<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

தலை நிமிர விடாத தமிழர்கள் - 2

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : அல்வாசிட்டி.சம்மி

பெயர் : கலைஞர் கருணாநிதி

பிறப்பு : 03-06-1924விருதுகள் : அண்ணாமலை பல்கலை கழகத்தின் கவுரவ மருத்துவர் பட்டம் (1971), தஞ்சாவூரி பல்கலை கழகத்தின் ராஜராஜன் விருது.


திருமணம் : திருமணமானவர் (எத்தனை?), குழந்தைகள் 4 ஆண்கள், 2 பெண்கள்.


அரசியல் : முழுநேர அரசியல்வாதி, 1949-ல் திமுகவை தோற்றிவித்தவர்களுள் ஒருவர், திமுகவின் பொருளாளர் (1961), 1969 முதல் திமுக தலைவர்.முப்பதாண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை/மேலவை உறுப்பினராக இருந்தார், 1957-1996 வரை போட்டியிட்ட எல்லா இடங்களிளும் வெற்றி (போதும்பா பெரிய
பட்டியலே இருக்கு)


அரசியல் நலத்திட்டங்கள் :


1. பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லங்கள் (ஊருல இதுவர என் கண்ணுல படவே இல்லை)

2. கண்ணொளித் திட்டம்

3. முக்கிய நாட்களில் இலவச அரிசி வழங்கும் திட்டம், மூக்குக்கண்ணாடி வழங்குதல் (இப்படி இலவசமா குடுத்து குடுத்து மக்கள கெடுத்து வச்சிருக்காங்க, காமராஜர் எழைகளின் நலனுக்காக ஆரம்பித்ததை சாக்காக வைத்து மக்களை எழைகளாக வைத்திருந்து பின் இலவசமாக கொடுப்பது மாதிரி கொடுத்து ஓட்டு வாங்குவது, இது எம்.ஜி.ஆர் அறிமுகபடுத்திய முறை)

4. கை ரிக்சாகளை ஒழித்தது (ஒழித்தார்களா இல்லை தானாக ஒழிந்ததா?)

5. குடிசைமாற்று வாரியம் (சென்னைக்கு மட்டும் பொருந்தும்)

6. பெண்களுக்கு சம சொத்துரிமைச்சட்டம் (நல்ல விசயம்)

7. ஏழைப்பெண்களுக்கு திருமண உதவி, பட்டப்படிப்பில் உதவி (அரசாங்க காரியம், எந்த நிலையில் இருக்கும் என்பதை சொல்லத்தேவையில்லை)

8. ஏழைப்பெண்களுக்கு பிரசவ உதவி (இதைபற்றி முன்பு ஒரு பதிவில் பின்னூட்டம் கூட இட்டேன். இதில் பிரசவத்தின் போது அந்த செவிலித்தாய்கள் திட்டும் திட்டுகளை என் மனைவி சொல்லிக்கேட்டிருக்கிறேன். எ.கா. புருசன் கூட படுக்.... மட்டும் நல்லா இருந்துச்சி இப்ப ஏண்டி இப்படி கத்துற?)

9. சமத்துவபுரம் (எதில் சம்த்துவம் காசுபார்ப்பதிலா?, அது அமைந்திருக்கும் இடத்தை பார்த்திருக்கிறீகளா?)


இப்படி நெறைய இருக்கு.


நன்றி திமுகவின் இணையதளம்.


செயல்கள் :

1. ஊழல் செய்ய கற்றுக்கொடுத்தவர். தமிழகத்தில், ஊழலை எப்படி செய்யவேண்டுமென கற்றுத்தந்தவர்.

2. கொள்கை அது தேர்தல் இல்லாத நேரத்தில் பேச, மற்ற படி தேர்தல் நேரதில் மதவாத கட்சிகளை, சாதிக் கட்சிகளை சேர்த்துக்கொள்வது அல்லது விரட்டுவது அப்பொழுதுள்ள நிலையை பொறுத்து அமையும் (சந்தர்ப்பவாதி).

3. "சுனாமியை விட உயரமாக குதிப்பவர்கள்" - காஞ்சி தேர்தல் வெற்றிக்குப்பிறகு அதிமுகவை பற்றி அவர் கூறியது, அப்படியென்றால் பாரளுமன்ற தேர்தலுக்கு அல்லது இந்த இடைத்தேர்தல் வரை இவர்கள் குதித்ததை என்வென்று சொல்வது? மேலும் ஒரு மாநில கட்சித்தலைவர் தன் மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு சோக நிகழ்வை தம் கட்சி நலனுகாக பயன்படுத்தியது அவரது உண்மையான முகத்தை காட்டும்.

4. இவர்கள் ஜெயித்தால் தமிழன் முழுச்சிக்கிட்டான், இல்லாட்டி தூங்கீட்டானா?

5. மொழி வெறியை தமிழகத்தில் கொண்டுவந்த பெருமை.

6. வாரிசு அரசியலை தமிழகத்தில் புகுத்திய பெறுமை.

7. சன் தொலைக்காட்சியில் தினமும் ஒரு அறிக்கை விடாட்டி தூக்கம் வராது?

8. தமிழுக்காக அரும்பாடுபடும் இவர்கள் நடத்தும் பத்திரிக்கைகள் : முரசொலி (அரசியல் அவ்வப்பொழுது ஜெ வைத்தாக்க இலக்கியம்), குங்குமம் (BEST கண்ணா BEST...தமிழ்?), முத்தாரம் (?), வண்ணத்திரை (கிட்டத்தட்ட மஞ்சள் பத்திரிக்கை) ஆதாரம் சன் குழுமத்தின் வலைதளம்


Image hosted by PicsPlace.to


இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
//கவுரவ மருத்துவர் பட்டம் //

கவுரவ முனைவர் பட்டம் பொறுத்தமானது, கவுரவ மருத்துவர் பட்டமல்ல...
 
