-ல் போட்டுத் தாக்கியது
தமிழ் குறுஞ்செய்தி- பரவசப்படுத்தவில்லை
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
தமிழில் குறுஞ்செய்தி என்றவுடன் என்னைப் பரவசப்படுத்தவில்லை. என்னிடம் இருப்பது மார்க்கெட்டில் ஓஞ்சிப் போன செல்பேசி தான். கட்டாயம் என்னால் அதில் தமிழில் குறுஞ்செய்தி பார்க்கமுடியாது என்றுத் தெரியும். எனக்கும் செல்பேசிகளின் மீது காதல் எல்லாம் இல்லை. எந்த செல்பேசியை காதில் வைத்ததும் கேட்கப் போவது பேசுபவரின் குரல் மட்டுமே. விலையுயர்ந்த செல்பேசி காதில் வைத்தவுடன் பேசுபவரின் வார்த்தைகளை திரைக்கதை அமைத்து, வித்யாசாகரின் இசையுடன் கலந்து எந்த செல்பேசியும் கொடுக்கப் போவதில்லை. அடுத்த முனையில் தமிழில் பேசினால் தமிழில் கேட்கப் போகிறேன், இல்லையென்றால் ஆங்கிலத்தில் பேசினால் நான் ஆங்கிலத்தில் கேட்கப் போகிறேன்.
தமிழில் குறுஞ்செய்தி என்றவுடன் எனக்குள் முதலில் தோன்றியது வியாபார நோக்கம் தான். நான் அதை தவறு என்றுச் சொல்லவரவில்லை. நல்ல முயற்சி. இந்த மாதிரி முயற்ச்சிகளால் தான் நீங்களும் நானும் தமிழில் இந்த வலைப்பதிவு வழியாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். அதற்கு பாராட்டுக்கள். எந்த தொழில் நுட்பமும் யாருடைய முயற்சி இல்லாமல் எழுதில் கிடைக்காது. அதற்கு தகுந்த சன்மானம் தான் அதற்கு வைக்கும் விலை. தவறேதுமில்லை. ஆனால் தமிழ் மொழியின் பெயரால் நடக்க போகும் வியாபாரப் போட்டிகளை நினைத்தால் தான் மனம் கலங்குகிறது.
நண்பர் மூர்த்தியின் வலைப்பூவில் ஒரு கருத்தை குறிப்பிட்டுருந்தார்.
/***தொலைபேசி வாங்கி அதில் மென்பொருள் புகுத்தி...ஏம்பா எங்களை கஷ்டப் படுத்துகிறீர்கள்? ஆங்கிலம், மலாய், சீனம், ஜப்பான் போன்று எங்கள் மொழியையும் தொலைபேசியினுள்ளே வைத்தால் நாங்களும் பொழைச்சு போவோம் இல்லையா?***/
இந்த கருத்து எப்போதாவது சிந்திக்கும் என்னையையும் இப்போ சிந்திக்க வைத்தது. நானும் என் செல்பேசியின் செட்டிங்ஸை நோண்டிக் கொண்டிருக்கும் போது, மொழி என்ற ஒரு செட்டிங்ஸ் இருக்கும். தேடினால் சீன மொழி முதல் கொண்டு சில மொழிகள் இருக்கும். இந்தியாவில் சில செல்பேசிகளில் இந்தி எழுத்தைப் பார்த்திருக்கிறேன். செல்பேசி பட்டன்களிலும் இந்தி எழுத்தைப் பார்த்திருக்கிறேன்.ஏன் அந்த துறைச் சார்ந்த தமிழர்களால் நம் மொழியை செல்பேசியில் கொண்டுவரமுடியவில்லை என்பது என்னுள் இருக்கும் கேள்வி. செல்பேசியிலே கிடைத்தால் நான் அதை வாங்கிவிட்டுப் போகிறேன். மிக கஷ்டமான சீனமொழியே செல்பேசியில் கிடைக்கும் போது தமிழ் புக முடியாதா?
இப்போது என்ன நடக்கும் என்று நம்மால் ஊகிக்க முடியும். சிங்கப்பூரில் தமிழில் குறுஞ்செய்தியா? அடுத்து தமிழகத்தில் ஒரு என்கோடிங்குடன் யாராவது நம்மவர்கள் முயற்சி செய்து ஏதாவது ஒரு ஸ்டார்ண்டடில்(standard) வரும் குறுஞ்செய்தி. இப்படி ஆளாளுக்கு மொழியின் பெயரால் தங்கள் வியாபாரத்தைப் பெருக்குவார்கள். ஆக மொத்தம் எந்த ஒரு ஸ்டாண்டர்ட் இல்லாமல் பல்கி பெருகும், அப்புறம் பணம், influence படைத்தவர் எவராவது கூவுவார்கள் குறுஞ்செய்தி ஸ்டாண்டர்க்காக.
அப்புறம் வரும் ஒரு ஸ்டாண்டர்ட். இருந்தாலும் என் வழி தனி வழியில் தான் பல பேரும். என் கேள்வி எல்லாம். இதை ஏன் ஆரம்பிக்கும் போதே ஆரம்பிப்பவர் வழிநடத்தி உலகத் தமிழர் அனைவருக்கும் ஒரு பொது குறுஞ்செய்தி ஸ்டாண்டர்ட் என்று வகுக்க முடியவில்லை. மென்பொருள் வழி குறுஞ்செய்தியை விட்டு விட்டு செல்பேசி பதிந்த தமிழ் குறுஞ்செய்தி என செல்பேசிகளை ஏன் தயாரிக்க முடியாது? ஒருவரையொருவர் அடித்துக் கொள்வதில் கூட்டம் சேரும் தமிழர்கள் ஏன் இந்த மாதிரி விசயங்களில் கூட்டுச் சேர மாட்டேன்கிறார்கள்?
நான்காவது தமிழ் உங்களிடம் பணம் இருந்தால் மட்டுமே கிடைக்கும். இப்படியும் காசுக்கு தமிழ் கிடைக்கிறதா? சபாஷ். (கையில காசு இல்லேன்ன வாயை பொத்திக்கிட்டு போகச் சொல்றீங்களா? அதுவும் சரிதான்)
அங்குசம் என்னிடம் இருக்கிறது என்பதற்காக நான் யானையை வாங்கத் தயாராக இல்லை.
இது என் பார்வை மட்டுமே. மற்றவர் பார்வை வேறுபடலாம்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
//ஆனால் தமிழ் மொழியின் பெயரால் நடக்க போகும் வியாபாரப் போட்டிகளை நினைத்தால் தான் மனம் கலங்குகிறது.
அண்ணே போட்டுத்தாக்கவேண்டும் என்ற முடிவில், பொத்தாம்பொதுவாக தயவுசெய்து போட்டுத்தாக்காதீர்கள். என்கோடிங் தொழில்நுட்பம் அதிலுள்ள அரசியல் எல்லாம் பலரும் அறிந்த சேதிதான். ஆனால் அது இங்கு தொடரவில்லை - அதனால் ஏதோ கேள்விப்பட்டதை வைத்து, உங்கள் கருத்தையேற்றி ஒரு முக்கியமான தொழில்நுட்ப வளர்ச்சியை குற்றம் சொல்லாதீர்கள். தமிழ், தமிழர்கள் என்றும் மார்தட்டும் அரசியல்வாதிகளால், அரசுகளால் செய்ய இயலாததை தனியொருவர் முன்னின்று இப்போது அறிமுகப் படுத்தியிருக்கிறார். அதற்கு கொடுக்கப்போகும் விலை மிகக்குறைவுதான். அதை இறக்குவதும, பயன்படுத்துவதும் மிக சுலபம். இந்த பயன்பாட்டைப் பொருத்துத்தான், Nokia, Sony Ericsson மற்ற நிறுவனங்கள் தொலைபேசி விநியோகிக்கும்போதே தமிழுடன் கொடுப்பது நடக்கும். அதனால் உங்களுக்கு இதுதொடர்பில் ஆக்கபூர்வமான தொழில்நுட்ப, சந்தைப்படுத்தும் ஆலோசனைகள் இருந்தால், தயவுசெய்து திரு. முத்துவுடன் (muthu@murasu.com) தொடர்பு கொண்டு தெரியப்படுத்துங்கள்.
அதனால், கருணாநிதி, ஜெய... ஜெயே... மேட்டரை அணுகுவது மாதிரியே இதையும் அணுகவது தவிர்க்கப்படவேண்டும்.
என்றென்றும் அன்புடன்,
அன்பு

