-ல் போட்டுத் தாக்கியது
ஜெட் லீ தப்பினார்!!!
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
அலுவலகத்தில் என்னருகில் உட்கார்ந்துருக்கும் சில சீன நண்பர்கள் தங்களுக்குள் காரசார விவாதம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். என் காது அவர்களை நோக்கி கூர்ந்தப் போது, ஜெட் லீ பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். ஜெட் லீ யாரென்று உங்களுக்கு தெரியுமென நினைக்கிறேன். அவர் ஒரு சீன நடிகர், லீதல் வெப்பன் முதலிய படங்களில் வில்லானாகவும் நடித்தவர். ஜெட் லீ மாலதீவு ஹோட்டலில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்தப் போது, தன் மகளை அடித்துச் செல்லவிருந்த அலையிலிருந்து காப்பாற்றினாராம். நல்லது. அது கடவுளின் கிருபை. யாருடைய உயிரும் துச்சமில்லை. பிறகு அவருக்கு நற்காலி இடித்துக் காயம் பட்டதை சொல்லனாத் துயரத்துடன் விவரித்துக் கொண்டிருந்தான் ஒருவன். இன்னொருவன் இந்தோனேஷிய இறப்பு இலங்கை இறப்பு எண்ணிக்கையை தாண்டிவிட்டதாக படு கேஷுவலாக பேசிக் கொண்டிருக்க.....
"சுனாமி அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ உங்களால் முடிந்த உதவியென" உதவிப் பெட்டியை நீட்ட அந்த நண்பர்கள் "ஹி ஹி... என சிரித்துக் கொண்டே அடுத்த கேபினில் உள்ளவனிடம் அது கடத்தப்பட்டது.
"சுனாமி அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ உங்களால் முடிந்த உதவியென" உதவிப் பெட்டியை நீட்ட அந்த நண்பர்கள் "ஹி ஹி... என சிரித்துக் கொண்டே அடுத்த கேபினில் உள்ளவனிடம் அது கடத்தப்பட்டது.
இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