<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

கிரேட் எஸ்கேப்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
"அய்யோ! இரண்டு மகளோட வாழ்க்கையை நினைச்சி நினைச்சி தினம் தினம் ராத்திரி தூக்கம் வரலையே. என்ன இருந்தாலும் இந்த சாந்திக்கு இவ்வளவு கஷ்டம் வரக்கூடாது கடவுளே. அந்தக் குடும்பத்துக்காக எவ்வளோ கஷ்டப்படுறா. அந்த வீட்டுல யாருக்குமே தெரியலையே அவளோட அருமை. அவ என்ன தப்பு செஞ்சன்னு சாந்தியை வீட்ட வீட்டு துரத்துறாங்கன்னு தெரியல படுபாவிங்க. எல்லாம் அந்த வீட்டுல இருக்காளே ஓரக்கத்தி அபிராமி.. எல்லாம் அவ பண்ற வேலை. அவளை முதல்ல வீட்டை விட்டு துரத்தனும். ஒரு பொண்ணோட வாழ்க்கை இப்படி இருக்குன்ன, என்னோட இரண்டாவது பொண்ணோட வாழ்க்கையும் இப்படி வாழாவெட்டி ஆகிட்டே. ஒன்னுமே வேணாமுன்னு புருஷனை இப்படி வெட்டி விட்டு வந்துட்டாலே.... அவ செஞ்சதும் சரி தான். அந்த பாஸ்கர் படுபாவி வாயிலே வந்ததெல்லாம் கேட்டானே... அவன் நல்ல இருப்பானா? அவ மாமியர் நல்ல இருப்பாளா? அந்த குண்டம்மா மாமியா எம் பொண்ணை என்னா பாடு படுத்தினா. எழு ஜென்மத்துக்கும் அந்த பாவம் அவளை விடாது.... அய்யோ அய்யோ"

வயிற்றில் அடித்து கொண்டு ஒப்பாரிக் வைத்துக் கொண்டிருந்த அந்த பெரியம்மாவின் வீட்டில் மெதுவாக எட்டிப் பார்த்தேன். டி.வியும் முன்னாடி உட்கார்ந்து அழும் அந்தப் பெரியம்மாவைப் பார்த்ததும் சகலமும் விளங்கியது. இது "ஆனந்தம், கோலங்கள்" மெகா சீரியல் பார்த்துக் கொண்டிருக்கும் பெரியம்மாவில் நடக்கும் ரசயான மறுதல்கள் தான் என்று.

அழுதுக் கொண்டிருந்த அந்தப் பெரியம்மாவின் மருமகள் மெதுவாக தயங்கி தயங்கி அவரை அணுகிக் கொண்டிருந்தார். "அத்தே! இந்த குழம்பு கொஞ்சம் ருசி பண்ணுங்களே.". "போடி போக்கத்தவளே, உன் அப்பன் நல்ல நேரத்தில உன்னை பிடிச்சிக் கொடுத்தான் இங்கே. வேல கெட்ட நேரத்தில வந்து என்னடி கேக்குற" என்று மாமியார் மருமகளின் குடுமியை பிடிப்பதற்குள் நான் "எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்......"

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->