அன்பு தலைவரே
அய்யய்யோ... நான் தொழில் நுட்பத்தை குறைச் சொல்லவில்லை. என்னுடைய பாராட்டுக்கள் எப்போதும் உண்டு. முரசு நிறுவனம் செய்திருக்கும் இந்த பைலட் ப்ராஜ்க்டும் வெற்றி அடையப் போவதும் உறுதி.
ஆனால் அந்த தொழில் நுட்பம் பொதுமையாக்கப்படுமா என்ற கேள்வி குறியில் எழுந்தது இந்த பதிவு. 2010-ல் செல்பேசிக்குள்ளேயே தமிழ் வந்தாலும் ஒரு தரத்துடன் ஒற்றுமையாக வருமா என்பதும் என் ஆதங்கம். கணனி மாதிரியில்லாமல் செல்பேசி என்பது அடிமட்ட மக்கள் முதல் பயன்படுத்துகிறார்கள். அந்த தமிழ் அவர்களையும் சென்று சேருவதாக இருக்கட்டுமே. நான் மிக மிக சாதரணமானவன். ஒரு பாமரனுக்கு பட்டவைகளை தான் நான் பதிவில் போட்டுள்ளேன். நான் அவர்களுக்கு தொழில் நுட்ப, சந்தைப் படுத்தும் அறிவுரை தரும் அளவிற்கு என்னிடம் தொழில் நுட்ப சந்தைப்படுத்தும் அறிவு சரக்கு என்னிடம் இல்லை. அப்படியே கொடுத்தாலும் எடுபடுமா என்பது இன்னொரு கேள்விக்குறி??? அப்படியே எனக்கிருந்திருந்தால் இன்னொரு செல்பேசி மென்பொருள் அல்லவா உருவாகியிருக்கும்... ஹி ஹி...
இருப்பினும் உங்கள் பின்னூட்டம் என்னுள் சிலவற்றை திருத்திக் கொள்ளவும் உதவியது. நன்றி அன்பு.

