-ல் போட்டுத் தாக்கியது
ஊருக்கு கிளம்புறேன்...
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இன்னும் ஒரு வாரத்தில ஊருக்கு கிளம்புறேன்.....
உடனே இந்த குரல் வான்வெளி அலைகளாக பரவி உள்வட்டம் நடுவட்டம் வெளிவட்டம் நண்பர்களைத் தட்டி எழுப்பிவிடும்.
"ஏங்க இந்த பொருளை எப்படி இந்தியால இருக்கிற அப்பா அம்மா அண்ணங்களுக்கு கொடுத்தனுப்புறது"
"என்னோட ஃபிரண்டோட ஃபிரண்டு ஊருக்கு போறானம். அவன்கிட்ட கொடுத்து விட்டுரலாம். சும்மா கேட்டு பாப்போமே, அவன் கொண்டு போன போகட்டும். இல்லேன்னா வேற எவனாச்சிம் போறானான்னு பார்க்கலாம்"
இது ஊருக்கு போகும் எனக்கு முதல் ஆப்பு வைக்க நடக்கும் உரையாடல்.
"ஐய்யோ அவரு மெட்ராஸ்க்கு போனார்னா எங்க வீட்டுல யாருமே இல்லையே அவங்க கிட்ட போய் வாங்கிக்க. ஏங்க உங்க ஃபிரண்டோட ஃபிரண்டுகிட்ட அட்ரஸ் கொடுத்த வீட்டுல போய் கொடுத்திருவார்ல"
இது டோர்டெலிவரிக்கான முகவரி.
ஊருக்கு போகும் நானோ மூட்டை மூட்டையாக பரிசு பொருள்களை அள்ளிக் கொண்டு உறவினார் எவனாவது வாயிலடிச்ச மாதிரி சொல்லிறக் கூடாதேன்னு என் முழியும் சூட்கேஸும் பிதுங்க நிற்பேன்.
"உங்களால முடிஞ்ச இத கொண்டு போறீங்களா, இதுல ஒன்னுமில்ல மச்சாங்களுக்கு மூனு செல்போனும், அத்தைக்கு ஒரு ரைஸ் குக்கரும் கொடுத்தனுப்புறேன். நீங்க ஜாஸ்தி கொண்டு போலேண்ணா சொல்லுங்க ஒரு மைக்ரோ வேவ் ஓவனும் இருக்கு"
"இல்லீங்க. லக்கேஜ் நிறைய சேர்ந்துப் போச்சுன்னு நினைக்கிறேன். செல்போன் மட்டும் வேணா கொடுங்க நான் கொண்டு போறேன். ஆமா கஸ்டம்ஸ் ஏதாவது பிரச்சனை வராதில்ல" நான்.
"அதெல்லாம் ஒன்னும் வாராதுங்க. இப்பொல்லாம் அவனவன் என்னமோ அள்ளிக்கிட்டு போறான். நீங்க கவலைப் படாமா கொண்டு போங்க"
இப்படி பலரும் இந்தியாவுக்கு அனுப்பும் பொருட்களுடன் இன்னொரு மூட்டையாக கட்டி கொண்டு ஏர்போர்ட் வந்து சேர்ந்தேன். கொண்டு வந்த பொருளை ஏர்போர்ட்டில் எடை அளந்து பார்க்கும் போது 5 கிலோ அதிகம் காட்ட, "அய்யோ கடவுளே வீட்டுல எடை கரெக்டா இருந்துச்சே, ஒரு வேளை மெஷின் ரிப்பேரோ?" அந்த 5 கிலோவும் உருண்டையாக வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருள ஆரம்பித்தது.
"கவுண்டர்ல இந்தியன் எவனாச்சி இருந்த தான் நமக்கு பிரச்சனை. ஒரே நாட்டுக்காரன்னு பார்க்க மாட்டானுங்க. பெரிய ரூல்ஸ் பேசுவானுங்க. ஃபிளைட்ல அவ்வளவு கூட்டமும் இல்ல. இந்த 5 கிலோக்கு தான் பெரிய விளக்கம் தருவானுங்க. காசு கட்ட சொல்லிருவானுவோ போலேயே. இப்போ எதையும் போட்டுட்டும் போக முடியாது. கடவுளே என்ன பண்ணுவேன். அடுத்த கவுண்டர்ல இருக்கும் அந்த சைனீஸ்கிட்ட தான் நம்ம போகனும்" என்ற நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுப்பதற்குள், அந்த இந்தியன் இருந்த கவுண்டர் காலியாக, தன்னிச்சையாக நான் அங்கே போய் நிற்க வேண்டியதாகியது.
நினைத்த மாதிரி எடை அதிகமாக இருக்கிறதென்று கவுண்டரில் சண்டை பிடிக்க, அதிக எடை காசை கட்ட வேண்டியாதகி போச்சி. "இதெல்லாம் லக்கேஜ் கொடுத்தவங்ககிட்ட கேட்க முடியுமா?"
ஒகே ஒரு வழியாக இந்தியா போய் டோர் டெலிவரி செய்து விடுமுறையையும் கழித்து இங்கே திரும்பும் நாளும் நெருங்கியது.
"தம்பி என் பையன் அங்கே இருக்கான். இத கொடுத்துருப்பா..." தெரிந்தவர் ஒருவர் ஒரு பெரிய லக்கேஜை நீட்ட, மறுக்க முடியுமா?
ஆர்வகோளாரில் வந்த பொருட்களை பிரித்து பார்ப்பதில் அலாதி பிரியம். பிரித்ததில்... 10 ஊர்வசி சோப்பு, 5 லைப்பாய் சோப்பு, 10 கோபால் பல்பொடி, 3 குற்றால துண்டு, 2 பாக்கெட் சர்ஃப் பவுடர்... "காலக் கொடுமையடா! இந்த மாதிரி பொருட்களையெல்லாம் தூக்கிட்டு போக வேண்டியிருக்கு"
சில மாதங்களுக்கு பிறகு அந்த நண்பர் ஊருக்கு கிளம்ப, எனக்கும் மூக்கு வேர்த்தது. ஊர்வசி சோப்புக்கு பதில் நாம என்ன வாங்கிக் கொடுக்கலாமென யோசிக்க ஆரம்பித்தேன்.
சிங்கப்பூர் ஃபேர் அன்ட் லவ்லி,சிங்கபூர் ஹமாம் சோப்பு,சிங்கப்பூர் பாண்ட்ஸ் பவுடர், சிங்கப்பூர் அமிர்தாஞ்சன்... இப்படி எல்லா சிங்கப்பூர் பிராடெக்ட்களும்(???) மூட்டையாக கட்டிக் கொண்டு நண்பர் வீட்டில் போய் இறங்கினேன்.
அதே எடை... அதே கஷ்டம்... அதே டென்ஷன்.... ஆன இப்போ நானில்லை... ஒரு குரூர சந்தோசம்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