<body><iframe src="http://www.blogger.com/navbar.g?targetBlogID=9439067&amp;blogName=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%21%21%21%21%21&amp;publishMode=PUBLISH_MODE_BLOGSPOT&amp;navbarType=BLACK&amp;layoutType=CLASSIC&amp;homepageUrl=http%3A%2F%2Fhalwacity.blogspot.com%2F&amp;searchRoot=http%3A%2F%2Fhalwacity.blogspot.com%2Fsearch" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" height="30px" width="100%" id="navbar-iframe" title="Blogger Navigation and Search"></iframe> <div id="space-for-ie"></div> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

தலை நிமிர விடாத தமிழர்கள்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : அல்வாசிட்டி.சம்மி
பெயர் : செல்வி ஜெ.ஜெயலலிதா

பிறப்பு : 24-02-1948

விருதுகள் :

கலைமாமணி (1972), சென்னை பல்கலை கழகத்தின் மருத்துவர் பட்டம் (1991), தமிழ் நாடு விவசாயப் பல்கலை கழகத்தின் அறிவியலில் மருத்துவர் பட்டம் (1992), உக்ரைன் மனித உரிமை கழகத்தின் தங்கத்தாரகை விருது (?).

திருமணம் : செய்துகொள்ளவில்லை (சோபன் பாபு?)

தொழில் : விவசாயம் (அரசியல்?)

நன்றி தமிழ் நாட்டரசின் இணையதளம்

செயல்கள் :

1. இதில் இப்படி கூட ஊழல் செய்ய முடியும் என கருணாநிதிக்கே கற்றுக்கொடுத்தவர்.

2. நடிகை -> கொ.ப.செ -> சட்டப்பேரவை உருப்பினர் -> முதல்வர் -> அன்னை -> ஜெயில் கைதி -> முதல்வர் என சுய முன்னேற்றம் கண்டவர்.

3. தன்னைவிட வயதானவர்களையும் தன் காலில் விழவைத்த செயற்கறிய செயல்.

4. ஊழல் செய்த பணத்தை கருணாநிதி மாதிரி சரியான(?) முறையில் முதலீடு செய்யத்தெரியாதவர்.

5. கருணாநிதி என்ற சாணக்கியனை, உடன்பிறவா சகோதரர் (மருத்துவர்) என்று மற்றும் பலரையும் தனியொரு ஆளாக சமாளித்தல்.

6. சட்டத்தை தனக்கேற்றவாரு வளைக்கும் வில்லி (வில் மாதிரி-னு சொல்ல வந்தேன்).

7. இத்தனை வழக்குகள் தம்மீதிருந்தும் முதல்வராக நீடிப்பது.


இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
அண்ணாச்சி:

அடுதத முறை ஊருக்குப் போக சென்னை வழியாகத்தானே வருவீங்க?
 
ரொம்ப தான் தெகிரியம்பா உனக்கு... !! எதுக்கும் உஷாரா இருந்துக்கோ..அவ்ளோ தான் சொல்ல முடியும்.... !! :)

வீ .எம்
 
நாடோடி, வி.எம் அண்ணாச்சிகளா வருகைதந்தமைக்கு நன்றி.

நா சென்னை வழியா ஊருக்கு வரமாட்டேன் நமக்கு திருவனந்தபுரம் வழி???

சரி சிங்கையில் பக்கத்துல ஏதாவது ஆட்டொ வருதானு பாக்குறேன். இல்லாட்டி நம்ம ஊரு சின்னத்த கையோட வச்சிகிட வேண்டியதான்? ஒரு பாதுகாப்புக்குதான்.
 
//தொழில் : விவசாயம் //

:-)
..நமக்கும் இதோ தொழில்தானுங்க. :-(
 
சம்மி அண்ணாச்சி,

//தொழில் : விவசாயம் //

தமிழக அரசின் அதிகாரபூர்வ தளத்துக்கு குசும்பு தான்..

அப்படியே அத்தனை போகம் இதுவரை அறுவடை செய்திருக்கிறார் என்றும் குறிப்பிட்டு இருக்கலாம் இல்லையா? (சத்தியமா சிலேடை இல்லை.. நம்புங்கப்பா..)

//நமக்கு திருவனந்தபுரம் வழி???//

திருவனந்தபுரத்துக்கு ஆட்டோ அனுப்ப முடியாதா எங்களால்??

நான் அபீட்டு..
 
என்னா அண்ணாச்சி, விவசாயம்னா எல்லாம் கிண்டல் பண்றீங்க... அம்மாவுக்கு அளவுக்கு அதிகமா சொத்து சேர்ந்ததுக்கு திராட்சை பண்ணைல வெளஞ்ச லாபம்தான்னு கோர்ட்லயே ஏத்துக்கிட்டாங்களே தெரியாது... நாங்கூட ஒரு திராட்சை தோட்டம் வாங்கி போட்டேன்.. ஒரு போகம் வெளஞ்சதுக்கு அப்புறம்தான் சொன்னாங்க, என் தோட்டத்து திராட்சை கொடில திராட்சை பழமாத்தான் வெளயுது ஹைதராபாத்ல மாதிரி தங்கத்துல இல்லைன்னு... அப்புறம் அடிமாட்டு விலைக்கு விக்க வேண்டியதா போச்சி...
 