நண்பருக்கு,
1.கைத் தொலைபேசிகளில் தோன்றும் எழுத்துக்கள் ஜவா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தோன்றுகின்றன. எனவே குறீயீட்டுப் பிரசினைகளுக்கான வாய்ப்புகள் அதிகமில்லை
2.நவீன கைத் தொலைபேசிகள்,(நவீன கணினிகளைப் போல) உலகில் உள்ள எல்லா மொழிகளையும் பயன்படுத்த ஏதுவாக, யூனிகோட் குறியீட்டு முறையை ஆதரிக்கின்றன.தமிழுக்கென்றே உள்ள டாம்,டாப், தகுதர குறியீடுகளை அவை கண்டு கொள்வதில்லை. எனவே பிரசினை எழாது
3முத்து மலேசியாவில் இந்த முயற்சிகளை மேற்கொண்டிருந்த அதே நேரத்தில், சென்னை அண்ணாப் பலகலைக்கழகத்தில் பாஸ்கரன் இதை முயன்று கொண்டிருந்தார். அண்மையில் நடைபெற்ற தமிழிணைய மாநாட்டில் இது தொடர்பாக மூன்று கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. மூவரும் இணைந்து செயல்பட இசைந்திருக்கிறார்கள்.
4.கைத் தொலைபேசிகளில் தகவலை உள்ளிட பலநேரங்களில் ஒரே விசையைப் பலமுறை பயன்படுத்த நேரிடும். (இந்தியில் ஒரே விசையை 7 முதல் 9 முறை பயன்படுத்த வேண்டியிருப்பதாக சொல்கிறார்கள்.) ஒரு எழுத்தை உள்ளைடும் போது அடுத்து என்ன எழுத்து தோன்றும் என்று ஊகிக்கக் கணினியைப் பழக்கி விட்டால் இந்தப் பிரசினையை ஓரளவு சமாளிக்கலாம். இதை Predictive Text Input என்று சொல்கிறார்கள். இதை சாத்தியமாக்க ஒரு சொல் தொகுதியை - அகராதி போல- உருவாக்க வேண்டும். இதை பலர் கூடிச் செய்யலாம்.
5.கைத் தொலைபேசியில் தமிழை உள்ளிடுவது பற்றி ஓராண்டுக்கு முன் திசைகள் இதழில் (பிப் 2004 தொடங்கி என்று ஞாபகம்.) மூன்று கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம். அவை இப்போது திசைகள் களஞ்சியத்திலும், முரசு இணைய தளத்திலும் உள்ளன. அவை இநத சிக்கலான தொழில் நுட்பத்தை உங்களுக்கு எளிதாக விளக்கும்.
6.கைத் தொலைபேசிகளில் தமிழை உள்ளிட வகை செய்வது தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சி. அதை ஊக்குவியுங்கள்; அது மேம்பட உதவுங்கள். அதைப் 'போட்டுத் தாக்க' வேண்டாம்.