எப்படி இவ்வளவு தைரியமாக ப்ளாகிக்கிறீர்கள்!!!! யம்மாடியோவ்!!
 
Yellam velila irukura thayiriyam than :-))
 
அண்ணாச்சி:

விஞ்ஞான முறையில் ஊழல் செய்வதை தமிழகத்துக்கு அறிமுகப் படுத்தியது (சொல்-உதவி: நீதிபதி சர்க்காரியா) தி.மு.க வின் சாதனை.

அம்மாவுக்கு இந்த விஷயத்தில் அந்த அளவிற்கு அனுபவம் கிடையாது. நம்ம ஊர் பெண்கள் மாதிரி, சேலை வாங்குவது, நகைகள் வாங்குவது,செருப்பு வாங்குவது, தோட்டம் வாங்குவது தான் தெரியும். அதனால் தான் மாட்டிக்கிட்டது.
 
விஜய், இன்னும் கொஞ்சம் காரமாக இருந்திருக்கலாம் இந்தப் பதிவு.
//பெறுமை.// - அல்ல 'பெருமை'.
நன்றி!
 
சுதர்சன்,

//விஜய், இன்னும் கொஞ்சம் காரமாக இருந்திருக்கலாம் //

இந்த பதிவுக்கு சொந்தக்காரர்: அல்வாசிட்டி சம்மி.

பிழையை திருத்துகிறேன். நன்றி.
 
முதலில் டிஸ்கெள்யமர் - நான் திமுக காரனில்லை. தமிழ்நாட்டினை தலை நிமிர விடாத தமிழர்கள் பற்றி நீங்கள் எழுதுவதில் எனக்கு மகிழ்வே. ஆனால், கருணாநிதியினை இந்த கூட்டத்தில் சேர்க்க முடியுமா என்றால் என்னால் முழுமையாக ஒத்துக் கொள்ள முடியவில்லை. கொஞ்சம் வேறுபாடுகள் இருக்கின்றன.

ஊழல் செய்திருக்கிறார். கோடி கோடியாய் சொத்துக்கள் சேர்த்திருக்கிறார் என்பதெல்லாம் சரி. ஆனால், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும் உதவியிருக்கிறார். ஹுண்டாயும், டைடல் பார்க்கும், போர்டு தொழிற்சாலையும், சென்னையெங்கும் மேம்பாலங்களும் கட்டியது அவர் ஆட்சியில்தான். தவறே செய்யவில்லை என்று நான் சொல்லவரவில்லை. ஆனால், கருணாநிதி அம்மா அளவிற்கு இல்லை. கொஞ்சம் கஞ்சம். சொத்தெல்லாம், தன் குடும்பத்திற்கே வேண்டுமெங்கிற அதிபேராசையுடையவர்.

இங்கே இடைத்தேர்தலில் அதிமுக வென்றதற்கு சொல்லும் மிக முக்கிய காரணம், அடிமட்ட தொண்டர்களுக்கு அதிகமாக பணம் கொடுத்து உதவியது அதிமுக, இதில் சில திமுக தலைகளும் அடங்கும்.

கருணாநிதி கொஞ்சம் வழவழா கொழகொழா தான், ஆனால் அம்மா அளவிற்கு அதிகார துஷ்பிரயோகம் செய்பவரில்லை. அம்மா அளவிற்கு தமிழ்நாட்டினை கீழே கொண்டு போனவருமில்லை.
 
திட்டுனது எல்லாம் ஓகே.யாரும் ஒழுக்கம் இல்லைதான்.அரசியல் நலத்திட்டங்களில் 1.உழவர் சந்தை(அருமையான திட்டம் அம்மாவந்து அழிச்சுபுட்டாங்க)
2.மினி பஸ்(இதையும்தான் அழிக்கப் பாத்தாங்க ஆனா முடியலே இப்போ சென்னைலையும் மினி பஸ் விடுராங்கலாம்)
திட்டங்களை சொல்லாமல் விட்டது தெரிதா?தெரியாமலா?
 
தமிழகத்தில் இன்று கைரிக்சா இல்லை இதற்கு காரணம் திரு.கருணாநிதி அவர்கள்
ஏன் என்றால் இப்பொழதும் மேற்கு வங்கத்தில் இன்று கைரிக்சா உண்டு கூட (கம்யூஸ்டுக்கள்) ஆட்சி
கூட ஒழிக்கவில்லை
அரசு எப்பொழது சில சலுகைகள் மக்களுக்கு அளிக்கும் அதை குறைக்சொல்ல கூடாது
தயவுச்செய்து நடுநிலைமையுடன் சிந்தனை செய்யுங்கள்

சந்திரன்
 
//கவுரவ மருத்துவர் பட்டம் //

இவ்வாறு தி.மு.க தளத்தில் இல்லை...

முனைவர் என்று தன் உள்ளது..

