-ல் போட்டுத் தாக்கியது
ரியாலிட்டி
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
நேற்று:
என் அம்மா என்னிடம்
"கண்ணா ஸ்கூல் போறதுக்கு பேக் எடுத்துக்கிட்டியா"
"எடுத்துக்கிட்டேன் மா"
"பேக்ல சிலேட் இருக்கா பாரு"
"இருக்குமா"
"டப்பால பல்பம் இருக்கா பாரு"
"இருக்குமா"
"டிபன் பாக்ஸ் வச்சிருந்தேனே எடுத்துக்கிட்டியா?"
"எடுத்துகிட்டேன்மா"
"சமத்துல நீ ஸ்கூலுக்கு போயிட்டு வாப்பா. ஸ்கூல் பஸ் வந்திருக்கும் பாரு"
இன்று:
என் மனைவி என்னிடம்
"ஏங்க வாட்ச் கட்டி கிட்டீங்களா?"
"கட்டிகிட்டேன்மா"
"மொபைல் போன் எடுத்துக்கிட்டீங்களா?"
"எடுத்துக்கிட்டேன்"
"ஆபிஸ் ஆக்ஸஸ் கார்டு எடுத்துக்கிட்டீங்களா?"
"எடுத்துக்கிட்டேன்மா"
"சமத்தா ஆபிஸ் போயிட்டு வாங்க. கம்பெனி பஸ் வந்திருக்கும் பாருங்க"
நாளை:
என் மகள் என்னிடம்
"அப்பா துணியெல்லாம் பேக் பண்ணி எடுத்துகிட்டீங்களா?"
"எடுத்துக்கிட்டேம்மா"
"அப்பா கையில கொஞ்சம் பணம் வச்சிருக்கீங்களா?"
"அதுவும் எடுத்து வச்சிக்கிட்டேம்மா"
"அப்பா எங்களோட போன் நம்பர் எல்லாம் குறிச்சிகிட்டீங்களா?"
"குறிச்சிகிட்டேன்மா"
"அப்போ அம்மாவை கைத்தாங்கலா பிடிச்சிகிட்டு 'முதியோர் இல்லத்துக்கு' கிளம்புங்கப்பா. அங்கேயாவது உங்க பசங்க பிடுங்கல் இல்லாம நிம்மதியா இருங்கப்பா. முதியோர் இல்லத்தோட பஸ் வந்திருக்கும் பாருங்கப்பா"
வாழ்க்கை ஒன்று தான். காட்சிகள் பல.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
அன்பு விஜய்
எனக்கு புரியவில்லை ஒரு நிதர்சனமான உண்மையை நீங்கள் எழுதியுள்ளீர்கள், அதற்கு இது வரை ஒரு பின்னூட்டமும் இல்லை.
அப்புறம் இதுவரை நீங்கள் என்னுடைய பின்னூட்டங்களை எங்கும் பார்த்திருக்க முடியாது, ஏனென்றால் கடந்த சில நாட்களாகத்தான் உங்கள் வலைப்பூவை நான் படித்துக் கொண்டு வருகிறேன்.
நன்றாக எழுதுகிறீகள். நான் என்ன நினைக்கிறேனோ அதையே நீங்களும் எழுதுவதுபோல எனக்கு தோன்றுகிறது.
எழுத்தில் முதிர்ச்சி கூடிக்கொண்டே வருகிறது. வாழ்த்துக்கள் தொடரட்டும்.

அன்புள்ள மஞ்சூர் ராசா,
தாங்களை அடையாளம் கண்டது 'துபாய் அரட்டை அரங்கத்தை பற்றிய பதிவில். பாராட்டு வார்த்தைகளுக்கு மிக்க நன்றி மஞ்சூர்.
இந்த பதிவுக்கு பின்னூட்டம் ஏன் இல்லை என்று கேட்கிறீர்களா? தேதியை கொஞ்சம் பாருங்களேன். ஜனவரி 2005. டிசம்பர் 2004 -ல் தான் நான் வலைப்பூவிற்குள் நுழைந்தேன். நம்ம தமிழ்மணம் மக்கள் உடனே யாரையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பார்த்து பிறகு தொடர்சியாக நல்ல எழுதினால் மட்டுமே பின்னூட்டம் கொடுத்து ஏற்றுக் கொள்வார்கள்.
அந்த மாதிரி விளைவில் அடிபட்டு போனது இந்த பதிவு.
தொடர்ந்து ஊக்கமொழி கொடுத்து வாருங்கள். இதை தவிர வேறு என்ன வேண்டும் சொல்லுங்களேன்.

<< திரும்ப முன் பக்கத்துக்கு போ