அதாவது டாக்டர் பட்டம் இருந்தா மருத்துவர், திரட்சை தோட்டம் இருந்த விவசாயி. இதை தானே சொல்ல வர்றீங்க முகமூடி. ஹைடெக்ல இருந்துட்டேன். விசயம் புரியல். எனக்கும் வீட்டுல சின்ன தோட்டம் உண்டு. அப்போ நானும் ஒரு விவசாயி.

-ராமன்.
 
என்ன அண்ணாச்சி இப்படி சொல்லீட்டீங்க? விவசாயம்-னா கிண்டல் பண்ணுவாங்களா? எங்க அப்பாரு ஒய்வு பெற்றதுக்கப்புறம் அதானே செஞ்சுட்டு இருக்காரு (அப்ப நா விவசாயி மகனா?).

தங்கத்தலைவி அதான் செய்யுறாங்க அரசியல் அவங்க தொழில் இல்லனு தெரிஞ்ச சந்தோசம் அண்ணாச்சி அது.

எங்கப்பாடையும் கேட்டு பாத்துட்டேன் தங்கம் வெளைய மாட்டேங்குதாம்? ஒருவேளை ஐதிராபாத்துல வெளையும் போல? என்ன அங்கனையும் வாங்கிரலாமா முகமூடி (அதுக்கு ஒன்னு அம்மா கச்சில கொ.பா.செ வா இருக்கனும் இல்லாட்டி அப்பு கிட்ட வேலைக்கு போகனும்)?

வந்த எல்லாருக்கும் நன்றிபா.
 
//நா சென்னை வழியா ஊருக்கு வரமாட்டேன் நமக்கு திருவனந்தபுரம் வழி???//

அது ஒன்னும் ரொம்ப தூரத்தில் இல்லீங்கோ..
 
//she took up a career in films in Tamil, Telugu, Kannada, Hindi, English and Malayalam
//
இங்கிலிஷ் படமா ? அது என்ன படம்

ஹைதராபாத் ஒரு வேளை பொண்ணு வெளையிர பூமி போல.

ஆட்டோவா ? அருவாளா ? பாக்கலாம்.
 
அட.. யாருப்பா அது 'ஜெ'வை 'தமிழர்'ன்னு சொல்றது?! அந்த வார்த்தையெல்லாம் ஒரு சிலரோட குடும்பச் சொத்துப்பா. 'ஜெ'வை தமிழர்னு சொல்லி தமிழின துரோகி பட்டியலில் சேர்ந்திட்டியேப்பு!
 
///சென்னை பல்கலை கழகத்தின் மருத்துவர் பட்டம் (1991), தமிழ் நாடு விவசாயப் பல்கலை கழகத்தின் அறிவியலில் மருத்துவர் பட்டம் (1992)///

விஜய்,
மருத்துவர் பட்டம் வாங்கிய முதல்வர் யாரும் எனக்கு நினைவில்லை. ஜெயலலிதாவுக்கு கொடுத்தது கவுரவ முனைவர் பட்டம் அல்லது கவுரவ டாக்டர் பட்டம் மட்டும்தான்.
 
அடங் கொக்க மக்கா, யாரை பத்தி எழுதுற.. என்னா தைரியம் உனக்கு.. ஏப்பூ நீ திருவனந்தபுரம் வழி வந்தாலும் வராவேண்டிய இடம் திருநெல்வேலி தாண்டி.. நயினாரு தெரியுமா ?

என்னா பண்ணாலும் உனக்கு இருக்கு ஆப்பு..

கண்டிப்பாக கடைசியில் காப்பு..
 
:-)
அடுத்தது யாரு, கலைஞரா?
 
//விஜய்,
மருத்துவர் பட்டம் வாங்கிய முதல்வர் யாரும் எனக்கு நினைவில்லை. ஜெயலலிதாவுக்கு கொடுத்தது கவுரவ முனைவர் பட்டம் அல்லது கவுரவ டாக்டர் பட்டம் மட்டும்தான்.//

முத்து

இந்த பதிவை எழுதியவர் நமது நண்பர் 'சம்மி'. அவரது எழுத்தை வேறுபடுத்தி காட்ட ப்ளாக்கர் டெம்ப்ளேட்டில் சில மாற்றம் செய்ய வேண்டியுள்ளது.
 
வருகைதந்த எல்லாத்துக்கு நன்றி.

முத்து அண்ணாச்சி கவுரவ மருத்துவர் பட்டம்-னு போடனும். தவறுக்கு மன்னிக்கவும்.

//அடுத்தது யாரு, கலைஞரா?//
;-)
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->