பார்க்க: http://www.thedmk.org/bio/btam.htm
 
தமிழகத்தில் மட்டுமல்லா உலகத்தில் எல்லா நாடுகளின் வாரிசு அரசியல் உண்டு உலகத்தை பார்க்க !!!
தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியில் தன் பல நல்ல காரியம்கள் நடந்து என்பதை நினைவில் கொள்ள
வேண்டும் நன்றி இல்லாமல் எழத கூடாது அவர் ஆட்சியில் நடந்த பல காரியங்கள் எந்த ஜெயா
ஆட்சியில் நடைமுறையில் கொண்டு வருவதில்லை நினைவில்கொள்வீர்

கார்மேகம்
 
அல்வா அண்ணாச்சி : உங்க தலை நிமி.... 1 பதிவிலேயே பார்த்தேன் ... ஒரு விதமான வஞ்ச புகழ்ச்சி ல சொல்லி இருந்தீங்க (கருனாநிதிக்கே சொல்லிக்கொடுத்தார், கருனாநிதி மாதிரி சேமிக்க தெரியாதவர்.. )..அந்த பதிவு அம்மா பற்றி என்றாலும்.. பல இடங்களில் கருனாநிதி தான் இருந்தார்...

கலைஞரை உங்களுக்கு சுத்தமா பிடிக்காதா????

வீ எம்
 
summy anna DMK aalunga ungala pottu thaakka poraanga
 
அய்யோடா! சாரே!., பத்துபேர் பாத்து ஓட்டுக்குத்தனுங்கறதுக்காக இப்பிடியெல்லாம் நீங்க மெனக்கெட தேவையில்ல... கருனாநிதி ஒரு அரசியல்வாதியா? ந்னு ஒரே ஒருவரி பதிவு போட்டிங்கன்னாகூட அதானேன்னு குத்தோ குத்துன்னு குத்தி பின்னுட்டமிட நிறைய பேர் இருக்காங்க., கொஞ்சம் மனசாட்சிய கேட்டுட்டு எழுதுங்க. மொழிவெறி என்னா? உங்கள தமிழ்நாட்டுல கட்டாயமா தமிழ்தான் படிக்கணும்னு சட்டம் போட்டாரா?, தமிழகத்தில் ஊழலைக் கற்றுக் கொடுத்ததை எங்கய்யா போய்ப் பாத்தீங்க?., தமிழ்நாட்டுல இருந்து லண்டண் வரைக்கும் சொத்து வச்சிருக்கிறாரா? அவரோட ஆழ்வார்பேட்டை வீட்டப்போயிப் பாருங்க!. இப்பிடி கண்டதயும் எழுதி, எழுதிதான் பாவம்.. ஒருத்தர 'அனானிமஸ் ஆக்கி' அளைய விட்டுட்டிங்க. இன்னும் எத்தனை பேர பைத்தியம் பிடிக்க வைக்கப் போறிங்களோ போங்க!
 
//தமிழகத்தில் ஊழலைக் கற்றுக் கொடுத்ததை எங்கய்யா போய்ப் பாத்தீங்க?., தமிழ்நாட்டுல இருந்து லண்டண் வரைக்கும் சொத்து வச்சிருக்கிறாரா? அவரோட ஆழ்வார்பேட்டை வீட்டப்போயிப் பாருங்க!//

அப்படிப்போடு.. இது உங்களுக்கே அநியாயமா தெரியலை?!
 
//பல நல்ல காரியம்கள் நடந்து என்பதை நினைவில் கொள்ள
வேண்டும் நன்றி இல்லாமல் எழத கூடாது அவர் ஆட்சியில் நடந்த பல காரியங்கள் எந்த ஜெயா
ஆட்சியில் நடைமுறையில் கொண்டு வருவதில்லை //
ஜெ.வின் ஆட்சியிலும் பல உதவித் திட்டங்கள் என்ற பெயரில் மக்களை எப்பவுமே ஓசியை எதிர்பார்க்கச் செய்யும் திட்டங்கள் உண்டு. அவை அடுத்து வந்த தி.மு.க. ஆட்சியில் செயல் படுத்தப்பட்டனவா என்ன?!
 
//ஏன் என்றால் இப்பொழதும் மேற்கு வங்கத்தில் இன்று கைரிக்சா உண்டு கூட (கம்யூஸ்டுக்கள்) ஆட்சி
கூட ஒழிக்கவில்லை//
கம்யூனிஸ்டுகள் தான் எதற்கெடுத்தாலும் ரஷ்யாவைப் பார், சீனாவைப் பார்ன்னு சம்பந்தமேயில்லாமல் உதார் விடுவார்கள். அதைப் போல தான் இதுவும். இந்தியாவில் எத்தகைய மாநிலங்களில் கை ரிக்ஷா இருக்கின்றன? அதற்கு எல்லாவற்றிற்கும் காரணம் மு.க. தானா?!

வெற்றி கொண்டான் (என்று நினைவு!) ஒரு கூட்டத்தில் போலீஸ்காரர்களை பார்த்து பேசினார் : "யோவ்.. அரை டவுசரோட அலைஞ்சுகிட்டிருந்த உங்களுக்கு கவுரதையா முழு பேண்ட் போட்டு விட்டது எங்க தலைவரு தான்" அப்படீன்னு. அதையும் சாதனையா சொல்லிக்கவும்!
 
