-ல் போட்டுத் தாக்கியது
ஆயுத எழுத்து - 1
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
போன வாரம் அரட்டை அரங்கம் பார்த்தவுடன் மனதை பாதித்த ஒரு விஷயம் அந்த 105 வயதுப் பாட்டி. ஆதரவற்ற அந்த அனாதைப் பாட்டி 105 வயதிலும் உழைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க பேச, விசு அவர்களும் இந்த மாதிரி ஒவ்வொருவரும் உழைத்தால் இந்தியா 2020-ல் வல்லராசாகி விடுமெனக் கூவிக் கொண்டிருந்தார்.
வல்லரசு ஆகுமா ஆகாதா என கருணாநிதி, ஜெயலலிதா, இராமதாஸ், வைகோ போன்ற அரசியல் தலைவர்களை கற்பனையிலோ,நேரிலோ சென்று உரையாடுவது வேஸ்ட். ஏன்னா, அவங்க வாழ்ந்து கெட்டவங்க.
இங்கே மூன்று வேறு லட்சியங்கள் கொண்ட இளைஞர்களை சந்திக்கிறோம்,என்னையும் சேர்த்து... (என்னை இளைஞர்ன்னு சொல்றது உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா....).
அந்த நண்பர் வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக இந்தியா திரும்பியிருந்தார். சென்னை விமான நிலையத்தில் வரவேற்ற எனக்கு, நாட்டின் நிலமை பற்றிய தலைப்பில் எங்கள் விவாதம் நிலைக்குத்திட்டு நின்றது.
"You know, இந்தியாவில எதுவுமே சரியில்லை. அரசியலமைப்பு சரியில்லை. அரசியல்வாதிகள் சரியில்லை. You know, அவங்கள நினைச்ச மனசுக் கொதிக்குது. நம்ம நாட்டை நாடு மாதிரியா வச்சிருக்கானுங்க" அவர்
"ஆமா" நான்
"இங்க பாரு ஏர்போட்டை Renovate பண்ணியிருக்காங்களாம். குப்பைப் போட ஒரு குப்பைத் தொட்டி வச்சிருக்காங்களா.... அங்கெல்லாம் அது கரெக்டா இருக்கும்ல. இந்தியால இருக்கிற உங்கல விட எங்களுக்குத் தான் தாய் நாட்டு பக்தி ஜாஸ்தி. எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறோம் நம்ம நாட்டுக்கு. கோடி கோடியா அன்னியசெலாவணி ஈட்டித் தாறோம்"
"ஆமா அது என்னவோ உண்மை தான்"
"எவ்வளவு அன்னியசெலாவணி ஈட்டித் தந்த என்ன? எல்லாம் நம்ம அரசியல்வாதிங்க சட்டைக்கு பைக்குள்ள தானே போகுது"
"ஆமா அது என்னவோ உண்மை தான்"
"நான் ஒரு இந்தியால இருந்து வர்ற ஒரு நியூஸ¤ம் விடுறதில்லை தெரியுமா? நம்ம நாட்டில நடக்கு அநியாங்களைப் வலைப்பதிவு, இணைய பக்கம் எல்லாத்திலேயும் தாக்கி தாக்கி எழுதுகிறேன்"
"அடேங்கப்பா, ரொம்ப தேசபக்திப் போல"
"பிறகு இருக்காதா எத்தனை மைல் தள்ளி நம்ம பெத்தவங்க, ரிலேட்டிவ்ஸ் எல்லாத்தையும் விட்டுட்டு போய் சம்பாதிக்கிறோம். என்னுடைய உழைப்பை இங்க அனுப்பிச்ச, அதை மத்தவங்க சுரண்டுறாங்கன்ன நான் எப்படி சும்மா விடமுடியும் சொல்லு?"
"அதுவும் சரி தான்"
"அமெரிக்கவுல அவங்க பணம் என்ன? சிங்கப்பூர்ல அவங்க சுத்தம் என்ன? எல்லாம் எப்படி வந்திச்சு. எல்லாம் அவங்களோட உழைப்பு. நாமளும் இப்படி வெளியூர்ல மாடா உழைச்சி காசு அனுப்பினாலாம் நம்ம நாட்டில இம்ப்ரூமெண்ட் மெதுவாத் தானே இருக்கு....."
"அதுவும் சரி தான்"
(ஒரே மூச்சில் எழுத நேரமின்மையால் ஆயுத எழுத்து இரண்டாம் பாகமாக இன்றைய நாள் கடைசியில் வெளியிடுகிறேன்)

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