அன்புள்ள திரு.மாலன் அவர்களே,
உங்கள் விளக்கத்திற்கு நன்றிகள் பல. யூனிகோடு பயன்படுத்துகிறார்கள் என்றதும் சந்தோஷம் தான். தமிழ் தகுதர குறியீடுகளில் முன்பு நடந்த போர்களைப் போல் இதிலும் போர்கள் இல்லாமல் இருந்தால் சந்தோஷமே. செல்தொலைபேசியில் தமிழ் - உலகெங்கும் ஒரே தரத்தைக் கொண்டுவரப் போராடுங்கள். நான் பார்வையாளன் மட்டுமே. தமிழிணைய மாநாடுகள் பற்றிக் கேள்விப் படுகிறேனே தவிர, அதை பற்றி புரிந்துக் கொள்வது அவ்வளவு லேசாக இல்லையே. ரீச்சை கொஞ்சம் அதிகப்படுத்தினால் நல்ல இருக்கும். ஏனென்றால் நிறைய விசயங்கள் வெளியே தெரியாமலே போய் கொண்டிருக்கின்றன. நேரம் கிடைக்கும் போது இந்த தொழில்நுட்பத்தை நீங்கள் குறிப்பிட்ட தளங்களுக்கு சென்று அலசுகிறேன், மீண்டும் நன்றிகள் பல.நானும் எதை எதையோ அள்ளிவிடுகிறெனென்று நினைக்கிறேன். இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

திரு. அழகியபாண்டியன் அனுப்பிய தகவல், தமிழில்:
திரு மூர்த்தி
முத்து நெடுமாறன் இன்றிரவு ஒலியில் நேரடியாகப் பேசுகிறார்
இரவு பத்து மணி முதல் 11 மணி வரை.
எல்லா சந்தேகங்களையும் அப்போது தீர்த்துக் கொள்ளலாம்,
நன்றி.

நன்றி மூர்த்தி,அன்பு. இன்று இரவு 10 மணிக்குள் வீட்டுக்கு வர முடிந்தால் அவர் நிகழ்ச்சியை கேட்கிறேன். தொடர்பும் கொள்கிறேன்.
See this news which appeared in Chennaionline.com
SMS could be sent in Tamil soon
Tiruchirappalli, Jan 10: The Tamil Virtual University is guiding the Anna University in its project to prepare Tamil Characters to enable mobile users send SMS according to V Sankaranarayanan, director of Tamil Virtual University today.
A key-pad is being prepared in Tamil for the cellular users and an Optical Character Recognition would be developed by a private engineering college, he told reporters here.