//கருணாநிதி கொஞ்சம் வழவழா கொழகொழா தான், ஆனால் அம்மா அளவிற்கு அதிகார துஷ்பிரயோகம் செய்பவரில்லை. அம்மா அளவிற்கு தமிழ்நாட்டினை கீழே கொண்டு போனவருமில்லை.//
நான் தி.மு.க. காரனில்லை என்று டிஸ்க்ளெய்மர் கொடுத்ததோடு நின்றால் எப்படி? தி.மு.க. அனுதாபி இல்லை என்று கொடுக்க முடியுமா?! அப்புறம் எதற்கு டிஸ்க்ளெய்மர்?! 69-ல் லட்சங்களில் 'அடிக்க' ஆரம்பித்து வைத்ததை இன்றைய விலைவாசி நிலவரப்படி 'கோடிகளில்' அடிக்கிறார்கள். இதில் அவர் அளவுக்கு இல்லை என்பதெல்லாம் கப்ஸா. அரசியலை சாக்கடைக்கு தள்ளிச் சென்றவர்களில் முதலிடம் மு.க.விற்கு தான் என்பதை மறுப்பது முழு பூசணிக்காயை சோற்றுப்பருக்கையில் மறைக்க முயலுவதற்கு சமம். இவருக்கு அவர் பரவாயில்லை என்று நொண்டிச் சாக்கு தேவையில்லை.
 
மினி பஸ், உழவர் சந்தை இரண்டும் நல்ல திட்டங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதை பாராட்டியே தீர வேண்டும்.
 
அல்லாருக்கும் குட் மார்னிங்கு சொல்லிக்றான்பா கோபி

ஆனாக்க ஒன்னு தெர்துபா

தாத்தா பத்தி எய்துனா அல்லாரும் சவுண்ட் உட்றதப் பாத்தாக்க தாத்தா தமிளு வளத்தது உண்மியா இத்தினி பேருகிட்ட சேந்துக் கீதுன்னா பாத்துக்கோயேன் (அல்லாங்காட்டி யார்னா சும்மானாச்சுக்கு சப்போட்டா பேசுவாங்களா - அம்மாவப் பத்தி எய்துனப்ப இத்தனி பேரும் காணம்)

இன்னாடா நல்லா இர்ந்த பையன் திடீர்னு இப்டி பேசறானேன்னு பாக்காதீங்கபா. டக்குன்னு கொசப்பேட்ட குப்சாமியை நென்ச்சிக்கினேன் அத்தான் மெட்றாஸ் பாசை வந்துட்ச்சி

வர்ட்டா!
 
//ஒருத்தர 'அனானிமஸ் ஆக்கி' அளைய விட்டுட்டிங்க//

அப்படிபோடு யாரு இந்த அனானிமஸ் இப்படி கிசு கிசு பாணியில் சொன்னால் எனக்கு ஒன்றும் புரியாது.

ஆனாலும் ஒன்று 40-65 வயது கலைஞரை எனக்கு மிகவும் பிடிக்கும்
 
அடடே குழலி நான் உங்கள கொஞ்சம் சின்ன வயசு ஆளா (43தான் இருக்கும்னு) நினைச்சு இருந்தேன்... 40-65 வரைன்னு சொல்றத பாத்தா 80 தாண்டும் போலருக்கே.... ஆனா உங்க எழுத்துல இளமை இருக்கு...
 
// ஊழல் செய்திருக்கிறார். கோடி கோடியாய் சொத்துக்கள் சேர்த்திருக்கிறார் என்பதெல்லாம் சரி ஆனால், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும் உதவியிருக்கிறார். // இவர்கள் சொல்வது ஒரு கம்பெனி நடத்தி பணம் சம்பாதிக்கும், போர்டு ஆ·ப் டைரக்டர்ஸை வளைட்து ஊழல் செய்து சொத்து சேர்க்கும் தொழிலதிபரை அல்ல.... தமிழக முன்னேற்றம் மட்டுமே (முன்னேற்றத்துக்கும் இல்லைய்யா... முழிச்சு பாருங்க) தன் மூச்சுன்னு பொய் சொல்ற ஒரு பொ***க்கு அரசியல்வாதியை... ஜெயலலிதாவும் பொ****குதான், ஆனா 30 வருசமா மூச்சு மட்டும் விட்டுகிட்டு இருக்கற ஆள் இல்ல... ஒரு பிச்சகாரன் தட்டுல 30 வருசமா 1 ரூபாய் போட்டுகிட்டே வறீங்கன்னு வையுங்க, அவன் 50 பைசா பிச்சை வாங்குற பிச்சைகாரன விட நாம பெரிய ஆள்னு நினைச்சு, குறைவா பிச்சை போடுற ஆள திட்டி காலத்த கழிச்சுக்குவான்.... தான் பணக்காரன் ஆவனும்னு தோணாது... அதேதான் தமிழ்நாட்டு மக்கள் மனநிலையும்.... சிங்கப்பூரின் லீ க்வான் யூ வின் ஆளுமையில 10ல ஒரு பங்கு இருந்திருந்தா, ஒவ்வொரு அடுத்த தேர்தல்லயும் மக்கள் தோக்கடிக்க மாட்டாங்க, தமிழ்நாடு இப்படி இருந்திருக்காது, நாமும் இப்படி பேசிகிட்டு இருந்திருக்க மாட்டோம்.... இன்னும் கருணாநிதி பரவாயில்லையின்னு பேசிகிட்டு.... போய் வேவைய பாருங்கய்யா...
 
// //தமிழகத்தில் ஊழலைக் கற்றுக் கொடுத்ததை எங்கய்யா போய்ப் பாத்தீங்க?., // பரவாயில்லயே பசங்க 4 வயசுல எல்லாம் பின்னூட்டம் விட கத்துகிச்சிங்க... இதயும் கருணாநிதி சாதனையில சேத்துகுங்க
 
அல்வா, இனிமே வாக்கிங் போவாதய்யா
 
//எ.கா. புருசன் கூட படுக்.... மட்டும் நல்லா இருந்துச்சி இப்ப ஏண்டி இப்படி கத்துற?// நம்மூரில் இப்படியும் திட்டி வாழ்ந்து(?) கொண்டிருக்கும் மனிதர்களை நினைத்துப் பார்க்கிறேன், ம்...
 
