டு போறீங்க. என்னை விடுங்கடா.... டேய் டேய் விடுங்கடா...." பிள்ளையார் கதறினார்.

கிரேன் கட்டி பிள்ளையாரைத் தூக்க, நானும் கரையில் மன்மத ராசா தனுஷ் ரேஞ்சில் கரையில் ஆடிக்கொண்டிருந்தேன். பிள்ளையாரோ "டேய் விடுங்கடா... எனக்கு ஜலதோசம் வேற கடல் தண்ணி ஒத்துக்காதுடா, என்னை விடுங்கடா". கதற கதற தண்ணீரில் முக்கி கரைக்கப்பட்டார்.

காட்சி மாறுகிறது. விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் கரையோரம் கடலுக்கு பயந்து செம்பில் கடல் தண்ணீர் பிடித்துக் குளித்துக் கொண்டிருந்த போது, ஒரு சின்ன அலை என்னை கடலுக்குள்ளே தள்ளியது.நீச்சல் தெரியாததால் திக்கி முக்காடி கொண்டிருந்தேன். "கடவுளேளே...... என்ன காப்பாத்துதுதுது.........." என்று பலம் கொண்ட மட்டும் கத்த, கடவுள் சங்கத்தை அந்த கோரிக்கை எட்டியது.

வழக்கம் போல இண்வெஸ்டிகேஷனுக்கு பிள்ளையார் அனுப்பப்பட்டார். பிள்ளையார் தண்ணீரில் தத்தளிக்கும் என்னைப் பார்த்தும், தனுஷ் ரேஞ்சில் அவரும் ஆட ஆரம்பித்துவிட்டார். நான் அவரிடம் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு என்னை காப்பாற்றுங்கள் என்று கேட்க, பிள்ளையார் என்னைப் பார்த்து "அன்னிக்கு எப்படி இப்படியா" என்று இரண்டு கால் முட்டிகளையும் ஒடுக்கி விரித்து, கைகளை தலையின் பின் கோர்த்துக் கொண்டு ஆடியபடியே "இப்படி தானே என்னை தண்ணியில முக்கும் போது ஆடி காண்பிச்சே" என்று சொல்ல சொல்ல, நான் மயக்கமானேன்.


இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
Erkanave Kelvippatta Joke-ai Topicalla pottu thaaki irukkeenga. nallaaththaan irukku, aanalum intha samayathula Pillayaar dance aadi iruppaarnu solrathu romba uruthuthu sir.

neenga ezhuthinathu thappunnu sollala - enakku uruththuthunn mattum thaan sollaren.

Suresh
 
சுரேஷ் அண்ணாச்சி... எதையும் போட்டு குழப்பிக்காதீங்க... 'ஒன்றே தெய்வம்' என்பதை கேள்விப்பட்ட, கேள்விபடாத ஜோக்குகளாக வடித்து தந்திருக்கிறேன். அவ்வளவே... ரொம்ப யோசிச்சி மனசை ஸ்டிரெயின் பண்ணிக்காதிங்க.
 
நல்ல விஷயத்தை நகைச்சுவையாக, அழகாக, அறிவுபூர்வமாக (இன்னும் பல ஆக) சொல்லியிருக்கிறீர்கள். சூப்பருங்க!!!
 
யோசிப்பவரே உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. எனர்ஜி டேப்லட் சாப்பிட்ட மாதிரி இருக்கு
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->