தமிழ் குறுஞ்செய்தி சேவையினை (சிங்களத்துக்க்குமாக ) இலங்கையில் மைக்ரோ இமேஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது பற்றி மேலதிகமான தகவல்களுக்கு -
http://mauran.blogspot.com/2004/11/blog-post.html#comments
இந்த சேவையின்படி, தகவலை உருவாக்கவே ஜாவா வசதியுள்ள செல்பேசிகள் தேவைப்படுமேயன்றி, பெற்றுக்கொள்ள வெறும் எம் எம் எஸ் (பல்லூடக தகவல் செவை) மட்டுமே இருந்தால் போதுமானது என்று சொல்கிறார்கள்.
நான் இன்னமும் பரிசோதித்துப்பார்க்கவில்லை.
நீங்கள் சொன்னபடி, தமிழ் செல்பேசிகள் வரவேண்டுமானால்,
அவற்றுக்கு சந்தை வாய்ப்பு அதிகமாக இருக்கவேண்டும்.
அல்லது செல்பேசி தொழிற்சாலை ஒன்றை நாம் நிறுவவேண்டும்.
நிறுவினால் மட்டும் போதாது அங்கே தமிழ் தொலைபேசிகள உருவாக்கவேண்டும்.
அதை தமிழர் அனைவரும் வாங்க வேண்டும்.
இதெல்லாம் சாத்தியம்கறீங்க?
சுலபமான(?) இன்னொரு வழி இருக்கு, அதை சொன்னால் என்னை மரபான வரட்டு கம்யூனிஸ்ட் என்று சொல்லிவிடுவார்கள் ;-))
பல்லூடக தகவல் சேவைக்கு இணையத்தளத்திலிருந்து தமிழ் குறுந்தகவல்களை இலவசமாகவோ அல்லது சிறு கட்டணத்துடனோ அனுப்பும் வசதியை இப்போதைக்கு நாம் தமிழர்களுக்கென பெற்றுக்கொடுக்கலாம்.
உங்கள் வலைக்குறிப்பு (blog) எனக்கு மிகவும் பிடித்த்ப்போய்விட்டது.
வாழ்த்துக்கள்

//The Tamil Virtual University is guiding the Anna University in its project to prepare Tamil Characters to enable mobile users send SMS according to V Sankaranarayanan, director of Tamil Virtual University today.
நான் கேள்விப்பட்ட வரையில் அந்த திட்டத்தில் திரு. முத்து-வும் தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவில் இருக்கிறார்.
திரு. மயூரன், MMS-ஆக அனுப்பும் தொழில்நுட்பம் கடந்தவருடமே(அல்லது அதற்கும் முன்னரே) முரசு நிறுவனமும் அறிமுகப்படுத்தியதுதான். அது மக்களை சென்றடையாததற்கு காரணம் அது MMSஆக அதாவது படமாக அனுப்பப்பட வேண்டும். அதற்கு தனி கட்டணம் உண்டு. அதுபோக அனுப்பபட்ட தகவலை பெற்றவரோ, மற்றவரோ மாற்ற(edit) முடியாது போன்ற் இன்ன பிற சிக்கல்கள்.
அதனால் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் அதன் அடுத்த கட்டம்.

http://www.microimage.com/mobile/Tamil/index.asp?mProddec=%20Fact%20Sheet
மைக்ரோஇமேஜீம் ஜாவா தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் சற்றே புதியவகை தொலைபேசியில்தான் சாத்தியம். ஆனால் ஜாவா MIDP 1.0 வகையிலேயே வேலைசெய்யும் போல. பெறுபவர்களுடைய தொலைபேசியில் MMS வசதியிருந்தால் போதுமானதாக இருக்கும்.

சந்தை மிக முக்கியம். அது இருந்தால் தான் பெரும்பாலான செல்பேசி நிறுவனங்கள் தங்களது பேசிகளில் நமது மொழியினையும் இணைக்கும். அரபி, சீன மொழிகளுக்கு சந்தை இருப்பதால் தான் மென்பொருட்களில் இருந்து செல்பேசி வரை எல்லாவற்றிலும் அந்த மொழிகள் புழங்குகின்றன.
தமிழ் குறுஞ்செய்தி வசதியினை கண்டுபிடித்த முத்து நெடுமாறனுக்கு பாராட்டுகள்.

சந்தைப்படுத்துவதில் எந்தத்தவறும் இல்லை. அரசு(?) பெரும் பல்கலைக்கழகங்கள் ஆகியவை தரப்படுத்தலில் ஈடுபட்டவேண்டும். அவை தம் கடமையைச் செய்யாததே பல குறியீடுகள் வரக் காரணம் ஆனது. அப்படி தரநிர்ணயம் வந்தால், பயன்பாடும் பரவலானால் செல்பேசி தயாரிப்பு நிறுவனங்கள், அல்லது செல்பேசி சேவை அளிப்போர் இம்மாதிரி கூடுதல் வசதிகளை இலவசமாக வழங்க முன்வருவர்.
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