பின்னூட்டமிட்ட எல்லாத்துக்கும் நன்றி.

விளக்கத்தோட சீக்கிரம் வாரேன் (கொஞம் வேலை)
 
//5. மொழி வெறியை தமிழகத்தில் கொண்டுவந்த பெருமை.//
நெத்தியடி!
 
முகத்தை மூடிகிட்டு இருக்கிற அண்ணாத்த, சிங்கப்பூர்ல 'லி' தப்பே பண்ணலன்னு எம்பூட்டு தீர்மானமா சொல்றிங்க?. அவரும் ஊழல் பண்ணுனவர்தான் அதற்கு முன்னால சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் வித்திட்டவர். நம்ம, ஏதோ ஒரு ஊர்ல இறுக்குற அரசியல் தலைவன ஆளுமையான ஆளு., அப்பிடி, இப்பிடின்னு., அந்தாளப் பத்தி ஒண்ணு தெரிஞ்சாக்கூட ஒன்பத நாமளா கற்பனை பண்ணி புலாங்கிதப் பட்டுக்கிறது. சோறு தண்ணி இல்லாமக் கூட அற்புதமா எத்தனையோ அடக்குமுறையையும் தாண்டி ஆயிரம் பேரு அருமையா நம்ம ஊர்ல எழுதிக்கிட்டு இருந்தாலும்.,ம்.. இதெல்லாம் என்ன? எனக்கு பிரஞ்சு, லாத்தீன் அமெரிக்கன் அப்புறம் ரஷ்ய இலக்கியம் இதுக்கெல்லாம் முன்னாடி, தமிழ் நாட்டுல எழுதுறவங்கல்லாம் என்னாத்த எழுதுறாங்க?., இப்பிடி அடுத்தவன நினைச்சேதான் நாம நாசமாப் போறது. தி.மு.க ஆட்சியில்தான் ஊழல் ஆரம்பம் என்று நான் மாயவரத்தானுக்கு (வேற ஒருத்தர் பதிவுல) பின்னூட்டமிட்டிருந்தேன்., மதுரை முத்து போன்றவர்கள் கட்சியில் ஆடிக்கொண்டிருந்த சமயம், ஊழலும் ஆரம்பித்தது என்னவோ உண்மைதான்., ஆனால் அவங்க துண்டுக்கு அடியில தெரியாம வாங்கிட்டு இருந்தத., பகிங்கரமா சாக்குப் பய்ய சந்தையில வச்சு எல்லாரையும் கொட்டச் சொன்னது யார் தெரியுமா?., அதுசரி., 'பால்' 'சர்க்காரியா' வல்லாம் பத்திரிக்கையில படிச்சுட்டுத்தான இம்புட்டு சத்தம் போடுறிக?., நேரடியா பாதிக்கப் பட்டுருக்கிங்களா?. உங்க சொந்தக்காரங்க யாரவது பாதிக்கப் பட்டுயிருக்கங்களா?., ஒரு பாலம் 'டென்டர்'எடுத்து தரேன்னு சொன்னத நம்பி லட்சக்கணக்குல பணம் கொடுத்து, கடைசில பாலமுமில்லாம, பணத்த திரும்பி கேட்கப் போகும்போதெல்லாம்., அமைச்சருக்கு 'தாஜ்'ல தங்குனதுக்கு 'பில்' கட்டி பட்டுயிருக்கிங்களா?., யார்க்கு 4 வயசு?...ம்?. இங்க பாருங்க சாமி., காகிதத்த படிச்சுட்டு பேசுறிங்க எல்லாரும்., அரசியல்வாதிகளை குடும்பத்தோட உக்கார்ந்து படிச்சவங்க நாங்க. ஓரளவுநிலம், நீச்சோட இருந்த எங்களுக்கே., எந்திரிக்க எத்தனை வருசமாச்சு., அப்பாவி மக்கள் கதி?. போங்கய்யா!!.
 
//கவுரவ முனைவர் பட்டம் பொறுத்தமானது, கவுரவ மருத்துவர் பட்டமல்ல... //
ஏற்கனவே முத்து அண்ணாச்சி ஒரு தடவ சொன்னாரு மாத்தாததுக்கு மன்னிக்கவும்.

//கருணாநிதியினை இந்த கூட்டத்தில் சேர்க்க முடியுமா என்றால் என்னால் முழுமையாக ஒத்துக் கொள்ள முடியவில்லை. கொஞ்சம் வேறுபாடுகள் இருக்கின்றன. //

கண்டிப்பாக இந்த கூட்டத்தில் சேர்க்கப்பட வேண்டியவரே. அதில் ஐயமில்லை. ஆனால் நான் கொஞ்சம் அதிகமாக வசைபாடியிருக்கலாம். அது அபிப்பிராய பேதத்தில் வந்தது.

//ஊழல் செய்திருக்கிறார். கோடி கோடியாய் சொத்துக்கள் சேர்த்திருக்கிறார் என்பதெல்லாம் சரி. ஆனால், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும் உதவியிருக்கிறார். ஹுண்டாயும், டைடல் பார்க்கும், போர்டு தொழிற்சாலையும், சென்னையெங்கும் மேம்பாலங்களும் கட்டியது அவர் ஆட்சியில்தான். //

ஹுண்டாய், போர்டு இதில் முரசொலி மாறனின் அல்லது கருணாநிதி சார்ந்தவர்களின் பங்குகள்(shares) உள்ளன என்பதை விடமுடியுமா? மேலும் தமிழகத்தில் உள்ள சிமெட் ஆலைகளில் அவர்களின் பங்குகளும் இதுவரை யாராலும் முழுமையாக அலசப்படவில்லையென்றாலும் உண்மையில்லை என்று கூற முடியாது.

