-ல் போட்டுத் தாக்கியது
நேர்முகத் தேர்வு
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
எனக்கு நாளைக்கு மதியம் 2 மணிக்கு நேர்முகத் தேர்வு இருக்கிறது. நேர்முகத் தேர்வு என்றவுடன் பயம் என்னைத் தொற்றிக் கொண்டது. ஏறக்குறைய 7 வருடங்கள் கழித்து நேர்முகத் தேர்வு என்ற environment-க்குள் நுழைகிறேன். எத்தனை நாள் தான் வேலையில் ஒரே மாதிரி இருப்பது. கட்டாயம் ஒரு மாற்றம் தேவை. இது ஒரு நல்ல வாய்ப்பு. என் அறிவு அனைத்தையும் நான் திரட்ட வேண்டும். வேலை ஞானம் மட்டுமே எனக்கு உண்டு. வேலையிடத்திலோ அல்லது நண்பர்களோ எதையாவது இது எப்படிப்பா வேலை செய்கிறதென்றால் எனக்கு தியரிடிக்கலாக விளக்க வராது. பதிலே இப்படியென்றால் கேள்வியும் சுத்தமாகக் கேட்கத் தெரியாது. வேலையிடத்தில் எவனாவது knowledge sharing என்ற பெயரில் யாராவது எதைப் பற்றியாவது பாடம் எடுப்பார்கள். இறுதியில், கலந்துக் கொண்ட அனைவரும் சரமாரி கேள்விகளால் துளைத்தெடுப்பார்கள். எனக்கு அப்போது கேள்வி கேட்கவும் வராது. இப்படியிருக்க நாளை நேர்முகத் தேர்வில் என்ன கேள்விகளோ என்ன பதில்களோ....
மனசு திக் திக்கென அடித்துக் கொண்டது. இரவு தூக்கமும் பிடிக்கவில்லை. கனவில் எல்லாம் நேர்முகத் தேர்வு நடப்பதைப் போன்ற உணர்வு தான். இரவு அடிக்கடி பயத்தால் தூக்கம் கலைந்தது. காலையும் வந்தது. யாரிடமும் எனக்கு பேசப்பிடிக்கவில்லை. மனது மதியம் 2 மணிக்கு நடக்கப் போகும் நேர்முகத் தேர்வை சுற்றித் தான் வந்தது. தற்போது வேலைச் செய்யும் இடத்திலும் வேலை ஓடவில்லை. இணைய தளத்தில் சென்று எனக்கு அனுபவம் உள்ள பகுதிகளின் கேள்வி பதில்களை (FAQ) அள்ளிச் சேகரிக்கிறேன். ஆனால் ஒன்றும் மண்டையில் ஏறவில்லை. என் வயிற்றில் ஐஸ் கட்டி மேலும் கீழும் தான் உருளுகிறது.
மதியமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. சாப்பிட சென்ற எனக்கு சாப்பாடும் பிடிக்கவில்லை. கொஞ்சம் சாப்பிட்டதுப் போக மீதிச் சாப்பாடை அப்படியே வைத்துவிட்டு எழுந்துவிட்டேன். போதும். 3 மணிக்கு மேல் ரிலாக்ஸாக சாப்பிட்டு கொள்ளலாமென்று.....
நேரம் நெருங்க நெருங்க நேர்முகத் தேர்வு அறைக்கு செல்ல காத்திருந்தேன். நேரமும் ஆகியது. அறையை நெருங்கினேன். எனக்கு முன்னமே அவர்கள் அறைக்குள் இருந்தார்கள். கடைசி வரை எனக்கு குழப்பம் நேர்முகத் தேர்வுக்கு நெக் டை அணிந்துச் செல்வதா, வேண்டாமா என்று? எனக்கு டை கட்டவராததால் வேண்டாமென்று முடிவுச் செய்தேன். இது குற்றமா? தெரியவில்லை. உள்ளே நுழைந்ததும் எதிராளி "ஹிம்ம்ம்..." என்ற ஏளனப் பார்வைப் பார்த்தார். எதற்கு இந்த ஏளனப் பார்வை? அர்த்தம் புரியவில்லை... டை கட்டாதாலா? இல்லை என் பேண்ட்டில் நான் மறதியில் ஜிப் போடவில்லையா? யாருக்கும் தெரியமால் கீழே குனிந்துப் பார்த்து கால் சட்டையில் ஜிப் போட்டிருப்பதை உறுதிச் செய்தேன். சந்தோஷம். இனி புகுந்து விளையாட வேண்டியது தான்.
ஏதோ கேள்விகள்.... ஏதோ பதில்கள்.... கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கைப் பிறக்கிறது. எதிராளியும் என் சில கேள்விகளுக்கு பக்... பக்கென்று முழிக்கிறார். அதைப் பார்த்து எனக்குள் ஒரு குரூர சிரிப்பு. எல்லாம் நல்லபடியாகத் தான் முடிந்தது.
நேர்முகத் தேர்வு அறையை விட்டு வெளியே வரும்போது பிரசவித்த மகிழ்ச்சி "என் வாழ்க்கையில் முதன் முதலாக நேர்முகத் தேர்வு நடத்தும் குழுவில் நானும் ஒரு முக்கிய அங்கமாக இருந்து கேள்வி கேட்டது" தான் என் மகிழ்ச்சிக்கு காரணம். விசய ஞானம் குறைந்தவர்களுக்கு கேள்வி கேட்பதும் கடினம் தானே!!!
என் மேலதிகாரி கேட்டார் "என்னப்பா! வந்த கிராக்கி தேறுமா?"
"இல்லை சார். Rejected"

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
நமக்கு எத்தனை பேர் ஆட்டம் காட்டியிருக்கின்றனர்?! வந்த சான்ஸை விடாமல் நிறைய
பேரை Reject செய்து கொண்டே இருங்கள் :-))
அன்புடன்,
'சுபமூகா'
பேரை Reject செய்து கொண்டே இருங்கள் :-))
அன்புடன்,
'சுபமூகா'
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