<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

தமிழக அல்ஜீரா டிவி

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
சன் டிவிக்கு ஒரு வி.சி.டி வந்ததாம். அது ஜெயந்திரர் பற்றியாம். என்னவென்று பரபர ஆவல் தொற்றிக் கொள்ள ரொம்ப நாள் கழிச்சி வெட்கப்படாமல் சன் நியூஸ் பாக்க ஆரம்பிச்சேன். போட்ட மேட்டர் ரொம்பவும் பரபரப்பா தான் இருந்திச்சி... ஞாபகத்தில் உள்ளதை ஏற்றுகிறேன் இங்கே.... இது உங்கள் பொழுது போக்கிற்கு மட்டும். தெளிவான விளக்கத்துக்கும் ராஜாவின் வலைப்பதிவை பார்க்கவும்

முகம் தெரியாத போலீஸ்--- யாரோ??? : சாமி எல்லாம் வசதியா இருக்கா?

ஜெயந்திரர் : "நீங்க கைது பண்ண வந்தப்ப - என் குருநாதரை ஜாக்ரதையா பார்த்துக்குங்க; வயசானவர்ன்னு இவன்(விஜயேந்திரர்) சொல்லணுமா இல்லையா? ஆனா என்ன சொன்னான் பாத்தீங்களா? என்ன கைது பண்ணிடுவீங்களா.. என் தம்பிய கைது பண்ணிடுவீங்களான்னு இவன் தன்னையும் தம்பிய பத்தியும் மட்டும் தான் கவலைப்பட்டான் பார்த்தீங்களா.. இவன இத்தனை நாளும் எப்படி கட்டி காத்தேன்; ஊட்டி வளர்த்தேன்.."

யாரோ : ஆமா என்ன வழக்குலயிருந்து விட்டுருங்கன்னு கேட்கிறா மாதிரி தான் இருந்திச்சி.அவரு என்கிட்ட தானே பேசிட்டு இருந்தாரு.

ஜெயந்திரர்: (இன்னொருவரை கைகாட்டி)... நீங்க என்ன கூட்டிகிட்டு போக வந்தப்ப, நீங்க இந்த டைரக்ஷ்ன்ல பேசிகிட்டு இருக்கீங்க. ஆன என் காது அவன் பேசுற கேட்டுகிட்டே இருந்துச்சி...

யாரோ : சாமிக்கு காது ரொம்ப ஷார்ப் இல்லேன்ன இவ்ளோ பெரிய மடத்தை நிர்வகிக்க முடியுமா?

அடுத்த காட்சிக்கு தாவுகிறது...

யாரோ: எவ்வளவு பெரிய மடத்தோட பொறுப்பில இருக்கும் சாமியார்கள் இந்த மாதிரி பெண்களோட உல்லாசம், தொடர்பு இருக்கலாமா சாமி. தம்பின்னு ஒருத்தன் அவன் பண்ற அநியாயம், தப்பு செய்றது அதை மறைக்க பண்ணுறதுக்கு ஒரு நிர்வாகம். இதெல்லாம் சரியா?

ஜெயந்திரர்: மவுனம்.

யாரோ: சங்கர்ராமன் கடிதங்கள்ல உங்களை பத்தி ஒரு பக்கம் எழுதியிருக்காருன்ன அவரை பத்தி 10 பக்கம் இல்ல எழுதியிருக்காரு....

(ஏதேதோ சொல்கிறார்கள் - என் நினைவுக்கு வரவில்லை)

ஜெயந்திரர்: (அதற்கு விழுந்து விழுந்து சிரிக்கிறார். அதையும் அவர் பயங்கரமாக முக எக்ஸ்பிரஷனுடன்... பிறகு...) அந்த அநியாத்தை பகவான் தான் கேக்கனும்.

யாரோ: சங்கர்ராமன் கோவில்ல வைச்சி கொல்லப்பட்டதாலே இவ்வளவும். அதுவே வெளியே நடந்திருந்த வேற மாதிரியில்ல இருந்திருக்கும்...

ஜெயந்திரர்: (சோகமாக..) நான் யாரையும் அடின்னோ, வெட்டுன்னோ, கொல்லுன்னோ சொல்லல. கஷ்டமாயிருக்குன்னு சொன்னதுக்கே இந்த ரியாக்ஷன்ன... ஹிம்ன்னு சொல்லியிருந்தா

யாரோ: இந்த மாதிரி வந்து கஷ்டபட வேண்டியிருக்கு...

என் கருத்து: VCD எப்படி வந்தது? ஏன் போலிஸ் சன் கேட்ட அனுமதிக்கு பதில் சொல்லவில்லை. புரியாத புதிர்கள் தான். எனினும் எதையோ தடுக்க போலிஸ் அல்லது அரசும் செய்யும் முயற்ச்சி என தெளிவாகிறது.

நடந்த உரையாடல்களின் ஒரு பகுதி தான் காட்டப்பட்டதால் முழு உரையாடலைக் கேட்டால் நாம் உண்மையை ஒரளவு யூகிக்க முடியும். சங்கராச்சாரிகளிடம் ஒற்றுமை இல்லை. நன்று. இதுவும் தெரிந்ததே... உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த அரைகுறை பாதி உரையாடல்களை வைத்து எதையும் தீர்மானிக்க முடியாது. எப்படியோ பரபரப்பு குட்டையில் ஆதாய மீன் பிடிச்சி நிறைய பேர் சந்தோசமா இருந்த சரி. அதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல...

தமிழகம் ஒரு நாடக மேடை. சங்கர்ராமன் வழக்கு சூப்பர் டூப்பர். யார் குற்றவாளி?... காலம் பதில் சொல்லட்டுமே...

ஆக மொத்தம் ஆப்கானிஸ்தான்க்கு அல்ஜீரா தமிழகத்திற்கு சன் டிவி....

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
Al-Jazeera, thalaivaa...
Al-Jeera is also nice, in a way!
 
ஹி ஹி.... குலாப் ஜாமுன்ல ஜீரா கம்மிய இருக்குதேன்னு நினைச்சிகிட்டு இருக்கும் போது எழுதுனா அப்படிதான் அல்ஜீரா ஆகும்....
 
pathirikkaiyil vantha ugankalum ,annumanankalaiyum urthipaduthuvathu poll clipings ullathu, neengal kannai thelivakka thiranthu parkkavum
 
சரி அனானிமஸ். சிங்கப்பூர் டைம்படி 10:30-க்கு சன் நியூஸ் போட்டதால அரைதூக்கத்தில அரைக் கண்ணை மூடிகிட்டு பார்த்துட்டேன். இன்னையில இருந்து நல்ல முழிச்சி முழிச்சி கண்ணை விரிச்சி பார்க்கிறேன். ஆமா! கண்ணை நல்ல தொறந்து பார்த்த காமிக்கிற க்ளிப்பிங்ஸ்-ல எல்லாம் தெரியுமா?
 
பாண்டியரே, பேசாம தியோட்டர்ல பிலிம் டிவிஷன் நியூஸ் ரீலை தூக்கிட்டு, ஜெயந்திரர் வாக்குமூலம்ன்னு படம் போட்டு காண்பிக்க தமிழக அரசைக் கேக்கலாம்
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->