//தவறே செய்யவில்லை என்று நான் சொல்லவரவில்லை. ஆனால், கருணாநிதி அம்மா அளவிற்கு இல்லை. கொஞ்சம் கஞ்சம். சொத்தெல்லாம், தன் குடும்பத்திற்கே வேண்டுமெங்கிற அதிபேராசையுடையவர்.//

அம்மா அல்லது கருணாநிதி இரண்டு பேரும் ஊழல்வாதிகள்தான். ஒருதர் மாட்டிக்கிட்டார் மற்றொருவர் மாட்டாமல் செய்துகொண்டே இருக்கிறார் (புத்திசாலித்தனமாக) அதான் கூடுதல் கோவம்.

//கருணாநிதி கொஞ்சம் வழவழா கொழகொழா தான், ஆனால் அம்மா அளவிற்கு அதிகார துஷ்பிரயோகம் செய்பவரில்லை. அம்மா அளவிற்கு தமிழ்நாட்டினை கீழே கொண்டு போனவருமில்லை. //

அம்மாவின் இந்த ஆட்சி ஓரளவு ஒழுங்காக சென்றதாக என் அபிப்பிராயம் (முந்தைய ஆட்சியைவிட). கருணாநிதியும் அவ்வாறே. சென்ற முறை தன் மகனை அரியணை ஏற்றிவிடவேண்டும் என்ற கனவில் இருந்தார், அதை அம்மா உடைத்தார் ஒரு 5 வருடம் காத்திருக்க வைத்திருக்கிறார். இம்முறை பார்க்கலாம்.

//ப்ரியன் said...
திட்டுனது எல்லாம் ஓகே.யாரும் ஒழுக்கம் இல்லைதான்.அரசியல் நலத்திட்டங்களில் 1.உழவர் சந்தை(அருமையான திட்டம் அம்மாவந்து அழிச்சுபுட்டாங்க)
2.மினி பஸ்(இதையும்தான் அழிக்கப் பாத்தாங்க ஆனா முடியலே இப்போ சென்னைலையும் மினி பஸ் விடுராங்கலாம்) திட்டங்களை சொல்லாமல் விட்டது தெரிதா?தெரியாமலா? //

ஐயா தெரியாமல்தான் விட்டுவிட்டேன். ஆனால் தெரிந்திருந்தாலும் இதை நான் இப்பதிவில் சொல்லியிருக்க மாட்டேன். சென்ற பதிவில் கூட அம்மாவின் நல்ல செயல்களை நா கூறவில்லை. அது தலைப்பிற்கு பொருத்தமில்லாமல் இருக்கும் என்பது என் அபிப்பிராயம். அடுத்த பதிவில் நன்மைகளையும் குறிப்பிடுகிறேன்.
உண்மையாக உழவர் சந்தையும், சிறிய பேருந்து திட்டமும் விவசாயிகளுக்கும், கிராமத்தினர்க்கும் வரபிரசாதம் தான். ஆனால் உழவர் சந்தையில் சிறு தவறுகள் நடந்தாலும் அது அம்மா ஆட்சியில் ஈகோ காரணமாக மூடப்பட்டது வருத்தமே.

//Chandhiran said...
அரசு எப்பொழது சில சலுகைகள் மக்களுக்கு அளிக்கும் அதை குறைக்சொல்ல கூடாது
தயவுச்செய்து நடுநிலைமையுடன் சிந்தனை செய்யுங்கள்

karmegam said...
தமிழகத்தில் மட்டுமல்லா உலகத்தில் எல்லா நாடுகளின் வாரிசு அரசியல் உண்டு உலகத்தை பார்க்க !!! தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியில் தன் பல நல்ல காரியம்கள் நடந்து என்பதை நினைவில் கொள்ள வேண்டும் நன்றி இல்லாமல் எழத கூடாது அவர் ஆட்சியில் நடந்த பல காரியங்கள் எந்த ஜெயா ஆட்சியில் நடைமுறையில் கொண்டு வருவதில்லை நினைவில்கொள்வீர்
//

ஐயா நான் நடுநிலைமையுடன் தான் இப்பதிவை எழுதினேன். அதாவது நான் எந்த கட்சியையும் ஆதரிப்பவனில்லை. ஆனால் சென்ற அம்மாவின் பதிவில் கூட அவரது தீய செயல்களைதான் பட்டியலிட்டேன்.

மேலும் இதில் நன்றி என்ற வார்த்தை ஏன் வருகிறது? அரசாள வருபவர்கள் தன் கடமையை மக்களுக்கு செய்யவருகிறார்கள். அவர்கள் தம் கடமையை செய்யும் போது நம்மிடம் நன்றியை எதிர்பார்பதன் அர்த்தமென்ன? உண்மையை சொல்வதென்றால் அவர்கள்தான் நம்மிடம் நன்றியை காட்டவேண்டும். நம் வரிப்பணத்தில் தான் அவர்கள் வாழ்க்கை ஓடுகிறது. அவர்கள் அனுபவிக்கும் மற்ற வசதிகளையும் சேர்த்துத்தான். அதனால் மக்கள் நன்றியுடன் இருக்கவேண்டுமென செல்லாதீர்கள்.

