-ல் போட்டுத் தாக்கியது
ஆய்த எழுத்து -2
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
ஆய்த எழுத்து பாகம் 1 படிக்க இங்கே சொடுக்கவும்
மூச்சிவிடாமல் இந்தியன் சிஸ்டத்தைப் பொரிந்துத் தள்ளிய நண்பனை அசுவாசப்படுத்த, அவருடைய உறவினர்கள் புடைச்சூழச் சரியாக இருந்தது.
உறவினர் கூட்டத்தில் ஒருவர் "ஏம்பா எப்ப இந்தியாவுக்கு மொத்தமா வர்றதா உத்தேசம்".
அதற்கு அவர் "இங்கே வரனும்னா கஷ்டம் தான் மாமா... அங்கேய கார் வீடுன்னு வசதியா இருந்து பழகிப் போயிடுச்சி. இங்கே வந்து மாமா எப்படி இருக்கிறது. அதுவுமில்லாம எனக்கு க்ரீன் கார்டு வேற கிடச்சிருச்சா... அதுனால இங்கே வரனும்னு அவசியமில்லை மாமா. அங்கேயே கொஞ்ச நாள் இருந்தா சிட்டிசன்சிப் கிடைச்சிரும். அப்பறம் ரொம்ப வசதியாயிருமில்லை"
நான் "அதுவும் சரி தான்"
அவர் எதோ பேசினார், என்னமோ நடக்குதுன்னு நான் பாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன்.
வழியில் இன்னொரு இளைஞரைச் சந்தித்தேன். இவரைப் பற்றிக் கட்டாயம் சொல்ல வேண்டும். சிந்தனை சிற்பிகள் என்ற தொண்டு இயக்கத்தை ஆரம்பித்து, வாவிப்பாளையம் என்ற கிராமத்தை முன்மாதிரிக் கிராமமாக மாற்ற வேண்டுமென அயராது உழைப்பவர்களில் அவரும் ஒருவர். அதற்காக தன் முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொண்டவர். ஏதோ வேலை விசயமாக சென்னை வந்தவர் கண்ணில் நான் மட்டித் தொலைத்துவிட்டேன்.
"வாப்பா எப்படி இருக்கே? வாவிப்பாளையத்தில உங்க தொண்டு வேலையெல்லாம் எந்த அளவுக்கு போயிட்டு இருக்கு" நான்.
"எல்லாமே அருமைய போயிட்டு இருக்கு விஜய். நிறைய இரவுப்பள்ளி ஆரம்பிச்சிருக்கோம். பெரியவங்க எல்லாரும் இரவுப்பள்ளிக்கு வர்றாங்க. ஏகப்பட்ட பணிகள் போயிட்டு இருக்குப்பா"
"எப்படி நம்ம அரசியவாதிங்க, அதிகாரிங்கட்ட இருந்து உதவிகளை வாங்கீறீங்க. நம்ம இந்தியன் சிஸ்டம் எதுவுமே சரியில்லையே" என்று எடுத்துவுட்டேன்.
"சிஸ்டம் சரியில்லைன்னு சொன்ன எப்படி? எல்லாம் நல்ல தான் இருக்கு. எல்லாம் நம்ம பார்வையில தான் இருக்கு. நல்ல இருக்கிறதும் நல்ல இல்லாததும், நீ தான் கண்கூடாத் தான் பார்த்துட்டு இருக்கியே. எவ்வளவு நற்பணிகளை அரசாங்க உதவி மட்டும் இல்லாம, மக்களோட உதவியோடும் நாங்க முடிச்சிருக்கீம். மக்கள் என்றால் இந்தியால இருக்கிறவங்க மட்டும் இல்ல, அயல்நாட்டுல இருக்கிற மக்களும் அருமையா உதவி பண்றாங்க. அவங்க உதவின்னு இல்லாம, எந்த விதத்திலேயாவது ஊக்கம் கொடுத்தாலும் போதும் விஜய் நிறைய சாதிக்கலாம்"
"ஏங்க நீங்க ·பாரின் எல்லாம் போகலியா?" நான்.
"அது சரி நாங்க ·பாரின் போன இதை எல்லாம் செயல்படுத்துறது யாரு? நிறைய பேசலாம் அது சரியில்ல இது சரியில்லன்னு. இப்படி எல்லாருமே சொல்லிட்டிருந்தா அதை யாரு சாரி பண்றது. அதெல்லாம் சரி முன்னாடி நிறைய இதுல இன்வால்வ் பண்ணிகிட்டிருந்தே. இப்போ என்ன எதுவுமே கண்டுக்கிறதுல்ல"
"ஹி ஹி ஹி அதுவா எனக்கு ஆபிஸ்ல நிறைய வேலை" என்று என் தொப்பை முன் ஓட நான் பின் ஓடினேன்.
வீட்டுக்கு வந்ததும் என் அம்மா யாரிடமோ போனில் சொல்லிக் கொண்டிருந்தார் "எம் பையன் வேலை பாக்கிறன்னு அர்த்தம். கொஞ்சம் கூட பொறுப்பே வரலே. லைப்ல என்னத்தான் பண்ண போறானோன்னு கவலையா இருக்குன்னு" புலம்பிக் கொண்டிருந்தார்.
2020-ல் இந்தியா வல்லராசாக... (ஒரு கற்பனை தாங்க)
அந்த அமெரிக்கா நண்பர் அதே மாதிரி தான் புலம்பிக் கொண்டிருந்தார். "இந்தியா வல்லரசு ஆச்சுன்னு பேரு இன்னும் இந்த அரசியல் மற்றும் ஒரு சிஸ்டமும் சரியாகலை. இன்னமும் அரசியல்வாதிங்க அரசியல்வாதிங்களாத் தான் இருக்காங்க"
அந்த சிந்தனைச் சிற்பிகள் நண்பர் "இல்ல விஜய், உலகத்தை மத்த வல்லரசு நாடுங்க நிம்மதி இல்லாமப் பண்ணிட்டு இருக்காங்க. நாங்க ஒரு மாதிரி நாட்டை உருவாக்கப் போறோம். அது அமைதின்னா என்னான்னு இந்த உலகத்துக்கு உணர்த்தும்" என்றார்.
"அதுவும் சரி தான்" நான்.
கொஞ்சம் தளர்ந்த நடையுடன் வீட்டில் நுழைய எத்தனிக்க, என் மனைவி என் அம்மாவிடம் போனில் "அத்தே! இவ்வளவு வயசாகியும் பொறுப்புங்கிறதே கொஞ்சம் கூட வரலே, எல்லாத்துக்கு ஆமாம் சாமி போட்டுட்டு தான் இன்னும் அலையிறார்"
2025-ல்.....
அந்த அமெரிக்க நண்பரும், சி.சிற்பிகள் நண்பரும் அவரவர் வேலையில் பிசியாக இருக்க.... என் பிள்ளைங்க அவங்க நண்பர்களிடம் "எங்கப்பாக்கு இன்னும் பொறுப்புங்கிறதே வரலே. வயசு கடந்து நான் நிக்கிறேன். என்னை கல்யாணம் பண்ணி வைக்கனும்னு எதாச்சி பொறுப்பு இருக்க!!!!!"
அவரவர் அவரவர் நிலையில்......

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