//வீ. எம் said...
அல்வா அண்ணாச்சி : உங்க தலை நிமி.... 1 பதிவிலேயே பார்த்தேன் ... ஒரு விதமான வஞ்ச புகழ்ச்சி ல சொல்லி இருந்தீங்க (கருனாநிதிக்கே சொல்லிக்கொடுத்தார், கருனாநிதி மாதிரி சேமிக்க தெரியாதவர்.. )..அந்த பதிவு அம்மா பற்றி என்றாலும்.. பல இடங்களில் கருனாநிதி தான் இருந்தார்... கலைஞரை உங்களுக்கு சுத்தமா பிடிக்காதா???? //

கலைஞர் மற்றும் எம்.ஜி.ஆரை முன்னுதாரணமாக எடுத்துத்தானே அம்மா தன் ஆட்சியை(?) செய்கிறார். கலைஞரை எனக்கு பிடிகாதென்று இல்லை. அவரது நையாண்டி பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் வர வர பிடிக்கவில்லை. அவரது முந்தைய ஆட்சிக்கிப்பின் அவர் திரும்ப வந்தால் கொஞ்சம் நன்றாக இருக்குமென நினைத்தது உண்மை.


//முகமூடி said...
இவர்கள் சொல்வது ஒரு கம்பெனி நடத்தி பணம் சம்பாதிக்கும், போர்டு ஆ·ப் டைரக்டர்ஸை வளைட்து ஊழல் செய்து சொத்து சேர்க்கும் தொழிலதிபரை அல்ல.... தமிழக முன்னேற்றம் மட்டுமே (முன்னேற்றத்துக்கும் இல்லைய்யா... முழிச்சு பாருங்க) தன் மூச்சுன்னு பொய் சொல்ற ஒரு பொ***க்கு அரசியல்வாதியை... ஜெயலலிதாவும் பொ****குதான், ஆனா 30 வருசமா மூச்சு மட்டும் விட்டுகிட்டு இருக்கற ஆள் இல்ல... ஒரு பிச்சகாரன் தட்டுல 30 வருசமா 1 ரூபாய் போட்டுகிட்டே வறீங்கன்னு வையுங்க, அவன் 50 பைசா பிச்சை வாங்குற பிச்சைகாரன விட நாம பெரிய ஆள்னு நினைச்சு, குறைவா பிச்சை போடுற ஆள திட்டி காலத்த கழிச்சுக்குவான்.... தான் பணக்காரன் ஆவனும்னு தோணாது... அதேதான் தமிழ்நாட்டு மக்கள் மனநிலையும்.... சிங்கப்பூரின் லீ க்வான் யூ வின் ஆளுமையில 10ல ஒரு பங்கு இருந்திருந்தா, ஒவ்வொரு அடுத்த தேர்தல்லயும் மக்கள் தோக்கடிக்க மாட்டாங்க, தமிழ்நாடு இப்படி இருந்திருக்காது, நாமும் இப்படி பேசிகிட்டு இருந்திருக்க மாட்டோம்.... இன்னும் கருணாநிதி பரவாயில்லையின்னு பேசிகிட்டு.... போய் வேவைய பாருங்கய்யா...

அல்வா, இனிமே வாக்கிங் போவாதய்யா
//

அண்ணாச்சி சரியா சொன்னீங்க.

ஊருக்கு வந்தா வாக்கிங் (பழக்கமில்லை,மற்றும் வயசும் போதாது) அல்லது கடைக்கு போறத பத்தி யோசிக்கனும்.

//இராதாகிருஷ்ணன் said...
"எ.கா. புருசன் கூட படுக்.... மட்டும் நல்லா இருந்துச்சி இப்ப ஏண்டி இப்படி கத்துற?" நம்மூரில் இப்படியும் திட்டி வாழ்ந்து(?) கொண்டிருக்கும் மனிதர்களை நினைத்துப் பார்க்கிறேன், ம்... //

அண்ணாச்சி அதில் ஒரு வார்த்தை கூட அதிகமில்லை. அத்தனையும் உண்மை. இதுதான் அரசாங்க ஊழியர்களின் மிதப்பு. மற்றவர்களை மனுசர்களாக கூட மதிப்பதில்லை.


//APDIPODU said...
அய்யோடா! சாரே!., பத்துபேர் பாத்து ஓட்டுக்குத்தனுங்கறதுக்காக இப்பிடியெல்லாம் நீங்க மெனக்கெட தேவையில்ல... கருனாநிதி ஒரு அரசியல்வாதியா? ந்னு ஒரே ஒருவரி பதிவு போட்டிங்கன்னாகூட அதானேன்னு குத்தோ குத்துன்னு குத்தி பின்னுட்டமிட நிறைய பேர் இருக்காங்க., கொஞ்சம் மனசாட்சிய கேட்டுட்டு எழுதுங்க. மொழிவெறி என்னா? உங்கள தமிழ்நாட்டுல கட்டாயமா தமிழ்தான் படிக்கணும்னு சட்டம் போட்டாரா?, தமிழகத்தில் ஊழலைக் கற்றுக் கொடுத்ததை எங்கய்யா போய்ப் பாத்தீங்க?., தமிழ்நாட்டுல இருந்து லண்டண் வரைக்கும் சொத்து வச்சிருக்கிறாரா? அவரோட ஆழ்வார்பேட்டை வீட்டப்போயிப் பாருங்க!. இப்பிடி கண்டதயும் எழுதி, எழுதிதான் பாவம்.. ஒருத்தர 'அனானிமஸ் ஆக்கி' அளைய விட்டுட்டிங்க. இன்னும் எத்தனை பேர பைத்தியம் பிடிக்க வைக்கப் போறிங்களோ போங்க!

முகத்தை மூடிகிட்டு இருக்கிற அண்ணாத்த, சிங்கப்பூர்ல 'லி' தப்பே பண்ணலன்னு எம்பூட்டு தீர்மானமா சொல்றிங்க?. அவரும் ஊழல் பண்ணுனவர்தான் அதற்கு முன்னால சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் வித்திட்டவர். இப்பிடி அடுத்தவன நினைச்சேதான் நாம நாசமாப் போறது. தி.மு.க ஆட்சியில்தான் ஊழல் ஆரம்பம் என்று நான் மாயவரத்தானுக்கு (வேற ஒருத்தர் பதிவுல) பின்னூட்டமிட்டிருந்தேன்., மதுரை முத்து போன்றவர்கள் கட்சியில் ஆடிக்கொண்டிருந்த சமயம், ஊழலும் ஆரம்பித்தது என்னவோ உண்மைதான்., ஆனால் அவங்க துண்டுக்கு அடியில தெரியாம வாங்கிட்டு இருந்தத., பகிங்கரமா சாக்குப் பய்ய சந்தையில வச்சு எல்லாரையும் கொட்டச் சொன்னது யார் தெரியுமா?., அதுசரி., 'பால்' 'சர்க்காரியா' வல்லாம் பத்திரிக்கையில படிச்சுட்டுத்தான இம்புட்டு சத்தம் போடுறிக?., நேரடியா பாதிக்கப் பட்டுருக்கிங்களா?. உங்க சொந்தக்காரங்க யாரவது பாதிக்கப் பட்டுயிருக்கங்களா?., ஒரு பாலம் 'டென்டர்'எடுத்து தரேன்னு சொன்னத நம்பி லட்சக்கணக்குல பணம் கொடுத்து, கடைசில பாலமுமில்லாம, பணத்த திரும்பி கேட்கப் போகும்போதெல்லாம்., அமைச்சருக்கு 'தாஜ்'ல தங்குனதுக்கு 'பில்' கட்டி பட்டுயிருக்கிங்களா?., யார்க்கு 4 வயசு?...ம்?. இங்க பாருங்க சாமி., காகிதத்த படிச்சுட்டு பேசுறிங்க எல்லாரும்., அரசியல்வாதிகளை குடும்பத்தோட உக்கார்ந்து படிச்சவங்க நாங்க. ஓரளவுநிலம், நீச்சோட இருந்த எங்களுக்கே., எந்திரிக்க எத்தனை வருசமாச்சு., அப்பாவி மக்கள் கதி?. போங்கய்யா!!.
//

அப்படிபோடு அண்ணாச்சி,

பின்னூட்டம் வரனும்னு நாங்க (நண்பர்களையும் சேத்து) எழுதுரதில்லை. அப்படி ஓட்டு வேணும் அல்லது பின்னூட்டம் வேணும்-னு ஒரு வார்த்தை சொன்னா அதுகுன்னு உதவிபண்ண நண்பர்கள் இருக்காங்க (இட்லி கேட்டதுக்கு நாங்களும் நண்பர்களும் போட்ட ஓட்டே சாட்சி).

நீங்க கோவத்துல நெறைய சொல்லீட்டீங்க.

தமிழ் நாட்டுல தமிழ் மட்டும்தான் படிக்கனும்-னு சொன்னா அடுத்து ஓட்டு போடுறது யாரு? அதில்லை அண்ணாச்சி, இந்தியாவில் உள்ள ஒரு மொழி (இந்தி) படிக்கக்கூடாதாம் ஆனா அயல்நாட்டு மொழிய (ஆங்கிலம்) படிச்சா தப்பில்லையாம்? அப்ப எதுக்கையா ஆங்கிலேயனை வெளிய போகச்சொன்னீங்க? ஆனா இன்னைகு வரைக்கும் மும்பை, தில்லி மற்றும் பல பெரிய நகரங்களில் மற்ற மாநிலத்தவரை விட தமிழர்கள்தான் அதிகம் பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்ப இப்படி மற்ற மாநிலங்களில் வாழ்பவர்கள் இந்தி தெரியாமல் அங்க போய் பொழப்பு நடத்த முடியுமா?

உள்ளூர்ல உள்ள சொத்தே போதாதா இதுல லண்டன் வரைக்கும் சொத்து சேக்கனுமா? ஏன் அண்ணாச்சி ஒரு வீட்ட உதாரணம் காட்டி அவர எடபோடமுடியுமா?

சிங்கப்பூர் லீ தப்பே பண்ணலை-னு முகமூடி சொல்லவேயில்லையே. அவர் செஞ்சதுல 1% செஞ்சாலும் நம்ம ஆளு விடாம 20 வருசம் ஆட்சி செஞ்சிருக்கலாம்-னு சொன்னாரு. இதனால் அறிவது என்ன? லீ தான் சொத்து சேத்தாலும் சிங்கப்பூர எங்க கொண்டுவந்து விட்டு இருக்காரு? நம்ம ஊரு?

ஊழல் செய்ய ஆரம்பிச்சாங்க-னு ஒத்துகிட்டீங்க. ஆனா அதுக்கு அப்புறம் சொன்னது ஒன்னும் புரியலை.

சரி மறுபடியும் வந்துபாத எல்லாருக்கும் மற்றும் பின்னூட்டமிட்ட எல்லாத்துக்கும் நன்றி.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->